Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

'நாஸ்டாக் வெளியீடு ஆரம்பம் மட்டுமே, கடின உழைப்பு இப்போது தான் துவங்குகிறது’ - Freshworks கிரிஷ் மாத்ருபூதம்!

இந்தியாவின் மிகப்பெரிய ஸ்டார்ட் அப் தொழில்நுட்ப மாநாடான டெக்ஸ்பார்க்ஸ் 2021 நிகழ்சியில் பேசிய பிரெஷ்வொர்க்ஸ் நிறுவனர் கிரிஷ் மாத்ருபூதம் தொழில்முனைவோராக தனது எதிர்கால அணுகுமுறை பற்றி பேசினார்.

'நாஸ்டாக் வெளியீடு ஆரம்பம் மட்டுமே, கடின உழைப்பு இப்போது தான் துவங்குகிறது’ - Freshworks கிரிஷ் மாத்ருபூதம்!

Tuesday October 26, 2021 , 3 min Read

உச்சத்திற்குச் சென்ற பிறகு அமைதியாக இருப்பது எளிதல்ல. ஆனால், பிரெஷ்வொர்க்ஸ் நிறுவனர் கிரிஷ் மாத்ருபூதத்தை பொருத்தவரை, இதை புதியவற்றை கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பாக, மேலும், உத்திகளை வகுப்பது மற்றும் தன்னுடைய கடமைகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பாகவே கருதுகிறார்.


கடந்த மாதம் கிரிஷ், தனது குடும்பத்தினர் மற்றும் செல்லப்பிராணி நாயுடன், நாஸ்டாக் சந்தையில் துவக்க மணியை ஒலிக்கச்செய்த போது, இந்திய ஸ்டார்ட் அப் சூழலில் உள்ளவர்கள் ஆரவாரம் செய்து தங்களுக்குள் கைகுலுக்கி மகிழந்தனர். காரணம், பிரெஷ்வொர்க்ஸ் வெற்றி அதன் வெற்றி மட்டும் அல்ல. இது இந்தியாவில் உருவான ஸ்டார்ட் அப்களுக்கான புதிய விடியலாக அமைந்தது.

டெக்

இந்திய ஸ்டார்ட் அப்களுக்கான காலம் வந்துவிட்டது என்பதையும் இது உணர்த்தியது. நாஸ்டாக் துவக்க மணிக்கு முன்பாக, பத்தாண்டுக்கும் மேலாக பிரெஷ்வொர்க்ஸ் நிறுவனத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்திய கிரிஷுக்கு, இந்த பொது பங்கு வெளியீடு ஒரு திருப்புமுனை தான். இந்தச் சாஸ் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை உலக வரைபடத்தில் இடம்பெறச்செய்தது அல்லது பங்குதாரர்களுக்கு செல்வத்தை உருவாக்கித்தந்ததற்காக மட்டும் அல்ல, மகத்தான கற்றல் அனுபவமாக திகழ்வது என்பதால் தான்.

"என்னைப்பொறுத்தவரை, கடந்த 5 அல்லது 6 ஆண்டுகளை பார்த்தால் அல்லது அடுத்து வரும் 10 ஆண்டுகளை பார்த்தால், எல்லாமே ஒரு விஷயம் தான். பிரெஷ்வொர்க்ஸ் என்பது என் வாழ்க்கையின் சிறந்த பயணமாக இருப்பது தான் அது. இப்போது, வெற்றிகரமான பொது நிறுவனத்தை எப்படி நடத்துவது என்பது உண்மையில் ஊக்கம் அளிப்பது,” என்று கிரிஷ் மாத்ருபூதம் சொல்கிறார்.

புதிய கற்றல் வாய்ப்புகளுக்காக மகிழ்வதோடு, நிறுவன பங்குதாரர்களுக்கான வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பாக அமைந்ததால் பங்கு வெளியீட்டிற்கு அவர் மிகவும் மகிழ்கிறார்.

“நம்முடைய பங்குதாரர்கள் மற்றும் நம் ஊழியர்களுக்கான ஒரு பொறுப்பை நிறைவேற்றியிருப்பது எனக்குப் புரிகிறது. எனவே ஒரு மகிழ்ச்சி இருக்கிறது. ஆனால், புதிய பொது பங்குதாரர்களுக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கிறேன். பொது நிறுவனமாக வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பது கற்றல் பயணமாக இருக்கும்,” என்று டெக்ஸ்பார்க்ஸ் நிகழ்ச்சியில் யுவர்ஸ்டோரியுடனான உரையாடலில் கிரிஷ் கூறினார்.

ஜூலை மாதம் பி.எஸ்.இ பங்கு வெளியீடு மூலம் ஜொமேட்டோ துவக்கிய கதையை பிரெஷ்வொர்க்ஸ் தனது பங்கு வெளியீடு மூலம் வெற்றிகரமான முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறது என கூறிய கிரிஷ், எந்த ஒரு ஸ்டார்ட் அப்பும் இந்தியாவில் மட்டும் அமெரிக்காவில் வெற்றி பெறும் என்று தெரிவித்தார்.


