Gold Rate Chennai: இன்று தங்கம் விலை சரிவு; சவரனுக்கு ரூ.160 குறைவு!
தங்கம் விலை இன்று மீண்டும் சரிந்துள்ளது நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தங்கம் விலை இன்று மீண்டும் சரிந்துள்ளது நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தங்கம் விலை நிலவரம் (25/05/2023)
தொடர்ந்து 2வது நாளாக தங்கத்தின் விலை சரிய ஆரம்பித்துள்ளது நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நேற்றைய வர்த்தகத்தின் போது தங்கத்தின் விலை கிராமிற்கு 5,625 ரூபாயாகவும், சவரனுக்கு 45,000 ரூபாயாகவும் இருந்தது.
சென்னையில் இன்றைய நிலவரப்படி, (வெள்ளி கிழமை) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து 5,605 ரூபாயாகவும், சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 44,840 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
இன்றைய மார்க்கெட் நிலவரப்படி, 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து 6,072 ரூபாயாகவும், சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 48,576 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் இன்று கணிசமான அளவு குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமிற்கு 30 காசுகள் குறைந்து 76 ரூபாய் 20 காசுகளுக்கும் கிலோவிற்கு 300 ரூபாய் குறைந்து 76 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
சரிவுக்கான காரணம் என்ன?
அமெரிக்க டாலரின் மதிப்பும், கருவூல வருவாயும் அதிகரித்து வருவது தங்கத்தின் விலையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சர்வதேச சந்தையில் தங்கத்தின் தேவை குறைந்திருப்பதும் விலை சரிய முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,605 (மாற்றம்: ரூ.20 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.44,840 (மாற்றம்: ரூ.160 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.6,072 (மாற்றம்: ரூ.20 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 48,576 (மாற்றம்: ரூ.160 குறைவு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,565 (மாற்றம்: ரூ.15 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.44,520 (மாற்றம்: ரூ.120 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.6,071 (மாற்றம்: ரூ.16 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 48,568 (மாற்றம்: ரூ.128 குறைவு)