Gold Rate Chennai: தங்கம் விலையில் இன்று மாற்றமில்லை; காரணம் என்ன?
கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று மாற்றமின்றி நேற்றைய விலையிலேயே நீடித்து வருகிறது.
கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று மாற்றமின்றி நேற்றைய விலையிலேயே நீடித்து வருகிறது.
தங்கம் விலை நிலவரம் (11/05/2023)
கடந்த 3 நாட்களாக தங்கம் விலை அதிகரித்து வந்தது. சவரன் விலை 45 ஆயிரத்தைக் கடந்து விற்பனையாகி வந்த நிலையில், இன்று தங்கம் விலை எவ்வித மாற்றமும் இன்றி நீடித்து வருகிறது.
சென்னையில் கடந்த வார இறுதி வர்த்தகத்தின் போது, 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 5,742 ரூபாய்க்கும், சவரன் 45,936 ரூபாய்க்கும் விற்பனையானது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலையும் எவ்வித மாற்றமும் இன்றி, ஒரு கிராம் 6,217 ரூபாய்க்கும், சவரன் 49,736 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
தங்கத்தை போல் அல்லாமல் வெள்ளியின் விலை இன்று கணிசமான அளவு குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமிற்கு 70 காசுகள் குறைந்து 82 ரூபாய்க்கும், கிலோவிற்கு 700 ரூபாய் குறைந்து 82 ஆயிரத்திற்கும் விற்பனையாகி வருகிறது.
மாற்றமின்றி நீடிக்கும் தங்கம் விலை:
அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்திய போதும் பணவீக்கம் குறையாததால் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீதான முதலீடுகளை அதிகரித்து வருகின்றன. இன்று சர்வதேச அளவில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ள போதும், விலையேற்றம் காரணமாக இந்தியாவில் தங்கத்தின் தேவை குறைந்ததால் விலையில் மாற்றமில்லாமல் நீடிக்கலாம் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,742 (மாற்றமில்லை)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.45,936 (மாற்றமில்லை)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.6,215 (மாற்றமில்லை)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 49,720 (மாற்றமில்லை)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,695 (மாற்றமில்லை)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.45,560 (மாற்றமில்லை)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.6,213 (மாற்றமில்லை)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 49,704 (மாற்றமில்லை)