Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

இந்தியாவிலே முதன் முறை; Metaverse-இல் திருமண வரவேற்பு: அசத்தும் தமிழக ஜோடி!

இந்தியாவிலேயே முதன் முறையாக மெட்டாவேர்ஸ் (Metaverse) மூலமாக திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் ஜோடி திட்டமிட்டுள்ளது உலகை உற்றுநோக்க வைத்துள்ளது.

இந்தியாவிலே முதன் முறை; Metaverse-இல் திருமண வரவேற்பு: அசத்தும் தமிழக ஜோடி!

Thursday January 20, 2022 , 3 min Read

இந்தியாவிலேயே முதன் முறையாக மெட்டாவேர்ஸ் (Metaverse) மூலமாக திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் ஜோடி திட்டமிட்டுள்ளது உலகை உற்றுநோக்க வைத்துள்ளது.


தகவல் தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் ஆன்லைன் யுகத்தில் பல்வேறு வித்தியாசமான விஷயங்களை பார்த்திருப்போம். கேட்டிறிப்போம். தற்போது கலாச்சார முறைப்படி நடக்கும் திருமணங்களிலும் தொழில்நுட்பம் புகுந்து விளையாட ஆரம்பித்திருக்கிறது.


காலம் காலமாக இந்து முறைப்படி திருமணங்கள் எப்படி நடக்கின்றது. நாதஸ்வரத்தின் மங்கள முழங்கத்துடன் மணமகன், மணப்பெண் கழுத்தில் தாலியை கட்ட, சுற்றி நிற்கும் உறவுகள் எல்லாம் மலர் மற்றும் அட்சதை தூவி வாழ்த்த, விருந்து உபசரிப்போடும், உறவுகளின் ஒன்று கூடலோடும் குதூகலமாக நடைபெறும்.

meta

ஆனால் தமிழகத்தில் முதன் முறையாக யாருமே கற்பனை செய்து பார்க்க முடியாத வகையில் கலக்கல் திருமண வரவேற்பு ஒன்று நடக்க உள்ளது.

மணமகனும், மணப்பெண்ணும் திருமண வரவேற்பு உடையை அணிந்து கொண்டு, ஒரு வெப்பக்கட்டுப்பாட்டு அறைக்குள் நுழைவதையும், விர்ச்சுவல் ரியாலிட்டி (விஆர்) ஹெட்செட்களை அணிந்துகொண்டு ‘மெட்டாவர்ஸ்’ எனப்படும் இணையான விர்ச்சுவல் உலகத்தில் நடக்க உள்ள திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தங்களது மெய் நிகர் உருவத்தை காட்சிப்படுத்துவதையும் உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா?


‘மெட்டாவர்ஸ்’ என்றால் என்ன?

மெட்டாவர்ஸ் என்பது மெய்நிகர் ரியாலிட்டி (Virtual Reality) உலகமாகும். அதனை பயன்படுத்துபவர்கள் டிஜிட்டல் அவதாரங்கள் மூலம் வாழவும் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளவும் முடியும். இதன் மூலம் புதுமண தம்பதி மட்டுமல்ல அவரது உறவினர்கள், நண்பர்கள் என திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள அனைவரது உருவத்தையும் உருவாக்க முடியும்.


கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மெட்டாவர்ஸின் மெய்நிகர் ரியாலிட்டியை பயன்படுத்தி, புளோரிடாவைச் சேர்ந்த‌ ட்ரேசி மற்றும் டேவ் காக்னன் இருவரும் உலகிலே முதன் முறையாக திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு பிடித்த உடை, பிடித்த திருமண செட் அப் என அனைத்தையும் அமெரிக்காவின் விர்பெலா என்ற நிறுவனம் வடிவமைத்துக் கொடுத்தது.


தற்போது இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழ்நாட்டில் மெட்டாவர்ஸ் மூலமாக மெய்நிகர் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.


