Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

Gold Rate Chennai: அடங்காத தங்கம் விலை உயர்வு - கிராம் ரூ.7,300-க்கு விற்பனை

ஆபரணத் தங்கத்தின் விலை மென்மேலும் அதிகரித்து வருவது, நகை வாங்க விழைவோருக்கு கவலை தரும் தகவலாக உள்ளது. கடந்த மூன்று தினங்களில் மட்டும் சவரனுக்கு ரூ.600-க்கு மேல் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

Gold Rate Chennai: அடங்காத தங்கம் விலை உயர்வு - கிராம் ரூ.7,300-க்கு விற்பனை

Saturday January 11, 2025 , 2 min Read

ஆபரணத் தங்கத்தின் விலை மென்மேலும் அதிகரித்து வருவது, நகை வாங்க விழைவோருக்கு கவலை தரும் தகவலாக உள்ளது. கடந்த மூன்று தினங்களில் மட்டும் சவரனுக்கு ரூ.600-க்கு மேல் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் வெள்ளிக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.25 உயர்ந்து ரூ.7,285 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.200 உயர்ந்து ரூ.58,280 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.27 உயர்ந்து ரூ.7,947 ஆகவும், சவரன் விலை ரூ.216 உயர்ந்து ரூ.63,576 ஆகவும் இருந்தது. இந்த விலை உயர்வு தொடர்ந்து நீடிக்கிறது.

தங்கம் விலை நிலவரம் - சனிக்கிழமை (11.1.2025):

சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.15 உயர்ந்து ரூ.7,300 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.120 உயர்ந்து ரூ.58,400 ஆகவும் உள்ளது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.17 உயர்ந்து ரூ.7,964 ஆகவும், சவரன் விலை ரூ.136 உயர்ந்து ரூ.63,712 ஆகவும் உள்ளது.

வெள்ளி விலை:

சென்னையில் இன்று (11.1.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.101 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,01,000 ஆகவும் மாற்றமின்றி விற்பனை ஆகிறது.

gold

காரணம் என்ன?

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. தற்போது டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி கண்டுள்ளது. அதேபோல், சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை சற்றே உயர்ந்துள்ளதாலும், பண்டிகை காலம் என்பதாலும் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,300 (ரூ.15 உயர்வு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.58,400 (ரூ.120 உயர்வு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,954 (ரூ.17 உயர்வு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.63,712 (ரூ.136 உயர்வு)

தங்கம் விலை @ மும்பை

Edited by Induja Raghunathan