இனி ‘ஃபேர்’ இல்லை, ‘லவ்லி’ மட்டுமே உங்கள் முகப் பொலிவுக்கு...

பிரபல HUL நிறுவனம் இனவாதத்துக்கு எதிரான முயற்சியில், தங்களின் ப்ராண்டில் மாற்றங்களைக் கொண்டுவர 'Fair & Lovely'ல் இருந்து Fair வார்த்தையை நீக்கியுள்ளது.

26th Jun 2020
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

எஃப்எம்சிஜி பிரபல நிறுவனமான ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம், தங்களது பிரபல ப்ராண்டான ‘Fair & Lovely'ல் இருந்து 'Fair' என்ற வார்த்தையை நீக்குவதாகவும், தங்களின் ரீப்ராண்டிங்கின் முயற்சியின் முடிவு இது என்று அறிவித்துள்ளது.


உலகமெங்கும் இனவாதம், நிறவேறுபாட்டுக்கு எதிரான பிரச்சாரங்கள் வலுப்பெற்று வரும் இவ்வேளையில் இந்த முடிவு வந்துள்ளது. அமெரிக்காவில் கருப்பினத்தவரான ஜார்ஜ் ப்ளாயிட் என்பவரை அமெரிக்க போலீசார் கொன்றதை அடுத்து, உலகெங்கும், #BlackLivesMatter என்று குரல்கள் எழுந்துள்ளது. இந்த பிரச்சாரம் தீயாய் உலக நாடுகள் பலவற்றுக்கும் நீடித்துள்ளது. இந்த பின்னணியில்,

fair and lovely

“2000 கோடி மதிப்புள்ள எங்களின் ப்ராண்டின் வளர்ச்சியில் சில மாற்றங்களை கொண்டு வர விரும்பினோம். அதன் அடிப்படையில், சருமப் பராமரிப்பு ப்ராண்டுகளில் நீண்டகால பார்வையுடன், அழகு என்பதன் அர்த்தத்தை மாற்றியமைக்கும் விதத்தில், அது எல்லாருக்குமானது, எல்லா வகையான சரும நிறங்களுக்குமானது என்பதை கொண்டாட விரும்புகிறோம். எங்களின் எல்லா ப்ராடக்ட்களிலும் அழகு பற்றிய எங்களின் பார்வை உள்ளடக்கியதாக இருக்க எல்லா முயற்சிகளும் எடுக்க உள்ளோம்,” என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.


HUL நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சஞ்சீவ் மெஹ்தா பிடிஐ இடம் கூறுகையில்,

“இது ஒரே நாளில் எடுக்கப்பட்ட முடிவல்ல. இது பற்றி பல வருடங்களாக யோசிக்கப்பட்டது. வாடிக்கையாளர்களின் தேவை மற்றும் ஆய்வுகளின் அடிப்படையிலும் எடுக்கப்பட்ட முடிவு இது. இனி நாங்கள் ‘வெள்ளை நிறம், வெண்மையாக்குதல், ஃபேர் போன்ற வார்த்தைகளை பயன்படுத்தப் போவதில்லை,” என்றார்.

மேலும் பேசிய மெஹ்தா, HUL இது சம்மந்தமாக ப்ராண்ட் பெயர் மாற்றங்களுக்கு விண்ணப்பித்துள்ளோம். வேறு நிறுவனங்கள் எங்களை காப்பி அடித்துவிடக் கூடாது என புதிய பெயர்களை இதுவரை வெளியிடவில்லை. விரைவில் அறிவிப்போம் என்றார்.


சில தினங்களாக Change.Org தளம் மூலம் சந்தனா ஹிரான் என்பவர், HUL நிறுவனம் தங்களின் ப்ராண்ட் பெயரில் இருந்து ஃபேர் என்ற வார்த்தைகளை நீக்கக்கோரி கையெழுத்து பிரச்சாரம் தொடங்கி இருந்தார். நிறுவனத்தின் இந்த முடிவை தற்போது பாராட்டி டிவிட்டரின் தன் நன்றியை தெரிவித்து பதிவிட்டுள்ளார் அவர்.

“இந்த முடிவை பார்த்து புல்லரிக்கின்றது. வாழ்த்துக்கள் Unilever, நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் எழுப்பி இருந்த பிரச்சாரத்துக்கு ஆதரவு தெரிவித்து கைழுத்திட்ட 10 ஆயிரம் பேருக்கும் என் நன்றிகள்,” என பதிவிட்டார்.

HUL கடந்த 2019ம் ஆண்டு, தங்களின் ப்ராடக்ட்களில் இருந்த நிற அட்டையை நிறுத்தி, வெண்மை என்பதற்கு பதில், பிரகாசமான முகப்பொலிவு என மாற்றி விளம்பரப்படுத்த தொடங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


தகவல்: பிடிஐ

Want to make your startup journey smooth? YS Education brings a comprehensive Funding Course, where you also get a chance to pitch your business plan to top investors. Click here to know more.

  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

எங்கள் வார நியூஸ்லெட்டர் பெற

Our Partner Events

Hustle across India