Gold Rate Chennai: 42 ஆயிரத்தை தொட்ட தங்கம் விலை; சவரனுக்கு இவ்வளவு உயர்வா?
வாரத்தின் இரண்டாவது நாளாக இன்றும் தங்கத்தின் விலை கணிசமான அளவு அதிகரித்துள்ளது, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நகை வாங்க காத்திருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வாரத்தின் இரண்டாவது நாளாக இன்றும் தங்கத்தின் விலை கணிசமான அளவு அதிகரித்துள்ளது, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நகை வாங்க காத்திருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தங்கம் விலை நிலவரம் (13/01/2023)
வாரத்தின் இரண்டாவது நாளாக இன்றும் தங்கத்தின் விலை கணிசமான அளவு அதிகரித்துள்ளது, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நகை வாங்க காத்திருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னையில் நேற்றைய வர்த்தகத்தின் இறுதியில், 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 5,236 ரூபாய்க்கும், சவரன் 41,888 ரூபாய்க்கும் விற்பனையானது.
இன்றைய நிலவரப்படி, (வெள்ளிக்கிழமை), 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 14 ரூபாய் அதிகரித்து 5,250 ரூபாயாகவும், சவரனுக்கு 112 ரூபாய் அதிகரித்து 42,000 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
இன்றைய மார்க்கெட் நிலவரப்படி, 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராம் ஒன்றிற்கு 14 ரூபாய் அதிகரித்து 5,612 ரூபாய்க்கும், சவரனுக்கு 112 ரூபாய் அதிகரித்து 44,896 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளியின் விலையில் இன்று எவ்வித மாற்றமும் இன்றி, ஒரு கிராம் 74 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 74 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
உயர்வுக்கான காரணம் என்ன?
தற்போது அமெரிக்காவில் பணவீக்கம் சற்று குறைந்துள்ளது. இதனால் வட்டி விகிதங்கள் பெரிய அளவில் அதிகரிக்கப்படாமல் போகலாம் என அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அமெரிக்க மத்திய வங்கி ஜனவரி மாதம் மீண்டும் கூடும். அப்போது வட்டி உயர்வு குறித்து என்ன மாதிரியான முடிவு எடுக்கப்படும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்பதால் முதலீட்டாளர்களின் கவனம் மீண்டும் தங்கத்தின் மீது திரும்பியுள்ளது.
மற்றொருபுறம் சீனாவில் கொரோனா தளர்வுகள் தளர்த்தப்பட்டுள்ளது தங்கத்தின் மீதான தேவையை அதிகரித்துள்ளது. அதேபோல், கொரோனா மீண்டும் உயரத் தொடங்கியுள்ளதால் மக்கள் வழக்கமாக பாதுகாப்பான முதலீடாக கருதும் தங்கத்தை அதிக அளவில் வாங்கி வருவதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
முக்கிய நகரங்களின் தங்கம் விலை நிலவரம்:
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,250 (மாற்றம்: ரூ.14 அதிகரிப்பு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.42,000 (மாற்றம்: ரூ.112 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5,612 (மாற்றம்: ரூ.14 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 44,896 (மாற்றம்: ரூ.112 அதிகரிப்பு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,160 (மாற்றம்: ரூ.20 அதிகரிப்பு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.41,280 (மாற்றம்: ரூ.160 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5,629 (மாற்றம்: ரூ. 22 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 45,032 (மாற்றம்: ரூ.176அதிகரிப்பு)