Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

தொழில்முனைவோர் தினமும் யோகாவை நாட வேண்டியதற்கான 4 காரணங்கள்!

யோகா; தொழில்முனைவோர்க்கும், தொழில் முனைய விரும்புவோர்க்கும், வெற்றியடைய தனி வழி அமைத்துத்தருகிறது.

தொழில்முனைவோர் தினமும் யோகாவை நாட வேண்டியதற்கான 4 காரணங்கள்!

Sunday June 21, 2020 , 3 min Read

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, யோகாவைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த எழுதப்பட்ட கட்டுரையின் ஒரு தொகுப்பாகும்.


யோகா செய்வதனால் கிடைக்கும் உடல் நலன்களைப் பற்றி பெரியளவில் விழிப்புணர்வு உருவாகியுள்ளது. ஆனால், யோகாவானது தொழில்முனைவோர்க்கும், தொழில் முனைய விரும்புவோர்க்கும், வெற்றியடைய தனி வழி அமைத்துத்தருகிறது. தகவல்களைச் செயல்முறைப்படுத்த, படைப்பாற்றலையும் செயல் திறனையும் அதிகரிக்க, மனஅழுத்தத்தை எதிர்க்கொள்ள, ஆன்மாவின் கவலைகளிலிருந்து மீண்டு வர சக்தி கொடுக்கிறது.


யோகா கொடுக்கும் அறிவாற்றல், நரம்பியல் மற்றும் மனநிலை சம்பந்தப்பட்ட பயன்கள் எண்ணற்றவை. நீங்கள் ஒரு நிபுணராகவோ அல்லது கற்றுக்குட்டியாகவோ இருந்தாலும் சரி, இந்த பழங்கால கலையை சில நிமிடங்கள் செய்வதால், நமது மனமும் உடலும் வளங்கொண்ட ஆக்கமுள்ள இடமாக மாறும்.

மனம் சார்ந்து கிடைக்கும் பயன்கள்

நம்மை ஆட்டிப்படைக்கும் நோய்கள் மற்றும் கவனக் குறைபாடு கோளாறுகளை குணப்படுத்த, சிகிச்சையாளர்கள் யோகா முறையைப் பயன்படுத்துக்கின்றனர். யோகாவானது மனஅழுத்தங்களைக் குறைத்து, மூளையில் ஆக்சிஜன் ஓட்டத்தை அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறியுள்ளன.

"உடலால் நாம் யோகா செய்யச்செய்ய, அதற்கு ஈடாக மன நிம்மதி அதிகரிக்கும். யோகா செய்த கொஞ்ச நேரத்திலே, உள்ளுக்குள் சுத்தமான ஒரு உணர்வும், வாழ்க்கை மீது ஒரு உறுதியான கண்ணோட்டமும் பிறக்கும்."

தொழில்முனைவோர்கள் பலர் உடல் கட்டமைப்புக்கு முனைகின்றனர். ஆனால், மன ஆரோக்கியத்திற்கு சிறு முக்கியத்துவமே தருகின்றனர். இது துரதிஷ்டவசமாக, பரப்பரப்பான வேலைகளையும், கோபத்தையும் அதிகரித்துவிடும். இதற்கு, நாம் வாழ்க்கைமுறையில் உடல் மற்றும் மனதின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வழி கண்டால் தான் நலம்.

மன அழுத்த பயன்கள்

அனைவரின் நம்பிக்கைக்கு மாறாக, மன அழுத்தம் பெறுவது உடலுக்கு எப்போதும் கேடு விளைவிக்காது. ஆதிமனிதனுக்கு, மனஅழுத்தமே அவன் உயிர்வாழ மூலமாக இருந்தது. முந்தைய காலங்களில், அதுதான் அவனை உயிரோடு இருக்கவும், வேட்டையாடும் விலங்குகள், எதிரிகள் மற்றும் இயற்கை பேரழிவுகளிடமிருந்தும் விலகி இருக்கச் செய்தது. நமது மரபனுக்களிலும் மனஅழுத்தம் இருக்க, நாம் முன்னோர்களுக்கு நன்றி கூற வேண்டும். எல்லா தொழில் முனைவோர்க்கும் இது பழக்கப்பட்டதே. தொழிலை வளர்க்க மிக கடினமாக உழைக்கும்போது, முதலில் உடல்தான் பாதிக்கப்படும். நெருக்கடியான கால அட்டவணைகளும் மிரட்டும் காலகெடுக்களையும் மனஅழுத்தம் அதிகரித்து கடைந்து விடும்.

