Gold Rate Chennai - மளமளவென சரியும் தங்கம் விலை; இன்றைய விலை என்ன?
வாரத்தின் இரண்டாவது நாளான இன்றும் தங்கத்தின் விலை கணிசமான அளவு குறைந்துள்ளது நகைப்பிரியர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வாரத்தின் இரண்டாவது நாளான இன்றும் தங்கத்தின் விலை கணிசமான அளவு குறைந்துள்ளது நகைப்பிரியர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னையில் நேற்றைய வர்த்தகத்தின் இறுதியில், 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 4,947 ரூபாய்க்கும், சவரன் 39,328 ரூபாய்க்கும் விற்பனையானது.
இன்றைய நிலவரப்படி, (செவ்வாய் கிழமை), 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 31 ரூபாய் குறைந்து 4,916 ரூபாயாகவும், சவரனுக்கு 248 ரூபாய் குறைந்து 39,328 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
இன்றைய மார்க்கெட் நிலவரப்படி, 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராம் ஒன்றிற்கு 31 ரூபாய் குறைந்து 5,318 ரூபாய்க்கும், சவரனுக்கு 248 ரூபாய் குறைந்து 42,544 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி கிராமிற்கு 10 காசுகள் குறைந்து ஒரு கிராம் 68 ரூபாய்க்கும் கிலோவிற்கு 100 ரூபாய் குறைந்து 68,100 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
சரிவுக்கான காரணம் என்ன?
உலகிலேயே தங்கம் நுகர்வில் மிகப்பெரிய நாடாக உள்ள சீனாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினந்தோறும் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் பரவலை தடுக்க தலைநகர் பெய்ஜிங் உட்பட முக்கிய நகரங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இதனால் சீனாவில் தங்கத்தின் தேவை குறைந்ததை அடுத்து விலையில் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் முதலீட்டாளர்கள் தங்கத்தை விட டாலரில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது.
முக்கிய நகரங்களின் தங்கம் விலை நிலவரம்:
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 4,916 (மாற்றம்: ரூ.31 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.39,328 (மாற்றம்: ரூ.248 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5,318 (மாற்றம்: ரூ.31 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 42,544 (மாற்றம்: ரூ.248 குறைவு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.4,846 (மாற்றம்: ரூ.10 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.38,768 (மாற்றம்: ரூ.80 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5,288 (மாற்றம்: ரூ.10 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.42,304 (மாற்றம்: ரூ.80 குறைவு)
கடந்த இரு நாட்களில் மட்டும் தங்கம் விலை ரூ.258 வரை விலை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.