Gold Rate Chennai: இனி தொடக்கூட முடியாது? அசுர வேகத்தில் அதிகரிக்கும் தங்கம் விலை!
வாரத்தின் தொடக்கம் முதலே ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வரும் தங்கத்தின் விலை இன்றும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது நடுத்தர குடும்பத்தினரையும், நீண்ட நாட்களாக நகை வாங்க காத்திருந்தோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வாரத்தின் தொடக்கம் முதலே ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வரும் தங்கத்தின் விலை இன்றும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது நடுத்தர குடும்பத்தினரையும், நீண்ட நாட்களாக நகை வாங்க காத்திருந்தோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னையில் நேற்றைய வர்த்தகத்தின் இறுதியில், 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 5,023 ரூபாய்க்கும், சவரன் 40,184 ரூபாய்க்கும் விற்பனையானது.
இன்றைய நிலவரப்படி, (வெள்ளி கிழமை), 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 24 ரூபாய் அதிகரித்து 5,047 ரூபாயாகவும், சவரனுக்கு 192 ரூபாய் அதிகரித்து 40,376 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
இன்றைய மார்க்கெட் நிலவரப்படி, 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராம் ஒன்றிற்கு 24 ரூபாய் அதிகரித்து 5,449 ரூபாய்க்கும், சவரனுக்கு 192 ரூபாய் அதிகரித்து 43,592 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் தாறுமாறாக உயர ஆரம்பித்துள்ளது. வெள்ளியை பொறுத்தவரை கிராமிற்கு ஒரு ரூபாய் 20 காசுகள் உயர்ந்து 72 ரூபாய் 50 காசுகளுக்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை 1,200 ரூபாய் அளவிற்கு உயர்ந்து 72,500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
உயர்வுக்கான காரணம் என்ன?
மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் ஸ்பாட் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி, ஒரு அவுன்ஸ் 10.37 டாலர் உயர்ந்து 1,797.53 டாலராக வர்த்தகம் செய்யப்பட்டது. அதே நேரத்தில், ஸ்பாட் வெள்ளியின் விலை 0.58 டாலர்கள் உயர்ந்து அவுன்ஸ் 23.31 டாலராக உள்ளது. அமெரிக்காவின் டாலர் மதிப்பு மற்றும் கருவூல விளைச்சல் பலவீனமடைந்ததைத் தொடர்ந்து முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் மீது திரும்பியுள்ளது.
முக்கிய நகரங்களின் தங்கம் விலை நிலவரம்:
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,047 (மாற்றம்: ரூ.24 அதிகரிப்பு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.40,376 (மாற்றம்: ரூ.192 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5,449 (மாற்றம்: ரூ.24 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.43,592 (மாற்றம்: ரூ.192 அதிகரிப்பு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.4,950 (மாற்றம்: ரூ.25 அதிகரிப்பு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.39,600 (மாற்றம்: ரூ.200 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5,400 (மாற்றம்: ரூ.28 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.43,200 (மாற்றம்: ரூ.224 அதிகரிப்பு)