Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

Gold Rate Chennai: சைலைன்ட் மோடுக்கு சென்ற தங்கம், வெள்ளி விலை!

வாரத்தின் முதல் நாளான இன்று எவ்வித மாற்றமும் இன்றி சைலைன்ட் மோடுக்குச் சென்றிருப்பது நகை வாங்குவோருக்கு ஆறுதல் தகவலாக உள்ளது.

Gold Rate Chennai: சைலைன்ட் மோடுக்கு சென்ற தங்கம், வெள்ளி விலை!

Monday January 06, 2025 , 2 min Read

கடந்த வர்த்தக தினத்தில் ஆபரணத் தங்கம் விலை சற்றே குறைந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று எவ்வித மாற்றமும் இன்றி சைலைன்ட் மோடுக்குச் சென்றிருப்பது நகை வாங்குவோருக்கு ஆறுதல் தகவலாக உள்ளது.

சென்னையில் சனிக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.45 குறைந்து ரூ.7,215 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.360 குறைந்து ரூ.57.720 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.49 குறைந்து ரூ.7,871 ஆகவும், சவரன் விலை ரூ.392 குறைந்து ரூ.62,968 ஆகவும் இருந்தது.

தங்கம் விலை நிலவரம் - திங்கள்கிழமை (6.1.2025):

சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.7,215 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.57.720 ஆகவும் மாற்றமின்றி விற்பனை ஆகிறது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.7,871 ஆகவும், சவரன் விலை ரூ.62,968 ஆகவும் மாற்றமின்றி விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை:

சென்னையில் இன்று (6.1.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.99 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.90,000 ஆகவும் மாற்றமின்றி விற்பனை ஆகிறது.

gold

காரணம் என்ன?

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. தற்போது டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி கண்டுள்ளது. எனினும், சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை சற்றே குறைந்துள்ளது, ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றம் இல்லாததற்கு காரணமாக உள்ளது.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,215 (மாற்றமில்லை)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.57.720 (மாற்றமில்லை)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,871 (மாற்றமில்லை)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.62,968 (மாற்றமில்லை)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,215 (மாற்றமில்லை)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.57.720 (மாற்றமில்லை)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,871 (மாற்றமில்லை)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.62,968 (மாற்றமில்லை)


Edited by Induja Raghunathan