Gold Rate Chennai: இரு நாட்களில் ரூ.1,160 குறைந்த தங்கம் விலையில் மாற்றம் இல்லை!
கடந்த இரு வர்த்தக தினங்களில் ரூ.1,160 அளவுக்கு குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை தற்போது மாற்றமின்றி அப்படியே நீடிப்பது நகை வாங்க விரும்புவோருக்கு நல்ல வாய்ப்பாக கருதப்படுகிறது.
கடந்த இரு வர்த்தக தினங்களில் ரூ.1,160 அளவுக்கு குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை தற்போது மாற்றமின்றி அப்படியே நீடிப்பது நகை வாங்க விரும்புவோருக்கு நல்ல வாய்ப்பாக கருதப்படுகிறது.
சென்னையில் சனிக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.90 குறைந்து ரூ.7,140 ஆகவும், சவரன் விலை ரூ.720 குறைந்து ரூ.57,120 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலையும் குறைந்து சவரன் ரூ.62,312-க்கு விற்பனையானது. இதனால், வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை என இரு வர்த்தக தினங்களில் ரூ.1,160 அளவுக்கு ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்திருந்தது.
தங்கம் விலை நிலவரம் - திங்கள்கிழமை (16.12.2024):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.7,140 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.57,120 ஆகவும் மாற்றமின்றி நீடிக்கிறது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.7,789 ஆகவும், சவரன் விலை ரூ.62,312 ஆகவும் மாற்றமின்றி நீடிக்கிறது.
வெள்ளி விலை:
சென்னையில் இன்று (16.12.2024) 1 கிராம் வெள்ளி விலை ரூ.100 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,00,000 ஆகவும் மாற்றம் ஏதுமின்றி விற்பனையாகிறது.
காரணம் என்ன?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. டாலர் மதிப்பு வலுவாக இருப்பதால் பிற நாட்டு பணத்தில் தங்கத்தில் முதலீடு செய்வது அதிக செலவினம் ஆகும். இதனையடுத்து, தங்கத்திற்கான தேவை குறைவதால் விலையும் குறைகிறது. உள்நாட்டுத் தங்கம் தேவை குறைபாடும் விலை குறைவதற்கு ஒரு காரணம்.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,140 (மாற்றம் இல்லை)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.57,120 (மாற்றம் இல்லை)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,789 (மாற்றம் இல்லை)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.62,312 (மாற்றம் இல்லை)
தங்கம் விலை @ மும்பை

Edited by Induja Raghunathan