Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

45 ஆண்டுகால பிசினஸ்; ரூ.190 கோடி வருவாய் - திரைச்சீலை வர்த்தகத்தில் கோலோச்சும் டெல்லி நிறுவனம்!

கலைப்பொருட்கள் வர்த்தகத்தில் இருந்து, திரைச்சீலை கம்பிகள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக மாறிய டெகோ விண்டோ நிறுவனம் இப்போது ஸ்மார்ட் விண்டோ தீர்வுகளில் கவனம் செலுத்தி வருகிறது.

45 ஆண்டுகால பிசினஸ்; ரூ.190 கோடி வருவாய் - திரைச்சீலை வர்த்தகத்தில் கோலோச்சும் டெல்லி நிறுவனம்!

Thursday November 23, 2023 , 3 min Read

மறைந்த எஸ்.கே.ஜெயின் 1978 ம் ஆண்டு, தனது குடும்பத்தை நிதி நெருக்கடியில் இருந்து மீட்பதற்காக தில்லியில் கலைப்பொருட்கள் விற்பனையாகமாக ஜெயந்திரா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தை துவக்கினார்.

பொம்மைகள், சிலை வடிவங்கள், கண்ணாடி பொருட்கள் போன்றவற்றை மொராதபாத், ஷரன்பூர், பைசராபாத் உள்ளிட்ட நகரங்களில் இருந்து தருவித்து அமெரிக்காவில் உள்ள இந்திய எம்போரியத்திற்கு அனுப்பி வைத்தார்.

ஜன்னல்

அவரது மகன் ரவீன் ஜெயின் 1990-களில் வர்த்தகத்தில் இணைந்தாலும், நிறுவனம் திட்டமிடல், நிலத்தன்மை இல்லாமல் தடுமாறி தேக்கம் அடைந்தது.

"பல ஆண்டுகளாக முறையான அமைப்பு இல்லாமலே வர்த்தகம் நடைபெற்று வந்தாலும், சீரான தன்மையே எங்களை இயக்குகிறது,” என 2005ல் வர்த்தகத்தில் இணைந்த மூன்றாம் தலைமுறை தொழில்முனைவோரான வைபவ் ஜெயின் கூறுகிறார்.

புத்தாயிரமாண்டிற்கு பிறகு வர்த்தகம் தொடர்பாக இந்த குடும்பம் முக்கிய முடிவு எடுத்தது. பல பொருட்களை கையாள்வதைவிட, ஒரு பொருள் வரிசையில் கவனம் செலுத்தி அதை மையமாகக் கொண்டு வர்த்தகத்தை அமைப்பது என தீர்மானிக்கப்பட்டது.

2008ல் ஜன்னல்களுக்கான தீர்வாக ’டெகோ விண்டோ’ (Deco Window) பிராண்டை துவக்கினர். தாய் நிறுவனத்தின் ஒரு பகுதியாக இது அமைந்தது.  

டெகோ; விண்டோ, ஜன்னல் விரிப்புகள் தயாரிப்பில் கவனம் செலுத்துகிறது. திரைச்சீலை கம்பிகள், திரைச்சீலைகள், பிடிமானங்கள், பிலைண்ட்கள், டைபேக், கார்டன் டார்ச், கதவு பிடிகள் உள்ளிட்ட பொருட்கள் இந்த பிரிவில் அடங்கும்.

2023 நிதியாண்டில் நிறுவனம் ரூ.190 கோடி வருவாய் ஈட்டியதாகவும், 2024 நிதியாண்டில் ரூ.250 கோடி வருவாயை எதிர்பார்ப்பதாகவும் எஸ்.எம்.பி ஸ்டோரியிடம் வைபவ் ஜெயின் கூறுகிறார்.

வர்த்தக பாரம்பரியம்  

ஜன்னல் தீர்வுகளில் கவனம் செலுத்துவதற்கு முன்னோட்டமாக, ஜெயந்தியா எக்ஸ்போர்ட்ஸ் 1990-களில் திரைச்சீலை கம்பிகளை தயாரிக்கத் துவங்கியிருந்தது. 2007ல் திரைச்சீலை தயாரிப்பில் ஈடுபட்டது.

“திரைச்சீலையில் விரிவாக்கம் செய்தது முக்கிய நடவடிக்கை. ஜன்னல் தீர்வுகள் பிரிவில் நுழைய இது உதவியது. இந்த மாற்றத்திற்கு பிறகு, எங்கள் வளர்ச்சியும் முன்னேற்றமும் சீராக இருக்கிறது,” என ஜெயின் விளக்கம் தருகிறார்.

