கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட 13 பெண்கள்: 30 வயதுக்கு உட்பட்ட இளம் சாதனையாளர் பட்டியலை வெளியிட்ட ஃபோர்ப்ஸ்!
ஃபோர்ப்ஸ் இந்தியா 30 வயதுக்குட்பட்ட நாட்டின் 30 இளம் சாதனையாளர்களில் தேர்வான 13 சிறந்த பெண்களின் பட்டியலை பார்ப்போம்.
தொழில்முனைவோர், கலை, சட்டம், டிஜிட்டல் உள்ளிட்ட துறைகளில் ஆளுமையாக திகழ்ந்துவரும் 30 வயதுக்குட்பட்ட நாட்டின் 30 சிறந்த இளம் சாதனையாளர்களின் பெயர் பட்டியலை ஃபோர்ப்ஸ் இந்தியா பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் அவர்களின் திறமை அங்கீகரித்துள்ளது ஃபோர்ப்ஸ். அந்த பட்டியலில் 13 பெண்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்களைப் பற்றி பார்ப்போம்.
ஷெபாலி விஜயவர்கியா (28): விளம்பரம், சந்தைப்படுத்தல், உற்பத்தி மற்றும் விநியோகம் ஆகியவற்றில் தீவிர கவனம் செலுத்தியதன் மூலம் அமுல் கூலின் பிராண்ட் மேலாளராக ஷெபாலி விஜயவர்கியா உள்ளார். எம்பிஏ பட்டதாரியான இவர் ஷெபாலி, 2016ல் அமுலில் பகுதி விற்பனை மேலாளராக இணைந்தார்.
நிஹாரிகா கபூர் (28): யூடியூப் கம்யூனிட்டி மற்றும் சோசியல் மீடியா ஆப்ரேஷனின் ஆசியா – பசிபிக் தலைவராக இருக்கிறார். நிஹாரிகா லேடி ஸ்ரீ ராம் கல்லூரியில் பொருளாதார பட்டம் பெற்றவர். கூகுள் இந்தியாவில் உதவி கணக்காளராக 2013ல் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, யூடியூப் இந்தியாவில் ஒரு கூட்டு மேலாளராக சேர்ந்தார்.
பிராஜ் டோடியா (27): பிரபல சமகால கலைஞர்களான அதுல் டோடியா மற்றும் அஞ்சு டோடியாவின் மகள். இந்த இளம் கலைஞர் கடந்த ஆண்டு கொல்கத்தாவில் ஸ்டோன் இஸ் போர்ஹெட் Stone Is A Forehead தனது முதல் பெயிண்டிங்கை காட்சிப்படுத்தினார்.
நிஷிதா பாலியர்சிங் மற்றும் நிகிதா பலியர்சிங் (இருவரும் 23): இரட்டை சகோதரிகள் நிஷிதா மற்றும் நிகிதா பயிர் எச்சத்தில் இருந்து தயாரிக்கப்படும் மக்கும் பேட்டரிகள் மூலம் மின்சார வாகனங்களை அதிகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர்.
நியாட்டி மாவின்குர்வே (29): அபி & நியு யூடியூப் சேனலின் சரிபாதிக்கு சொந்தக்காரர் நியாட்டி. வீடியோக்கள் மூலம் ஒரு மில்லியனுக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்களை கொண்டுள்ளார். நடப்பு விவகாரங்கள் மற்றும் மன ஆரோக்கியம் மற்றும் தற்போதைய விவசாயிகளின் போராட்டம் போன்ற முக்கியமான தலைப்புகளில் அவர்கள் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
பவுலோமி பாவினி சுக்லா (28): அனாதைகளுக்கு கல்வி கிடைப்பதை உறுதி செய்வதில் லக்னோவைச் சேர்ந்த பவுலோமி பாவினி சுக்லா, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர், எழுத்தாளர் மற்றும் சமூக சேவகர்.
கீர்த்தி சுரேஷ் (28): தயாரிப்பாளர் ஜி சுரேஷ்குமார் மற்றும் நடிகர் மேனகா குமாரின் மகள் கீர்த்தி சுரேஷ். தேசிய விருது பெற்ற பிரபல நடிகையான இவர், ஃபேஷன் டிசைனிங்கில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். மகாநதி, இது என்ன மாயம், பெண்குயின் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் பொழுதுபோக்குப் பிரிவில் இளம் சாதனையாளராக தேர்வாகியுள்ள தென்னிந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.
திரிப்தி டிம்ரி (26): நடிகர் திரிப்டி வெறும் மூன்று படங்கள் மட்டும் நடித்துள்ளார்.நெட்ஃபிக்ஸ் புல்பூல் மற்றும் லைலா மஜ்னு ஆகியவற்றில் நடித்ததற்காக அவர் விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றார்.
வைஷாலி குப்தா (27): மும்பையைச் சேர்ந்த ஒரு சைவ தனிநபர் பராமரிப்பு பிராண்டான எம் காஃபீனின் இணைநிறுவனராக இருக்கிறார் வைஷாலி குப்தா. இந்தியன் ஸ்கூல் ஆஃப் மைன்ஸில் பி.டெக் முடித்தவர்.
மாளவிகா மனோஜ் (27): பாடகர்-பாடலாசிரியரும், இசையமைப்பாளருமான மாளவிகா, மாலி என அழைக்கப்படுகிறார். மும்பையை மையமாகக் கொண்ட இவர், இருமுகன் (2016) மற்றும் விவேகம் (2017) போன்ற பல தமிழ் படங்களில் பாடியுள்ளார்.
தொகுப்பு: மலையரசு