2021ம் நான்காம் காலாண்டில் 100 மில்லியன் டாலர் வருவாயை கடந்த Freshworks!
அமெரிக்காவின் நாஸ்டாக் சந்தையில் பட்டியலிடப்பட்ட ’சாஸ்’ நிறுவனமான ஃபிரெஷ்வொர்கஸ் காலாண்டு மற்றும் முழு நிதியாண்டிற்கான வருவாய் விவரங்களை வெளியிட்டுள்ளது.
கலிபோர்னியவாவை தலைமையமாகக் கொண்ட மென்பொருளை ஒரு சேவையாக வழங்கும் (SaaS) நிறுவனமான Freshworks, தனது நான்காவது காலண்டு மற்றும் 2021ம் முழு ஆண்டு வருவாய் அறிக்கையின் ஒரு பகுதியாக 100 மில்லியன் டாலர் காலாண்டு வருவாயை எட்டியுள்ளதாக அறிவித்துள்ளது.
“காலாண்டு வருவாயாக 100 மில்லியன் டாலரை கடந்து, ஆண்டு அடிப்படையில் நான்காம் காலாண்டில் 44 சதவீத வளர்ச்சியை அடைந்திருப்பதில் ஆண்டை வலுவாக நிறைவு செய்திருக்கிறோம்,” என்று ஃபிரெஷ்வொர்க்ஸ் நிறுவனர் மற்றும் சி.இ.ஓ, கிரீஷ் மாத்ருபூதம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
2021ம் ஆண்டின் நான்காம் காலாண்டில், ஃபிரெஷ்வொர்க்ஸ், Non-GAAP நஷ்டமாக 10.7 மில்லியன் டாலரை தெரிவித்துள்ளது. முந்தைய ஆண்டில் இணையான காலாண்டில் இது 2.3 மில்லியன் டாலராக இருந்தது.
ஆண்டு தொடர் வருவாயாக 5,000 டாலருக்கு மேல் அளிக்கும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 28 சதவீதமாக அதிகரித்திருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த காலாண்டில், பிரிட்டிஷ் மியூசியம், டேட்டாபிரிக்ஸ், ஹூயுமன்ஸ்கேல், ஜாலிரூம் உள்ளிட்ட புதிய வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. நிகர டாலர் தக்கவைப்பு விகிதம் 114 சதவீதமாக உள்ளது. மூன்றாம் காலாண்டைவிட இது சற்று குறைவாகும்.
நிறுவனத்தின் முழு ஆண்டு வருவாய் 49 சதவீதமாக உயர்ந்து, 371 மில்லியனாக இருந்தது. 2021ம் ஆண்டில் நிறுவனம் Non-GAAP நஷ்டமாக $18.3 மில்லியன் டாலரை குறிப்பிட்டுள்ளது. முந்தைய ஆண்டில் இது 8.3 மில்லியன் டாலராக இருந்தது.
2022 நிதியாண்டில் நிறுவனம் 486.6 மில்லியன் டாலர் முதல் 495 மில்லியன் டாலர் வரையான மொத்த வருவாயை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளது. Non-GAAP நஷ்டம் 48.5 மில்லியன் டாலராக உயரும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது.
அமெரிக்க பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் முதல் இந்திய சாஸ் நிறுவனமான ஃபிரெஷ்வொர்க்ஸ், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 10.13 பில்லியன் டாலர் சந்தை மதிப்பில் நாஸ்டாக் சந்தையில் பட்டியலிடப்பட்டது. அதன் ஆரம்ப பங்கு விலை 36 டாலராக அமைந்தது. பிப்ரவரி 10 ம் தேதி அதன் பங்கு விலை 22.46 டாலராக இருந்தது.
ஆங்கிலத்தில்: பாயல் கங்குலி | தமிழில்: சைபர் சிம்மன்