தனது ஹீரோவான ஜெப் பெசோஸ், அமேசான் நிறுவனம் பங்குகளை வெளியிட்ட பிறகு புதுமையாக்கம் மற்றும் வளர்ச்சியில் கவனம் செலுத்தியது போல பிரெஷ்வொர்க்ஸ் செயல்படும் என்றும் அவர் கூறினார்.

“எங்களைப்பொருத்தவரை, அமைதியாக செயலாக்கம் மற்றும் வளர்ச்சியில் கவனம் செலுத்துவது முக்கியம், வெற்றியில் திளைத்துவிடாமல், தொடர்ந்து பொருத்தமாக இருக்க புதிய தீர்வுகளை உருவாக்குவதில் தனது குழு கவனம் செலுத்தும்” என்கிறார்.

“நிறுவனர்கள் ஒவ்வொரு காலாண்டும், சற்று நேரம் எடுத்துக்கொண்டு துறையில் என்ன நடக்கிறது என்பதையும், வாடிக்கையாளர்கள் சொல்வதையும், அவர்கள் பிரச்சனைகள் என்ன என்பதை, அதற்கான தீர்வுகளை யோசிக்க வேண்டும்,” என்கிறார்.


யுவர்ஸ்டோரி மற்றும் அதன் துணை பதிப்புகளான தமிழ்ஸ்டோரி, ஹெர்ஸ்டோரி, டெக்ஸ்பார்க்ஸ் ஆகியவற்றை உதாரணம் காட்டிய கிரிஷ், துறையில் நிகழ்பவை மற்றும் வாடிக்கையாளர்கள் தேவையை அறிந்து கொள்வது மிகவும் முக்கியம் என்றார்.


பொது பங்கு வெளியிட்ட நிறுவனத்தின் சி.இ.ஓ என்ற முறையில் தனது நிலையை ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்திய விளையாட்டு வீரருக்கு இணையாக குறிப்பிடுகிறார்.

“ஒலிம்பிக் பத்தக்கத்தை வாங்கிக் கொண்டு வந்து வீட்டில் தூங்க எனக்கு விருப்பம் இல்லை. உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் செய்வதை செய்ய விரும்புகிறேன். அதாவது தினமும் பயிற்சி பெற்று, அனைத்து போட்டிகளிலும் பங்கேற்று வெற்றி பெற வேண்டும்,” என்று கிரிஷ் குறிப்பிட்டார்.

இகா சாப்ட்வேரின் மானவ் கார்க், கடந்த ஆண்டு வரை மேட்ரிக்ஸ் பார்ட்னர்ஸ் இந்தியா நிறுவனத்தில் சாஸ் ஒப்பந்தங்களை கவனித்து வந்த சுபம் குப்தா, சாஸ்பூமி நிறுவன தன்னார்வலர், ஐஸ்பிரிட் இணை நிறுவனர் அவினாஷ் ராகவா ஆகியோருடன் இணைந்து விசி நிறுவனமான டுகதர் பண்ட்டை துவக்கியுள்ள கிரிஷ், குறிப்பிட்ட ஸ்டார்ட் அப்களை கண்டறிந்து ஆதரிப்பது தனது நோக்கம் என்கிறார்.

“கிரிஷ் அல்லது மானவுடன் நேரம் தவிர கூடுதலாக எங்களால் அளிக்க முடியும். இந்த நிதியில் பணத்தை போட்டுள்ள 160 நிறுவனர்கள் மற்றும் ஆப்பரேட்டர்களை இணைத்துள்ளோம். ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் நேரத்தை செலவிட்டு ஆதரிக்க இவர்கள் தயாராக உள்ளனர்,” எனும் கிரிஷ் குறிப்பிட்டார்.


அடுத்த முறை இந்திய ஸ்டார்ட் அப் அமெரிக்காவில் பட்டியலிடும் போது ஃபிரெஷ்வொர்க்ஸ் செய்த தவறுகளை தவிர்த்து, இன்னும் வேகமாக இதை நிறைவேற்ற வேண்டும் என்றும் கூறினார்.


ஜொமேட்டோ நிறுவனத்துடன் இணைந்து இந்திய ஸ்டார்ட் அப் சூழலுக்கான விதிகளை மாற்றி எழுதியுள்ள கிரிஷுக்கு பொது பங்கு வெளியீடு என்பது துவக்கம் தான். ஷரத்தா சர்மாவுடனான உரையாடலில் அவர் கூறியது போல், கடின உழைப்பு இனி தான் துவங்குகிறது.


ஆங்கிலத்தில்: அபராஜிதா சக்சேனா, பாயல் கங்குலி | தமிழில்: சைபர் சிம்மன்