70 லட்சம் ’FasTag’ அட்டைகள் இதுவரை விநியோகம் என அரசு தகவல்!

நவம்பர் 21 முதல் டேக் கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்ட அறிவிப்புக்கு பிறகு, கார்டு விநியோகம் அதிகரித்துள்ளது. ட்ரக் உரிமையாளர்கள் இலவசமாக FasTag பெற உடனே விண்ணப்பிக்க என்ன செய்யலாம் என்ற தகவலும் இக்கட்டுரையில் உள்ளது.

29th Nov 2019
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

இதுவரை 70 லட்சத்திற்கும் மேலான ’FasTags’ மின்னணு அட்டைகள் விநியோகிக்கப் பட்டிருப்பதாகவும், செவ்வாய்கிழமை அதிகபட்சமாக 1,35,583 ஃபாஸ்டேக் வழங்கப்பட்டதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

பாஸ்ட் டேக்

தரை வழி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தின் தேசிய மின்னணு சுங்கவரி வசூலிப்பு (என்.இ.டி.சி) திட்டம், சுங்கசாவடிகளில் வாகனங்கள் காத்திருப்பதை தவிர்க்கவும், சிக்கல் இல்லாமல் கட்டணம் வசூலிக்கப்படவும், அகில இந்திய அளவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரேடியோ அலைவரிசை அடிப்படையில் இது செயல்படுகிறது.

"இது வரை 70 லட்சத்திற்கும் மேல் 'ஃபாஸ்டேக்’ விநியோகிக்கப்பட்டுள்ளன. நவம்பர் 26ம் தேதி (செவ்வாய்) அதிகபட்சமாக 1,35,583 டேக் வழங்கப்பட்டன. முந்தைய தினம், 1.03 லட்சம் டேக் வழங்கப்பட்டன. ஜூலை மாதம்,  சராசரியாக தினசரி 8,000 டேக் என இருந்த விற்பனை நவம்பர் மாதம் 300 சதவீதம் அதிகரித்து, 35,000 டேகாக உயர்ந்துள்ளது,” என்று தரைவழி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நவம்பர் 21 முதல் டேக் கட்டணம், தள்ளுபடி செய்யப்பட்ட பிறகு, ஃபாஸ்டேக் வழங்கப்படுவது அதிகரித்திருப்பதாகவும், 560 மையங்களில் இது ஏற்கப்படுவதாகவும், இந்த எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


டிஜிட்டல் பரிவர்த்தனை மற்றும் வெளிப்படையான தன்மையை மேம்படுத்தும் வகையில், அனைத்து டோல் மையங்களிலும், டிசம்பர் 1ம் தேதி, எல்லா வரிசைகளும் ’ஃபாஸ்டேக்’ வரிசையாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இரு வழியிலும் ஒரு வரிசை, மற்ற வகை பரிவர்த்தனையையும் ஏற்றுக்கொள்ளும்.

"இந்த நடவடிக்கையின் காரணமாக, ஜூலை மாதம் ஃபாஸ்டேக் மூலம் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனை ஜூலை மாதத்தில் 8.8 லட்சமாக இருந்தது, நவம்பர் மாதம் 11.2 லட்சம் பரிவர்த்தனையாக அதிகரித்துள்ளது. தினசரி சராசரி வசூல் ரூ.11.2 கோடியில் இருந்து, ரூ.19.5 கோடியாக அதிகரித்துள்ளது.

டோல் மையங்களில் சிக்கலைத் தவிர்க்க பயனாளிகள் தங்கள் ஃபாஸ்டேக் அட்டையில் போதிய பாலன்ஸ் வைத்திருக்க வேண்டும். அல்லது அதை வாலெட்டுடன் இணைத்திருக்க வேண்டும்.


ஃபாஸ்டேக் கணக்கில், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, இணைய வங்கிச்சேவை, யுபிஐ மூலம் பணத்தை நிரப்பலாம். ஃபாஸ்டேக் தொடர்பான உதவி பெற 1033 என்ற எண்ணில் சேவை இயங்குகிறது.


இதனிடையே ஆன்லைன் ட்ரகிங் தளமான ‘BlackBuck’, IDFC வங்கி மற்றும் Yes வங்கிகளுடன் இணைந்து இந்த FASTag கார்டுகளை ட்ரக் உரிமையாளர்களுக்கு இலவசமாகக் கொடுக்க முடிவெடுத்துள்ளனர்.


BlackBuck ஆப் மூலம் ட்ரக் உரிமையாளர்கள் ஃபாஸ்டேக் பெற உடனே விண்ணப்பித்தால் டிசம்பர் 1ம் தேதிக்குள் வீட்டிற்கே கார்டு டெலிவரி செய்யப்படும் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

"BlackBuck-ன் இந்த இலவச ஃபாஸ்டேக் அறிவிப்பு ட்ரக் உரிமையாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். வங்கிகளுடன் இணைந்து இந்த கார்டுகளை அளிப்பதால், இந்தியா முழுதும் சுமார் 3மில்லியன் ட்ரக் உரிமையாளர்களுக்கு ஃபாஸ்டேக் கார்ட் கிடைக்க இந்த முயற்சி வழி செய்யும்.”

நீங்களும் உங்களின் FasTag கார்டை உடனே பெற விண்ணப்பியுன்ங்கள்: https://www.fastag.org/fasttag

கட்டுரை தொகுப்பு: சைபர் சிம்மன் மற்றும் இந்துஜா ரகுனாதன்

  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close
Report an issue
Authors

Related Tags

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக

Our Partner Events

Hustle across India