FITJEE பயிற்சி மையங்கள் மூடல்? - விளக்கம் தந்த நிறுவனம்!
வகுப்புகள் நிறுத்தப்பட்ட பிறகு, கட்டணம் திரும்பி செலுத்தப்படாததால் அதிருப்தி அடைந்துள்ள பல பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதோடு, எக்ஸ் தளத்தில் தங்கள் கவலையை பகிர்ந்துள்ளனர்.
வட இந்தியாவில் பல இடங்களில் ஃபிட்ஜி (FIITJEE ) பயிற்சி மைய கிளைகள் திடிரென மூடப்பட்டுள்ளதாக சர்ச்சை உண்டாகியுள்ள நிலையில், எந்த மையத்தையும் மூட முடிவு செய்யவில்லை, என பயிற்சி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. மையங்களை நடத்தி வந்த நிர்வாக பாட்னர்கள், ஆசிரியர்களோடு திடிரென விலகிச்சென்றதே பிரச்சனைக்கு காரணம் என்றும் தெரிவித்துள்ளது.
நுழைவுத்தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் ஃபிட்ஜி (FIITJEE ) பயிற்சி மையத்தின் பல்வேறு கிளைகள் வட இந்தியாவில், ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கததால் அவர்கள் வெளியேறிய காரணத்தால் திடீரென மூடப்பட்டுள்ளதாக செய்திகளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
தில்லி, நொய்டா, மீரட், காஜியாபாத், லக்னோ, போபால், வாரனாசி உள்ளிட்ட நகரங்களில் இயங்கி வந்த பல்வேறு ஃபிட்ஜி பயிற்சி மையங்கள் மூடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பயிற்சி மையங்கள் திடிரென மூடப்பட்டுள்ளது, ஆயிரக்கணக்கான மாணவர்கள் அதிர்ச்சிக்குள்ளாக்கி, அவர்கள் தேர்வுக்கு தயாராவதை பாதித்துள்ளது. வகுப்புகள் நிறுத்தப்பட்ட பிறகு, கட்டணம் திரும்பி செலுத்தப்படாததால் அதிருப்தி அடைந்துள்ள பல பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதோடு, எக்ஸ் தளத்தில் தங்கள் கவலையை பகிர்ந்துள்ளனர்.
நொய்டாவைச் சேர்ந்த அவினாஷ் என்பவர்,
பிடிஜி வகுப்புகள் திடிரென மூடப்பட்டது தொடர்பாக வீடியோவை பகிர்ந்து கொண்டுள்ளதோடு, நிர்வாகம் உரிய பதில் அளிக்கவில்லை என்றும், இந்த விவகாரத்தில் அரசு தலையிட வேண்டும், என்றும் கோரியுள்ளார்.
ராஜீவ் குமார் சவுத்ரி எனும் இன்னொரு பெற்றோர்,
ஐந்தாண்டுகளுக்கான முழு கட்டணத்தையும் செலுத்திவிட்டதாகவும் இன்னமும் இரண்டு ஆண்டுகள் மீதம் உள்ளன, என்றும் எக்ஸ் பதிவில் கூறியுள்ளார். குழந்தைகள் கல்வி தொடர்பான முடிவு அவர்கள் எடுக்க வேண்டியது எனக்கூறி அகாஷ் இன்ஸ்டிடியூட்டில் இருந்து வகுப்பை மாற்றுவதற்காக ஃபிட்ஜி வலியுறுத்தியையும் குறை கூறியிருக்கிறார்.
1992ல் உருவாக்கப்பட்ட ஃபிட்ஜி (FIITJEE) மாணவர்களை நுழைவுத்தேர்வுக்கு தயாராக பயிற்சி அளித்து வந்தது. குறிப்பாக ஐஐடி உள்ளிட்ட கல்லூரிகளில் சேர்வதற்கான தேர்வுகளில் கவனம் செலுத்தியது.
வகுப்பறை பயிற்சி, பாடங்கள், வீட்டுப்பாடங்கள், மாதிரி தேர்வுகள் உள்ளிட்டவை மூலம் இந்த பயிற்சி நிலையம் பயிற்சி அளித்து வந்தது.
பயிற்சி நிலையம் பதில்
இந்நிலையில், பயிற்சி நிலையங்கள் மூடல் பிரச்சனை தொடர்பாக ஃபிட்ஜி நிர்வாகம் பதில் அளித்துள்ளது. இது தொடர்பான செய்திக்குறிப்பில்,
எந்த மையத்தையும் மூட முடிவு செய்யவில்லை, என பயிற்சி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. மையங்களை நடத்தி வந்த நிர்வாக பார்ட்னர்கள், ஆசிரியர்களோடு திடிரென விலகிச்சென்றதே பிரச்சனைக்கு காரணம் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த பிரச்சனை தற்காலிகமானதே என்றும் நிறுவன அதிகாரிகள் இதற்கு தீர்வு காண முயன்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.
மையங்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் பொருத்தவரை எங்களுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள விஷமத்தனமான வழக்குகள் தொடர்பாக சட்டக்குழு முறையான நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. போட்டி நிறுவனங்களின் முறையற்ற செயல் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
அக்ஷிதா டோனிஷ்வால், தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan