Gold Rate Chennai: நகை வாங்க நல்ல சான்ஸ்; சற்றே குறைந்தது தங்கம் விலை!
கடந்த சில நாட்களாகவே அதிகரித்து வந்த தங்கம் விலை இன்று சற்றே குறைந்துள்ளது நகை வாங்க காத்திருப்போருக்கு நல்வாய்ப்பாக அமைந்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே அதிகரித்து வந்த தங்கம் விலை இன்று சற்றே குறைந்துள்ளது நகை வாங்க காத்திருப்போருக்கு நல்வாய்ப்பாக அமைந்துள்ளது.
தங்கம் விலை நிலவரம் (25/01/2023)
ஜனவரி மாதத்தின் கடைசி வாரத்தில், கடந்த 2 தினங்களாக தங்கத்தின் விலை உயர்ந்து வந்த நிலையில், இன்று யாருமே எதிர்பாராத அளவிற்கு சரிந்துள்ளது. இதனால் தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை காரணமாக நகை வாங்க காத்திருந்த நடுத்தர மக்கள் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர்.
சென்னையில் நேற்றைய வர்த்தகத்தின் இறுதியில், 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 5,355 ரூபாய்க்கும், சவரன் 42,760 ரூபாய்க்கும் விற்பனையானது.
இன்றைய நிலவரப்படி, (புதன் கிழமை), 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 5,345 ரூபாயாகவும், சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 42,760 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
இன்றைய மார்க்கெட் நிலவரப்படி, 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராம் ஒன்றிற்கு 10 ரூபாய் குறைந்து 5,707 ரூபாய்க்கும், சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து 45,656 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளியின் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் 74 ரூபாய்க்கும், ஒரு கிலோ 74 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
சரிவுக்கான காரணம் என்ன?
அடுத்த வாரம் நடைபெறும் கொள்கைக் கூட்டத்தில் மத்திய வங்கி 25 அடிப்படைப் புள்ளிகள் உயர்த்தும் என்று முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர். இதனால் தங்கம் மீதான முதலீடு அதிகரித்துள்ள போதும் அதன் தேவை காரணமாக இன்று விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
முக்கிய நகரங்களின் தங்கம் விலை நிலவரம்:
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,345 (மாற்றம்: ரூ.10 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.42,760 (மாற்றம்: ரூ.80 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5,707 (மாற்றம்: ரூ.10 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 45,656 (மாற்றம்: ரூ.80 குறைவு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,270 (மாற்றமில்லை)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.42,160 (மாற்றமில்லை)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5,749 (மாற்றமில்லை)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 45,992 (மாற்றமில்லை)