Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

சந்தை மதிப்பீட்டில் பெரிய சரிவை சந்திக்கும் நிறுவனங்கள் - அதிக இழப்பில் TCS, Infosys!

ஐடி நிறுவனங்களான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) மற்றும் இன்ஃபோசிஸ் ஆகியவற்றின் பங்குகளில் ஏற்ற இறக்கமான போக்குகள் நிலவிய நிலையில் சிறந்த மதிப்புஉயர்ந்த 10 மதிப்புமிக்க நிறுவனங்களில் ஐந்தின் ஒருங்கிணைந்த சந்தை மதிப்பீடு கடந்த வாரம் ரூ.1,97,958.56 கோடி குறைந்துள்ளது.

சந்தை மதிப்பீட்டில் பெரிய சரிவை சந்திக்கும் நிறுவனங்கள் - அதிக இழப்பில் TCS, Infosys!

Monday March 25, 2024 , 1 min Read

கடந்த வாரம், பிஎஸ்இ பெஞ்ச்மார்க் 188.51 புள்ளிகள் அல்லது 0.25 சதவீதம் உயர்ந்தது. TCS-இன் சந்தை மதிப்பு ரூ.1,10,134.58 கோடி குறைந்து ரூ.14,15,793.83 கோடியாக இருந்தது, இது டாப் 10 நிறுவனங்களில் இந்நிறுவனம் கண்ட அதிக இழப்பாகும். இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மதிப்பு ரூ.52,291.05 கோடி சரிந்து ரூ.6,26,280.51 கோடியாக உள்ளது.

தொழில்நுட்ப நிறுவனமான அக்சென்ச்சர் 2023-24 நிதியாண்டிற்கான வருவாய் முன்அறிவிப்பைக் குறைத்ததை அடுத்து ஐடி பங்குகள் வெள்ளிக்கிழமை சரிந்தன. 

ஹிந்துஸ்தான் யூனிலீவரின் சந்தை மதிப்பு ரூ.16,834.82 கோடி குறைந்து ரூ.5,30,126.53 கோடியாகவும், இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்ஐசி) மதிப்பு ரூ.11,701.24 கோடி குறைந்து ரூ.5,73,266.17 கோடியாகவும் உள்ளது.
market valuation

எச்டிஎஃப்சி வங்கியின் சந்தை மூலதனம் (எம்கேப்) ரூ.6,996.87 கோடி குறைந்து ரூ.10,96,154.91 கோடியாக இருந்தது. இருப்பினும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் மதிப்பு ரூ.49,152.89 கோடி உயர்ந்து ரூ.19,68,748.04 கோடியை எட்டியது.

பாரத ஸ்டேட் வங்கி ரூ.12,851.44 கோடியைச் சேர்த்ததால், அதன் எம்கேப் ரூ.6,66,133.03 கோடியாக உள்ளது. ஐடிசியின் எம்கேப் ரூ.11,108.51 கோடி உயர்ந்து ரூ.5,34,768.59 கோடியாகவும், பார்தி ஏர்டெல் ரூ.9,430.48 கோடி உயர்ந்து ரூ.6,98,855.66 கோடியாகவும் உள்ளது.

ஐசிஐசிஐ வங்கியின் மதிப்பு ரூ.8,191.79 கோடி உயர்ந்து ரூ.7,65,409.98 கோடியாக உள்ளது. அதிக மதிப்புள்ள நிறுவனங்களின் தரவரிசையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டது, அதைத் தொடர்ந்து டிசிஎஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பார்தி ஏர்டெல், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, இன்ஃபோசிஸ், எல்ஐசி, ஐடிசி மற்றும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் ஆகியவை உள்ளன.