மாத்தி யோசித்த தினேஷ் - ஜனகநந்தினி:

கிருஷ்ணகிரி மாவட்டம் சிவலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் தினேஷ், மணமகள் ஜனகநந்தினி தான் முதன் முறையாக மெட்டாவர்ஸ் மூலமாக மெய்நிகர் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்திக்காட்ட உள்ளனர்.

தினேஷ் ஒரு தொழில்நுட்ப வல்லுநர், கிரிப்டோகரன்சி முதலீடு மற்றும் மைனிங் செய்து வருகிறார். மணமகள் ஜனகநந்தினி டிசிஎஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். ஹாரிபாட்டர் கதையில் வரும் Hogwarts School of Witchcraft and Wizardry என்ற தீமை தான் தினேஷ் தனது திருமண வரவேற்பிற்காக தேர்வு செய்துள்ளார்.

meta

சென்னையைச் சேர்ந்த TardiVerse Metaverse என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனத்தைச் சேர்ந்த விக்னேஷ் செல்வராஜ் என்பவர் தலைமையில் தான் மெட்டாவர்ஸ் திருமண வரவேற்பிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.


இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள தினேஷ்,

“இந்த உலகில் பல சிறந்த வாய்ப்புகளை மில்லியன் கணக்கான மக்கள் பார்ப்பதற்கு முன்பே, பெரிய விஷயத்தின் தொடக்கத்தைப் பார்த்து, அதைப் பயன்படுத்திக் கொண்டதில் நான் மிகவும் பெருமையாகவும் ஆசீர்வதிக்கப்பட்டதாகவும் உணர்கிறேன்! பாலிகோன் பிளாக்செயினில் இந்தியாவின் முதல் மெட்டாவர்ஸ் திருமணம் TardiVerse Metaverse ஸ்டார்ட்அப் ஒத்துழைப்புடன் நடக்க உள்ளது,” என பதிவிட்டுள்ளார்.

முதலில் பிப்ரவரி 6ம் தேதி காலை 6.30 மணிக்கு கிருஷ்ணகிரியில் உள்ள சிவலிங்கபுரத்தில் தினேஷ் - ஜனகநந்தினி திருமணம் உற்றார், உறவினர்கள் புடைசூழ, கொரோனா கட்டுப்பாடுகளைப் பின்பற்றி நடைபெற உள்ளது. அதன் பின்னர், அன்றைய தினம் மாலை மெட்டாவர்ஸ் மூலமாக மெய்நிகர் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க உள்ள புதுமண தம்பதி, அவர்களது பெற்றோர்கள், முக்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களின் அவதார்களை உருவாக்கும் பணி நிறைவடைந்து அவை பதிவேற்றப்பட்டுள்ளன.


இதில், வருங்கால மனைவி ஜனகநந்தினிக்காக அற்புதமான பரிசு ஒன்றையும் தினேஷ் தயார் செய்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில்,

“கடந்த ஏப்ரலில் எனது காதலியின் தந்தை இறந்துவிட்டார். இந்த யோசனை மூலம், அவரை ஆச்சரியப்படுத்த இருக்கிறேன். நிகழ்வில் அவரை ஒரு அங்கமாக மாற்றிட திட்டமிட்டுள்ளேன். அவர் ஒரு 3D அவதாரமாக இருந்து, மெட்டாவெர்ஸில் எங்களை ஆசீர்வதிப்பார். அதுதான் நான் அவளுக்கு கொடுக்கக்கூடிய பரிசு,” எனத் தெரிவித்துள்ளார்.
Meta

திருமணத்திற்கு அழைக்கப்படும் அனைவருக்கும் ஒரு வெப்சைட் லிங்க் மற்றும் ஐடி பாஸ்வேர்ட் கொடுக்கப்படும், அதைப் பயன்படுத்தி அவர்கள் மெய்நிகர் திருமண வரவேற்பில் பங்கேற்கலாம். இது முதன் முறை என்பதால் ஜனவரி 25ம் தேதி அன்று தீம் மற்றும் டெக்னாலஜி எப்படி இருக்கும் என்பதை விளக்க கூடிய டெமோ நிகழ்ச்சி நடைபெற உள்ளது.