Gold Rate Chennai: சற்றே குறைந்தது தங்கம் விலை - சவரனுக்கு ரூ.120 குறைவு!
கடந்த சில நாட்களாக கடுமையாக அதிகரித்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை சற்றே குறைந்திருப்பது நகை வாங்க விழைவோருக்கு ஆறுதலைத் தந்துள்ளது.
கடந்த சில நாட்களாக கடுமையாக அதிகரித்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை சற்றே குறைந்திருப்பது நகை வாங்க விழைவோருக்கு ஆறுதலைத் தந்துள்ளது.
சென்னையில் வெள்ளிக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.60 உயர்ந்து ரூ.7,450 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.480 உயர்ந்து ரூ.59,600 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.65 உயர்ந்து ரூ.8,127 ஆகவும், சவரன் விலை ரூ.520 உயர்ந்து ரூ.65,016 ஆகவும் இருந்தது.
தங்கம் விலை நிலவரம் - சனிக்கிழமை (18.1.2025):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.15 குறைந்து ரூ.7,435 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.120 குறைந்து ரூ.59,480 ஆகவும் உள்ளது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.16 குறைந்து ரூ.8,111 ஆகவும், சவரன் விலை ரூ.128 குறைந்து ரூ.64,888 ஆகவும் உள்ளது.
வெள்ளி விலை:
சென்னையில் இன்று (18.1.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.104 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,04,000 ஆகவும் மாற்றம் இன்றி விற்பனை ஆகிறது.
காரணம் என்ன?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. தற்போது டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு இப்போது வரலாறு காணாத வீழ்ச்சி கண்டுள்ளது. சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை உயர்ந்து வருவதும் ஆபரணத் தங்கத்தின் விலை பெரிய அளவில் குறையாததற்கு காரணம்.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,435 (ரூ.15 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.59,480 (ரூ.120 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,111 (ரூ.16 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.64,888 (ரூ.128 குறைவு)
தங்கம் விலை @ மும்பை

Edited by Induja Raghunathan