முதல் கட்ட முதலீடு திரட்டலின்போது நான் கற்றுக்கொண்ட 8 பாடங்கள்!
“ஹாய், இன்னும் அந்த சலுகை என் டேபிளில்தான் இருக்கிறதா, என எனக்குத் தெரியப்படுத்துங்கள்”. நடுங்கும் கைகளோடு அந்த செய்தியை அனுப்பிவிட்டு போனை கீழே போட்டுவிட்டு லேப்டாப் பக்கம் திரும்பினேன்.
முதலீட்டாளர்களின் பக்கம் இருக்கும் விருப்பத்தில் மாற்றம் இருப்பதைத் தெரிந்துகொண்டாலும், முதலீட்டாளர் பதில் அளிக்கப்போவதில்லை என்று நான் நம்பினேன், அது மிகவும் வலிமிகுந்ததாக இருந்தது. மிக ஆழமாக, ஒரு அதிசயம் நிகழந்துவிடாதா என நம்பிக்கொண்டிருந்தேன். ஃபேஸ்புக் பதிவுகளை நான் பார்த்துக்கொண்டிருந்தாலும் என் கவனம் என்னவோ போனில்தான் இருந்தது.
பதில் இல்லை. என்னுடைய செய்தி வரிசையில், ‘இரண்டு ஐஐடி மும்பை மாணவர்கள் Y முதலீட்டாளரிடமிருந்து X மில்லியன் டாலர் திரட்டியிருக்கிறது’ மற்றும் ‘மூன்று ஐஐடி மாணவர்கள் மற்றொரு முதலீட்டாளரிடம் இருந்து அடுத்தகட்ட முதலீட்டைப் பெற்றிருக்கிறார்கள்’ என்பதுடன் யுவர்ஸ்டோரி மற்றும் ஐஎன்சி42 இன் பதிவுகள் நிரப்பப்பட்டிருந்தன.
எல்லாவற்றையும் கவனித்தேன், ஏன் என்னை ஒருத்தரும் ஐஐடியில் சேருவதற்கு வலியுறுத்தவில்லை என்று என்னையே கேட்கத் தொடங்கியிருந்தேன்.
*டிங்ங்ங்...*, நான் அந்த செய்தியைப் படிக்கும்போது எப்படியோ என்னைச் சுற்றியிருந்த எல்லாமும் மிக அமைதி நிலைக்குச் சென்றுவிட்டன.
“இதில் சிக்கல் அதிகரித்துள்ளதாக நாங்கள் நினைக்கிறோம். இதை இனிமேல் தொடரக்கூடாது என நாங்கள் தீர்மானித்துவிட்டோம்” என முதலீட்டாளர் பதிலளித்தார்.
தற்போது நாங்கள் நிறைய பிரச்சனைகளோடு இருந்தோம். பேச்சுவார்த்தைகள் கடந்த இரு மாதங்களாக நடந்துகொண்டிருந்தன. எல்லாமும் முடிவு செய்யப்பட்டுவிட்டது. முதலீட்டாளரிடம் இருந்து ஒப்புதல் கிடைத்திருந்தது, சந்தைப்படுத்தலுக்கான திட்டம் தயார், புதிய ஊழியர்களை வேலைக்கு அமர்த்தினோம், முன்பே பெரிய அளவில் டி சர்ட்டுகளுக்கு ஆர்டர் கொடுத்தாயிற்று. ஒன்று மட்டும் தேவையாக இருந்தது, அதாவது முதலீட்டுத் தொகை. அதற்கான பாதையில் நாங்கள் இருந்தோம். ஆனால் கடைசி நேரத்தில் திடீரென முதலீட்டாளர் விலகிக்கொண்டதால் நாங்கள் முழுவதுமாக குலைந்துபோனோம்.
அடுத்த 30 நிமிடங்களில் ஒவ்வொருவருக்கும் நாங்கள் மெசேஜ் அனுப்பிக்கொண்டிருந்தோம். கடைசி நேர மாற்றத்துக்கான காரணத்தை அறிய விரும்பினோம். ஆனால் எந்த தகவலும் வரவில்லை. ஏறக்குறைய கண்ணீர்தான், இந்த கடைசிச் செய்தியோடு எங்களுடைய பேச்சுவார்த்தை முடிந்தது: “இந்த திடீர் மாற்றம் பற்றி புரிந்துகொள்ளமுடியவில்லை. ஆனால் நாங்கள் நீங்கள் அளித்த ஒப்புதலின் பேரில் பல திட்டங்களை வைத்திருந்தோம். உங்களுடைய மனதை மாற்றிக்கொள்ள நான் வற்புறுத்தவில்லை. ஆனால் இதை சொல்ல விரும்புகிறேன்: என் திறமையின் மீது நம்பிக்கையுடன் இருக்கிறேன். இந்தியாவிலேயே கூலஸ்ட்டு டி-சர்ட் பிராண்ட்டை நான் உருவாக்குவேன். முதலீட்டுடன் அதை விரைவில் சாதிப்பேன். முதலீடு இல்லையென்றால், கொஞ்சம் நேரம் பிடிக்கும். ஆனால் அது நிச்சயம் நடந்துவிடும். உங்களுடைய முயற்சிகளுக்கு வாழ்த்துகள்”.
