Gold Rate Chennai: தங்கம் விலை சரிவு - சவரனுக்கு ரூ.40 குறைவு!
தங்கம் விலை இன்று குறைந்துள்ளது நகை வாங்க காத்திருந்தோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தங்கம் விலை இன்று குறைந்துள்ளது நகை வாங்க காத்திருந்தோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தங்கம் விலை நிலவரம் (03/07/2023):
இம்மாத தொடக்கமான ஜூலை 1ஆம் தேதி தங்கம் விலை உயர்வுடன் தொடங்கியது. இந்நிலையில் தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது.
சென்னையில் கடந்த வார இறுதி வர்த்தகத்தின் போது, 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 5,440 ரூபாய்க்கும், சவரன் 43,520 ரூபாய்க்கும் விற்பனையானது.
இன்றைய நிலவரப்படி, (திங்கள் கிழமை) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு 5 ரூபாய் குறைந்து 5,435 ரூபாய்க்கும், சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து 43,480 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
இன்றைய மார்க்கெட் நிலவரப் படி, 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமிற்கு 5 ரூபாய் குறைந்து 5,895 ரூபாய்க்கும், சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து 43,480 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலை கிராமிற்கு 200 காசுகள் குறைந்து 75 ரூபாய் 50 காசுகளுக்கும் 200 ரூபாய் குறைந்து 75 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
சரிவுக்கான காரணம் என்ன?
அமெரிக்க ஃபெடரல் வங்கி மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பால் முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் மீதிருந்து விலகியுள்ளது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,435 (மாற்றம்: ரூ.5 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.43,480 (மாற்றம்: ரூ.40 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5,895 (மாற்றம்: ரூ.5 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 47,160 (மாற்றம்: ரூ.40 குறைவு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,405 (மாற்றம்: ரூ.10 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.43,240 (மாற்றம்: ரூ. 80 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5,896 (மாற்றம்: ரூ.10 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 47,168 (மாற்றம்: ரூ.80 குறைவு)