Gold Rate Chennai: தங்கம் விலை பவுனுக்கு ரூ.520 சரிவு!
சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.6,790-க்கு விற்பனை ஆகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.54,320 ஆகக் குறைந்துள்ளது.
தங்கம் விலை இன்று (திங்கட்கிழமை, (15-4-2024) காலை நிலவரப்படி, சென்னையில் ஆபரண மற்றும் சுத்தத் தங்கம் ஆகியவற்றின் விலைகள் சரிவு கண்டன.
சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.6,790-க்கு விற்பனை ஆகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.54,320 ஆகக் குறைந்துள்ளது.
தங்கம் விலை நிலவரம் (15-04-2024): சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கத்தின் விலை 1 கிராம் 65 ரூபாய் குறைந்து 6,790 ரூபாய்க்கும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் ரூ.71 குறைந்து ரூ. 7,407-க்கும் விற்று வருகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை 520 ரூபாய் குறைந்து ரூ.54,320-க்கு விற்று வருகிறது.
22 காரட் தங்கம் 10 கிராமுக்கு 650 ரூபாய் குறைந்து 67,900 ரூபாய்க்கும், 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.710 குறைந்து ரூ.74,070-ற்கும் விற்று வருகின்றன.
இன்றைய தினம் (15.-4-2024) ஒரு கிராம் வெள்ளி விலை 50 காசுகல் குறைந்து 89.50 ரூபாயாகவும் ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.500 றைந்து 89,500 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
தங்கம் விலை குறைவுக்கான காரணம்:
வாரம் முழுதும் தங்கம் விலைகளில் மாற்றங்கள், ஏற்ற இறக்கங்கள் இருந்த போதிலும் ஆபரணத்தங்கம் விலை ரூ.54,000த்தைக் கடந்த போதிலும் அதிலிருந்து பெரிய அளவுக்கு மாறாமல் சற்றே ஏறியும் இறங்கியும் காணப்படுகிறது. பணவீக்க விகிதம், அமெரிக்க வட்டிவிகித அறிவிப்பில் தாமதம் போன்றவற்றினால் தங்கம் விலையில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஜுவெல்லரி நகை தயாரிப்பாளர்களின் தேவை குறைவு காரணமாக இன்று விலைகள் சற்றே குறைந்துள்ளன.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.6,790(மாற்றம்:ரூ.65குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.54,320(மாற்றம்:ரூ.520குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,407 (மாற்றம்:ரூ.71.குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.59,256(மாற்றம்:ரூ.568குறைவு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.6,705(மாற்றம்:ரூ.55அதிகம்)
> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.53,640(மாற்றம்:ரூ.440அதிகம்)
> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,315(மாற்றம்: ரூ.60அதிகம்)
> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.58,520(மாற்றம்: ரூ.480அதிகம்)