நாங்கள் கோபமும் ஏமாற்றமும் அடைந்தோம் என்று சொல்லத் தேவையில்லை. முதலீட்டை அடிப்படையாக வைத்து சில திட்டங்கள் வைத்திருந்தோம். பேரடைஸ் ரெஸ்டாரண்டில் உட்கார்ந்தபடி, சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டுக்கொண்டே நானும் என்னுடைய பங்குதாரரும் என்ன தவறு நடந்தது என்று மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருந்தோம். அவற்றை எதிர்காலத்தில் தவிர்ப்பது எப்படி என்று விவாதித்தோம்.
முதல்கட்ட நிதி திரட்டலின்போது நாங்கள் கற்றுக்கொண்ட பாடங்கள் இதோ:
1. உண்மையில் உங்களுக்கு ஒரு முதலீட்டாளர் தேவைப்படுகிறாரா?
உங்களுடைய இறுதியான குறிக்கோள் என்ன என்பது பற்றி யோசியுங்கள். கண்ணியமான அளவுக்கு ஒரு கம்பெனியை நடத்தி உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு போதுமான லாபம் சம்பாதிப்பதில் மகிழ்ச்சி அடைவீர்களா? முதலீடு திரட்டத் தேவையில்லை. ஏனெனில் எல்லோருமே அதைத்தான் செய்கிறார்கள். நீங்கள் சொந்தமாக முதலீட்டைத் திரட்டமுடியாதபோது, உங்களுடைய இலட்சியத்தைப் பாதிப்பது முதலீடு பற்றாக்குறைதான் என்று நினைத்தால், முதலீட்டாளரைத் தேடுங்கள்.
2. முதலீடு திரட்டல் என்பது தனியான செயல்பாடு அல்ல!
நீங்கள் வணிகத்தில் தாக்குப்பிடித்துவிட்டீர்கள் என்றால், முதலீடு திரட்டுவதில் கவனம் செலுத்துவீர்கள், நடக்கும் வணிகத்தில் கவனம் இழப்பீர்கள். முதலீடு திரட்டுவது வணிகத்துக்குப் பயன்படும் உங்களது சக்தியையும் நேரத்தையும் எடுத்துக்கொள்ளும். இணை நிறுவனருக்கு மேலும் ஒருவர் இருந்தால், அவரை முதலீடு திரட்டுவதற்கும், மற்றவரை நடப்பு வணிகத்திலும் கவனம் செலுத்தவைக்கலாம். முதலீடு கிடைக்கலாம் கிடைக்காமல் போகலாம் ஆனால் நிலையான வணிகத்தை நடத்தி போட்டியில் இருக்கவேண்டும்.
3. சம்மதம் சொல்வதற்கு முன் திருமண ஏற்பாடு வேண்டாம்
முதலீட்டாளரிடம் இருந்து ஒப்புதல் நமக்கு கிடைத்துவிட்டால், மற்ற முதலீடு திரட்டும் பணிகளை நிறுத்திவிடுங்கள். நம்முடைய நேரத்தைப் பயன்படுத்தி முதலீட்டை எப்படி வணிகத்தின் வளர்சிக்குப் பயன்படுத்திக்கொள்வது என்று யோசியுங்கள். தினமும் வரும் ஆர்டர்கள் சற்று குறைந்தாலும், அதைப் பற்றி அதிகம் கவலைப்படாமல், முதலீடு வந்துவிடும் என்பதை நினைத்து, வேகமான மார்க்கெட்டிங் செய்ய ஆரம்பித்து சமாளித்துவிடமுடியும். இது தவறு. சிலநேரங்களில் எதிர்விளைவாகிவிடும். முதலீட்டாளர் பின்வாங்கினால் சரிவை சந்திப்பதோடு, ஏகப்பட்ட கடனில் மூழ்கிவிடுவோம்.
4. என்னுடையது என்னவோ அது நம்முடையது அல்ல
முதலீட்டாளர்கள் உங்களுடன் முழுமையாக இணையாதவரை, உங்களுடைய நிறுவனம், திட்டங்கள், வளர்ச்சிக்கான உத்திகள் என ஒவ்வொரு சிறு தகவலையும் அவர்களுடன் பகிர்ந்துகொள்ளாதீர்கள். அவர்கள் ஒப்புதலை வைத்தே நீங்கள் விளையாடவேண்டும். நம்முடைய முக்கியமான போட்டியாளர்கள் யார், அவர்களை சமாளிக்க எவ்வளவு பணம் தேவைப்படும் என்று அவர்களிடம் கூறுவோம். இது சில நேரம் நமக்கு எதிராகக் கூட மாறிவிடும்.
