Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

'ரூ.2000 கோடி முதலீட்டில் தமிழ்நாட்டில் உலகளாவிய வளர்ச்சி மையம்' - முதலமைச்சருடன் ட்ரில்லியன்ட் நிறுவனம் ஒப்பந்தம்!

அமெரிக்க நாட்டின் டிரில்லியன்ட் நிறுவனம், தமிழ்நாட்டில் அதன் உலகளாவிய வளர்ச்சி மற்றும் ஆதரவு மையத்தை அமைப்பதற்கு ரூ.2000 கோடி முதலீடு செய்ய முன்வந்துள்ளது. அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சிகாகோவில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.

'ரூ.2000 கோடி முதலீட்டில் தமிழ்நாட்டில் உலகளாவிய வளர்ச்சி மையம்' - முதலமைச்சருடன் ட்ரில்லியன்ட் நிறுவனம் ஒப்பந்தம்!

Thursday September 05, 2024 , 1 min Read

வெளிநாட்டு முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு ஈர்க்கும் வகையில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா பயணம் மேற்கொண்டுள்ளார். 17 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள அவர் சிகாகோவில் தொழில் நிறுவன அதிகாரிகளை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பில் வடக்கு கரோலினாவில் இயங்கி வரும் 'ட்ரில்லியன்ட்' நிறுவனத்தைச் சேர்ந்தவர்களை முதல்வர் நேரில் சந்தித்தார். ட்ரில்லியன்ட் நிறுவனம் ஸ்டார்ட் கிரிட், ஸ்மார்ட் நகரங்கள் மற்றும் Industrial Internet of Things போன்ற கட்டமைப்பு வசதிகளுக்கு மேம்பட்ட தீர்வுகளைத் தருகிறது.

தமிழ்நாட்டில் அதன் வளர்ச்சி மற்றும் உலகளாவிய ஆதரவு மையத்தை அமைப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ரூ.2000 கோடி முதலீடு செய்ய ஒப்புதல் தெரிவித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
ஸ்டாலின் அமெரிக்கா பயணம்

புரிந்துணர்வு ஒப்பந்தம் பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

”ரூ.2000 கோடி முதலீடு செய்வதாக ட்ரில்லியண்ட் நிறுவனம் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன் மூலம், உற்பத்தி ஆலை மற்றும் அந்நிறுவன விரிவாக்கத்தை தமிழ்நாட்டில் நிறுவவுள்ளது. ட்ரில்லியன்ட் நிறுவனத்திற்கு நன்றி,” என்று கூறியுள்ளார்.

காலணி உற்பத்தியில் முன்னணி நிறுவனமான Nike சென்னையில் அதன் உற்பத்தி ஆலையை அமைப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே தமிழ்நாட்டில் 5,000 பேர் வேலை செய்து வரும் Optum நிறுவனம் திருச்சி மற்றும் மதுரையில் தங்களது செயல்பாடுகளை விரிவுபடுத்துவது குறித்தும் அந்நிறுவனத்தினருடன் முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். Optum ஒரு அமெரிக்க சுகாதார நிறுவனமாகும். இது தொழில்நுட்ப சேவைகள், மருந்தக பராமரிப்பு சேவைகள் மற்றும் பல்வேறு நேரடி சுகாதார சேவைகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.