மன அழுத்தம் பெறுவது உடலுக்கு எப்போதும் கேடு விளைவிக்காது என்று முன்னர் கூறியது உண்மைதான். ஆனால், அது உடலை விட்டு நீங்காமல் இருந்தால், அது அபாயகரமாக மாறிவிடும். நமது உடல் உறுப்புகளில் ஆசிட் அளவு அதிகரிக்கும்.

ஓர் ஆய்வின் அறிக்கைப்படி, நாம் டிராபிக் ஜாம்மில் மாட்டிக்கொள்ளும் போதோ அல்லது வேலைக்கு தாமதமாக ஓடும்போதோ ஏற்படும் மனஅழுத்தம், ஆப்பிரிக்காவில் உள்ள காட்டு வரிக்குதிரைகள் மற்றும் ஒட்டகச்சுவிங்கிகளுக்கு, சிங்கம் துரத்தும்போது ஏற்படும் உணர்விற்கு ஈடாகுமாம்.

முதல் முறை யோகா செய்வோர்கூட, செய்தவுடன் அமைதியும் சாந்தமும் பெறுவர். சில காலங்களுக்குச் செய்வோர்க்கு மனஅழுத்தம் கிட்டத்தட்ட வெளியேறிவிடும். சிந்தனைகளைக் கொண்டு ஓடிக்கொண்டே இருக்கும் மூளைக்கு, யோகா, அதன் தியான தந்திர வழிகளைப் பயன்படுத்தி, மூளைக்கு அமைதி அளிக்கும். எதுவும் செய்ய முடிந்தவர்களுக்கும், இது ஒன்றும் கடினமல்ல. இது நம்பிக்கையையும் தாண்டி, மனதையும் உடலையும் இணங்கி வேலை செய்யவைக்கும்.

நரம்பு சம்பந்தப்பட்ட பயன்கள்

யோகா பயிற்சி எடுத்துக் கொள்ளும்போது, உடலுக்கும் நரம்புகளுக்கும் இடையே இருக்கும் தொடர்பு சமநிலை படுத்தப்பட்டு, மூளை, உடல் மற்றும் மனதை ஒருநிலை படுத்தும். ஞாபக சக்தியையும் கற்கும் திறனையும் யோகா அதிகரிக்கும். ஆழமான ஒன்றுபட்ட கண்ணோட்டத்தையும் யோகா தரும்.

படைப்பாற்றல் மற்றும் உள்ளுணர்வு

புதிய மாற்றங்களை படைக்கும் சிந்தனைகளையும் ஆக்கத்தையும் எப்போதும் எதிர்ப்பார்த்து கொண்டு இருக்கும் இக்கால கட்டத்தில், யோசனைகள் மனதிலிருந்து தான் உருவாகிறது என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். தொழில் முனைவோர் ஆசைப்படும் படைப்பாற்றல் மற்றும் உள்ளுணர்வுகளை எல்லாம் தாண்டி, ஆன்மாவையும், திறனையும் ஒன்றுசேர்க்க யோகா உதவுகிறது.

யோகா, பதட்டம் மற்றும் மனக்கவலைகளைக் குறைத்து, சந்தேகங்களைக் கொல்ல உதவும். உடலை பற்றின விழிப்புணர்வை கூட்டும். இதற்குப் பலனாக, உண்மையையும் தன்னையும் புரிந்துக்கொண்டு, தன்னுள் இருக்கும் படைப்புத்திறன்களை உருவாக்க முடியும். சமூக சேவை திறன்கள், நல்வாழ்வு, கவனிக்கும் நேரம் மற்றும் தன்னம்பிக்கை படிப்படியாக அதிகரிக்கும். மனதிலும் உடலிலும் இருக்கும் பதற்றம், நம் உள்ளுணர்வுகளைத் தின்று, மகிழ்ச்சியான சுறுசுறுப்பான மனிதனாய் இல்லாமல், நடைபிணமாக மாற்றிவிடும். ஆகையால், யோகா நம்முள் இருக்கும் மனஅழுத்தம் மற்றும் பதற்றத்தை விலக்கி, நல்ல உள்ளுணர்வும் எண்ணங்களும் தரும்.


உங்கள் வாழ்க்கையில் யோகா, ஒருங்கிணைந்த ஒன்றாக மாற ஆசைபடுகிர்களா?