Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

Gold Rate Chennai: தங்கம் விலை சரிவு - நீடிக்குமா விலை குறைவு போக்கு?

ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் சற்றே குறைந்துள்ளது, நகை வாங்க விரும்புவோருக்கு ஆறுதலைத் தந்துள்ளது. ஆனால், இந்த விலை குறைவு போக்கு நீடிப்பது சந்தேகமே.

Gold Rate Chennai: தங்கம் விலை சரிவு - நீடிக்குமா விலை குறைவு போக்கு?

Monday September 30, 2024 , 2 min Read

ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் சற்றே குறைந்துள்ளது, நகை வாங்க விரும்புவோருக்கு ஆறுதலைத் தந்துள்ளது. ஆனால், இந்த விலை குறைவு போக்கு நீடிப்பது சந்தேகமே.

சென்னையில் சனிக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.5 குறைந்து ரூ.7,095 ஆகவும், சவரன் விலை ரூ.40 குறைந்து ரூ.56,760 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.5 குறைந்து ரூ.7,740 ஆகவும், சவரன் விலை ரூ.40 குறைந்து ரூ.61,920 ஆகவும் இருந்தது. இந்நிலையில், இன்றும் ஓரளவு விலை குறைந்துள்ளது.

தங்கம் விலை நிலவரம் - திங்கள்கிழமை (30.9.2024):

சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.15 குறைந்து ரூ.7,080 ஆகவும், சவரன் விலை ரூ.120 குறைந்து ரூ.56,640 ஆகவும் இருக்கிறது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.16 குறைந்து ரூ.7,724 ஆகவும், சவரன் விலை ரூ.128 குறைந்து ரூ.61,792 ஆகவும் இருந்தது.

வெள்ளி விலை:

சென்னையில் இன்று (30.9.2024) 1 கிராம் வெள்ளி விலை 10 பைசா குறைந்து ரூ.100.90 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.100 குறைந்து ரூ.1,00,900 ஆகவும் விற்பனையாகிறது.

காரணம் என்ன?

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. செப்டம்பர் மூன்றாம் வாரத்தில் அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை குறைத்தது. இதனால், தங்கம் மீதான முதலீடு அதிகரிக்கத் தொடங்கியது. உலக அளவில் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளதுடன், இந்தியாவில் இது பண்டிகை காலம் என்பதால் ஆபரணத் தங்கம் விலை உயரத் தொடங்கியது.

இந்நிலையில், இன்று கடந்த இரண்டு வர்த்தக தினங்களாக தங்கம் விலையில் ஏற்றம் இல்லாமல் சற்றே இறங்குமுகம் தென்படுகிறது. இது, பல்வேறு அரசியல் காரணங்களால் முதலீட்டாளர்களிடம் நிலவும் தடுமாற்றமே காரணமாக கருதப்படுகிறது. எனவே, இந்த விலை குறைவு போக்கு நீடிக்க வாய்ப்பு இல்லை என வர்த்தகர்கள் கணிக்கின்றனர்.

மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.7,500 வரையும், ஒரு சவரன் ரூ.60,000 எனும் அளவுக்கும் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாக வர்த்தகர்கள் கருதுகின்றனர்.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,080 (ரூ.15 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.56,640 (ரூ.120 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,724 (ரூ.16 குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.61,792 (ரூ.128 குறைவு)

தங்கம் விலை @ மும்பை

Edited by Induja Raghunathan