’இளவரசர் ஹாரி... பர்கர் கிங்-ல் உங்களுக்கு பகுதி நேர வேலை தர்றோம்...’

பிரபல ப்ராண்ட் ‘பர்கர் கிங்’ இளவரசரி ஹாரிக்கு அளித்த பகுதிநேர பணி ஆஃபர்!

16th Jan 2020
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

அமெரிக்க பன்னாட்டு சங்கிலித் தொடர் உணவு ப்ராண்ட் ’பர்கர் கிங்’, பிரிட்டனின் அரசக் குடும்ப இளவரசர் ஹாரிக்கு பகுதி நேர வேலை ஒன்றை வழங்குவதாக ட்விட்டரில் கிண்டலாக அறிவித்தது.


பிரிட்டிஷ் அரசக் குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஹாரி, தானும் தன்னுடைய மனைவி மேகன் மெர்க்கலும் ராஜ வாழ்க்கை வேண்டாம் என விலகப் போவதாகவும், தனியாக சுதந்திரமாக உழைத்து வாழ்ந்து தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளப் போவதாகவும் அண்மையில் அறிவித்தனர்.

ஹாரி

இங்கிலாந்து அரசக் குடும்பத்தில் இதுவரையில் நிகழாத ஒரு சம்பவம் இது என்பதால் அரசக் குடும்பம் மட்டுமல்லாது பிரிட்டன் நாடே ஒருவித கலக்கத்துக்கு உள்ளாகியுள்ளது. ஹாரி தனது மனைவி மேகனுடன் கனடாவில் வசிக்கப் போவதாகவும் தெரிவித்து விட்டார்.


இந்நிலையில், அர்ஜென்டினாவில் உள்ள பிரபல பர்கர் சங்கில் பிராண்ட் ‘பர்கர் கிங்’-ன் ஒரு கிளை ட்வீட் மூலம் சசெக்ஸின் டியூக் ஆன ஹாரிக்கும் மற்றும் டச்சஸுக்கு மேகனுக்கும் ஒரு பகுதிநேர வேலை ஒன்றை ஆஃபர் செய்வதாக ட்வீட்டியது. இந்த ட்வீட மக்களிடையே வெகுவாக பரவி, எதிர்ப்பு மற்றும் பாராட்டைப் பெற்றது. அதில்,

“@ஹாரி, எங்களின் இந்த ராயல் குடும்பம் உங்களுக்குப் பகுதி நேரப் பணி வேலையை ஆஃபர் செய்கிறது...” என்று இருந்தது.

இந்த ட்வீட் சமூக ஊடக பயனர்களால் 1.8k முறை மறு ட்வீட் செய்யப்பட்டுள்ளது மற்றும் 7.5k க்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்றுள்ளது. இந்த ட்வீட்டுக்கு பதில்கள் வெள்ளம் போல் பாய்ந்தது.


ஒரு பயனர் இந்த யோசனைக்கு பர்கர் கிங்கை "காட்டுமிராண்டித்தனம்" என்று அழைத்தார், மற்றொருவர் துரித உணவுச் சங்கிலி ப்ராண்ட் ’இணையத்தில் மக்களின் இதயங்களை வென்றது’ என்று பதில் போட்டுள்ளார்.

இதனிடையே அரசக் குடும்பத்தில் இளவரசர் ஹாரி, மேகன் தம்பதியின் எதிர்கால நிலை குறித்து விவாதிக்க ராணி இரண்டாம் எலிசபெத் நேற்று முன்தினம் அரசக் குடும்ப உறுப்பினர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.


மேகனை தவிர மற்றவர்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். மேகன், கனடாவில் இருந்து தொலைபேசி வழியாக கருத்து தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு பின்னர் ராணி இரண்டாம் எலிசபெத் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில்,

குடும்ப உறுப்பினர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் ஆக்கப்பூர்வமாக அமைந்தது. ஹாரியும், மேகனும் கனடாவிலும், இங்கிலாந்திலும் மாறி மாறி தங்கள் காலத்தை கழிக்க ஒப்புக் கொள்ளப்பட்டது.நானும், எனது ஒட்டுமொத்த குடும்பத்தினரும் ஒரு இளம் குடும்பமாக ஹாரியும், மேகனும் புதிய வாழ்க்கையை தொடங்கும் விருப்பத்துக்கு முழுமையான ஆதரவை அளிக்கிறோம்.

அவர்கள் அரசக் குடும்பத்தில் முழுநேர பணி உறுப்பினர்களாக இருப்பதற்கே நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம். இருந்தபோதிலும், அவர்கள் எனது குடும்பத்தின் மதிப்புக்குரிய அங்கமாக தொடர்வதுடன் அவர்கள் மேலும் சுதந்திரமான ஒரு வாழ்க்கையை வாழ விரும்பும் முடிவை நாங்கள் மதிக்கிறோம், என்று ராணி இரண்டாம் எலிசபெத் தெரிவித்திருந்தார்.


கட்டுரை தொகுப்பு: இந்துஜா ரகுனாதன்


  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

Our Partner Events

Hustle across India