கோத்தாரி இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷனில் கத்தார் நிறுவனம் முதலீடு!
சென்னையைச் சேர்ந்த கோத்தாரி இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷனில் (KICL), கத்தார் நாட்டின் அரசக் குடும்பத்துடன் தொடர்புடைய நிறுவனம், 10 சதவீத பங்குகளை கையகப்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த கோத்தாரி இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷனில் (KICL), கத்தார் நாட்டின் அரசக் குடும்பத்துடன் தொடர்புடைய நிறுவனம், முதலீடு செய்து, 10 சதவீத பங்குகளை கையகப்படுத்த இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
ஃபலா ஜசிம் ஜே.எம். ஏஎல்-தனி உரிமையாளராக உள்ள எப்.ஜே. குலோபல் அன்ட் இன்வெஸ்ட்மண்ட் நிறுவனம் (FJ Global and Investment) கே.சி.சி.எல் நிறுவனத்தில் 7,056,000 பங்குகளை வாங்குகிறது. பங்கு ஒன்றுக்கு ரூ.5 எனும் முக மதிப்பில், ரூ.25 எனும் விலையில் பங்குகளை வாங்க இயக்குனர் குழுமம் அனுமதி அளித்துள்ளது.
கே.ஐ.சி.எல் நிறுவனத்தின் தற்போதைய புரோமோட்டர் ரஃபிக் அகமது, தனது 47 சதவீத பங்குகளை தக்க வைக்க முதலீட்டை அதிகரிக்க இருப்பதகாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கத்தார் நாட்டில் கூட்டு நிறுவனம் அமைக்கவும் கே.ஐ.சி.எல் இயக்குனர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. புதிய நிறுவனம் 70 சதவீதம் கே.ஐ.சி.எல்லுக்கு சொந்தமாகவும், 30 சதவீதம் ஏஎல்- தானி நிறுவனத்திற்கு சொந்தமாக இருக்கும். இந்நிறுவனம், வாய்ப்புகளை கண்டறிந்து நிறுவனத்தின் உலகலாவிய விரிவாக்கத்தில் கவனம் செலுத்தும். இதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.
மேலும், பங்குதாரர்கள் அனுமதிக்கு உட்பட்டு, கே.ஐ.சி.எல்லின் அங்கீகரிக்கப்பட்ட பங்கு மூலதனத்தை ரூ.25 கோடியில் இருந்து ரூ.75 கோடியாக அதிகரிக்கவும் இயக்குனர் குழு உத்தேசித்துள்ளது.
பீனிக்ஸ் கோத்தாரி புட்வியர் நிறுவனத்தில் அகமதுவின் 30 சதவீத பங்குகளை கையகப்படுத்தவும் கே.ஐசி.எல் திட்டமிட்டுள்ளது. இதுவும் அனுமதிக்கு உட்பட்டது. இந்த தோல் அல்லாத காலணி ஆலை பெரம்பலூரில் அமைந்துள்ளது.
Edited by Induja Raghunathan