5. உங்களுடன் குழந்தைகள் பெற்றுக்கொள்வார்களா?
மோதிரத்தை விரலில் மாட்டுவதற்கு முன், உங்கள் சபதங்களைக் கூறுங்கள். நீங்கள் குழந்தைகளைப் பெறுவதற்கு விருப்பமாக இருந்தால், ஏற்புடைய கேள்விகளைக் கேட்பது முக்கியமானது. நான் சொல்லவருவது, நீங்களும் உங்களுடைய முதலீட்டாளரும் ஒரே வெளியேறும் உத்தியை ஒப்புக்கொள்கிறீர்களா என்பது முக்கியமான யோசிக்கவேண்டியது.
எதிர்காலத்தில், நல்ல விலை வரும்போது நிறுவனத்தை முதலீட்டாளர் விற்க விரும்புகிறார், நீங்கள் அதை உங்களிடம் வைத்துக்கொள்ள நினைக்கிறீர்கள், அப்போது நிலைமை குழப்பமடையும். எந்த வெளியேறும் திட்டத்தை முதலீட்டாளர் வைத்திருக்கிறார் என்பதை வெளிப்படையாகப் பேசுவது நல்லது.
6. இது முழுவதும் பணம், தேன் பற்றியது
முதலீட்டைத் திரட்டுவதும் முதலீட்டாளர்களை வைத்துக்கொள்வதும் உயர்ந்ததுதான். ஆனால் அதுவொரு வணிக ஒப்பந்தம். முதலீட்டாளர்கள் திரும்பவும் உயர்வாக எதிர்பார்ப்பார்கள், நீங்கள் விரைவான வளர்ச்சியை எதிர்பார்ப்பீர்கள். நீங்கள் திருமணம் செய்துகொண்டது நல்ல பார்ட்டனரையா அல்லது செக் புக்கையா என்பதை பரிசோதனை செய்துகொள்ளுங்கள். ஒப்பந்தம் ரத்தானபோது நான் சீற்றம் கொண்டேன். ஆனால், அதுவொரு வணிக ஒப்பந்தம்தான் என எனக்குள் நானே சொல்லிக்கொண்டேன்.
அவர்கள் சில சிக்கல்களை பார்த்திருப்பார்கள். அவர்கள் சிறப்பான ஒன்றைப் பார்த்ததும் மனதை மாற்றிக்கொண்டிருப்பார்கள். யாரையும் குற்றம் சொல்லமுடியாது. நிலையான வளர்ச்சியை வணிகத்தில் உருவாக்குவது மிக முக்கியமானது. ஒருவேளை முதலீட்டு முயற்சிகள் தோல்வி அடைந்தாலும் நீங்கள் கீழே விழமாட்டீர்கள்.
7. முடியாதவரை அது முடியாது
மற்ற வாய்ப்புகளைப் பெறாமல் நாம் ஒரு தவறை செய்துவிடுவோம். நாம் ஒரு முதலீட்டைப் பெற்றதும், இதுதான் கடைசி, வேறு யாரையும் எதிர்பார்க்காதீர்கள் என்று முதலீட்டாளர் நம்மிடம் சொல்வார். அப்படி யாராவது முதலீடு செய்ய முன்வந்தால், அதை நாம் மறுத்துவிடுவோம்.
8. இது முடிவல்ல
அது நடக்கும்போது நாம் கீழே போய்விடுவோம். நாம் நிறுவனத்தை விற்பதற்கு தூண்டுவார்கள். நாம் அதை செய்யமாட்டோம். முதலீட்டு முயற்சிகள் வெற்றிபெறவில்லையா? அது ஒரு பிரச்சனை அல்ல. முதலீடு திரட்டுவதற்காக நீங்கள் நிறுவனம் தொடங்கவில்லை என்பதை நினைத்துப்பாருங்கள். வணிகத்தை வளர்க்க, முதலீடு திரட்டுவதல் ஒரு செயல்பாடு. அது சிறிய தொழிலாக இருந்தாலும், நிலையான வளர்ச்சியை லாபத்தைப் பெற முயற்சி செய்யுங்கள்.
இறுதியாக, நான் கற்றுக்கொண்டது இதுதான். முதலீடு திரட்டுதல் என்பது தொழிலின் இதயம் அல்ல. அது ஒரு பகுதி.
ஆங்கில கட்டுரையாளர்: முபேய்து சையது, ShipNinja இணை நிறுவனர்.