Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

Gold Rate Chennai: தங்கம் விலை இரண்டே நாளில் ரூ.1,250+ உயர்வு - காரணம் என்ன?

கடந்த இரு தினங்களில் மட்டும் ஆரபணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,280 அதிகரித்துள்ளது, நகை வாங்க விழைவோருக்கு கடும் அதிர்ச்சியளிக்கும் செய்தியாக உள்ளது.

Gold Rate Chennai: தங்கம் விலை இரண்டே நாளில் ரூ.1,250+ உயர்வு - காரணம் என்ன?

Saturday September 14, 2024 , 2 min Read

கடந்த இரு தினங்களில் மட்டும் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,280 அதிகரித்துள்ளது, நகை வாங்க விழைவோருக்கு கடும் அதிர்ச்சியளிக்கும் செய்தியாக உள்ளது. இந்த விலை ஏற்றம் மென்மேலும் தொடரலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

சென்னையில் நேற்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.120 உயர்ந்து ரூ.6,825 ஆகவும், சவரன் விலை ரூ.960 உயர்ந்து ரூ.54,920 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.130 உயர்ந்து ரூ.7,445 ஆகவும், சவரன் விலை ரூ.1,040 உயர்ந்து ரூ.59,560 ஆகவும் இருந்தது. ஒரே நாளில் இவ்வளவு விலை உயர்வா என்ற அதிர்ச்சி அடங்குவதற்குள் அடுத்த நாளான இன்றும் தங்கம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

தங்கம் விலை நிலவரம் - சனிக்கிழமை (14.9.2024):

சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.40 உயர்ந்து ரூ.6,855 ஆகவும், சவரன் விலை ரூ.320 உயர்ந்து ரூ.54,960 ஆகவும் இருக்கிறது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.44 உயர்ந்து ரூ.7,489 ஆகவும், சவரன் விலை ரூ.352 உயர்ந்து ரூ.59,912 ஆகவும் இருக்கிறது. ஆக, கடந்த இரு தினங்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1,280 அதிகரித்துள்ளது.

வெள்ளி விலை:

சென்னையில் சனிக்கிழமை (14-9-24) 1 கிராம் வெள்ளி விலை ரூ.2 உயர்ந்து ரூ.97 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.2,000 உயர்ந்து ரூ.97,000 ஆகவும் விற்பனையாகிறது.

gold

காரணம் என்ன?

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. தற்போது, சர்வதேச அளவில் ஓர் அவுன்ஸ் தங்கம் விலை வெகுவாக அதிகரித்துள்ளது. அத்துடன், அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகித குறைப்புக்கான எதிர்பார்ப்பு கூடியதும், சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை அதிகரித்ததும் இப்போது தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணமாக உள்ளது. மேலும், நம் நாட்டில் இது பண்டிகை காலம் என்பதால் ஆபரணத் தங்கம் விலை மென்மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என வர்த்தகர்கள் கூறுகின்றனர்.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.6,865 (ரூ.40 உயர்வு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.54,920 (ரூ.320 உயர்வு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,489 (ரூ.44 உயர்வு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.59,912 (ரூ.352 உயர்வு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.6,865 (ரூ.40 உயர்வு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.54,920 (ரூ.320 உயர்வு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,489 (ரூ.44 உயர்வு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.59,912 (ரூ.352 உயர்வு)


Edited by Induja Raghunathan