நிறுவனம் 2017 சுருளக்கூடிய பிலைண்ட் வகை திரைச்சீலை அமைப்பில் நுழைந்து, மேலும் பல புதிய பொருட்களை அறிமுகம் செய்தது.

ஜன்னல்

இருப்பினும், இந்த நொய்டா நிறுவனம் இன்னமும் பாரம்பரிய குடும்ப நிறுவனமாகவே செயல்பட்டு வந்தது. எனினும், மேலும் பொறுப்பேற்பை கொண்டு வருவதற்காக 2019ல் வர்த்தக கலச்சாரத்தை கொண்டு வந்த போது இந்த நிலை மாறியது.

"இப்போது எங்கள் செயல்பாடுகள் தனிநபர்கள் நோக்கங்களால் அல்லாமல், தெளிவான குறிக்கோளால் வழிநடத்தபடுகிறது,” என்கிறார்.

நிறுவனம் கிரேட்டர் நொய்டாவில் உற்பத்தி ஆலை கொண்டுள்ளது. ஸ்டீல் போன்ற மூலப்பொருட்களை உள்ளூரிலேயே கொள்முதல் செய்கிறது. இந்த ஆலை, நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் திரைச்சீலைகள் உற்பத்தி திறன் கொண்டுள்ளது. இவற்றில் 30 சதவீதம் பி2பி ஆர்டர்களுக்கானவை.

"பல்வேறு ரீடைல் பிராண்ட்களுக்கு நாங்கள் மூல சாதன தயாரிப்பாளராக இருக்கிறோம். ஹோம் செண்டர் அண்ட் ஹோம் ஸ்டாப் போன்ற நிலையங்கள் மூலம் வலுவான ரீடைல் இருப்பையும் பெற்றுள்ளோம்,” என்கிறார் ஜெயின்.

நிறுவனம் அமெரிக்கா மற்றும் யூகேவிற்கு ஏற்றுமதி செய்து வருவதோடு, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் வாய்ப்புகளை பரிசீலித்து வருகிறது.

நவீன வாடிக்கையாளர்கள்

ஜன்னல் தீர்வுகள் சந்தை குறிப்பாக திரைச்சீலை கம்பிகள், திரைச்சீலைகள் சார்ந்தவை அமைப்புசாரா நிறுவனங்களால் நிறைந்துள்ளதால் மிகை தன்மை கொண்டுள்ளது. எனினும், இந்த சவாலை ஜெயின் மாறுபட்ட வகையில் எதிர்கொள்கிறார்.

"ஜன்னல் திரைச்சீலை சந்தை ரூ.3,500 கோடி மதிப்பு கொண்டது மற்றும் ஆண்டு அடிப்படையில் 10 சதவீதம் வளர்கிறது. நடுத்தர மற்றும் உயர்பிரிவு வருமானத்தினர் எங்கள் இலக்கு வாடிக்கையாளர்கள். போட்டி இருந்தாலும், இது எங்களுக்கான ஊக்கமாக அமைகிறது. துறைக்கான புதிய தர அளவுகளை நிர்ணயிக்க நிர்பந்திக்கிறது,” என்கிறார்.

நிறுவனம், தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதற்கான தேவைக்கு ஈடு கொடுக்கும் வகையில் ஸ்மார்ட் கர்ட்டன் உள்ளிட்ட ஸ்மார்ட் விண்டோ தீர்வுகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

"தற்போது ஜென்-ஜி வாடிக்கையாளர்கள் மீது கவனம் செலுத்தி, அவர்கள் ரசனை மற்றும் முன்னுரிமைக்கு ஏற்ற பொருட்களை கொண்டு வருகிறோம். இது வருங்கால வடிவமைப்பில் பெரிய தாக்கமாக இருக்கும்,” என்கிறார் ஜெயின்.

இந்த ஆண்டு நிறுவனம், நொய்டாவில் டி.எல்.எப் மாலில் விற்பனை நிலையம் அமைத்து ஆப்லைன் ரீடைலில் நுழைந்துள்ளது. மேலும், விற்பனை நிலையங்கள் துவக்க இருப்பதாக ஜெயின் கூறுகிறார்.

ஆங்கிலத்தில்: பலக் அகர்வால் | தமிழில்: சைபர் சிம்மன்


Edited by Induja Raghunathan