Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

Gold Rate Chennai: தங்கம் விலை மீண்டும் உச்சம் - ரூ.7,100-ஐ தொட்டது கிராம் விலை!

ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சைலன்ட் மோடில் இருந்த நிலையில், இன்று மீண்டும் புதிய உச்சம் கண்டுள்ளது. இது நகை வாங்க விரும்புவோருக்கு மென்மேலும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Gold Rate Chennai: தங்கம் விலை மீண்டும் உச்சம் - ரூ.7,100-ஐ தொட்டது கிராம் விலை!

Friday September 27, 2024 , 2 min Read

ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சைலன்ட் மோடில் இருந்த நிலையில், இன்று மீண்டும் புதிய உச்சம் கண்டுள்ளது. இது நகை வாங்க விரும்புவோருக்கு மென்மேலும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் நேற்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.7,060 ஆகவும், சவரன் விலை ரூ.56,480 ஆகவும் மாற்றமின்றி இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.7,702 ஆகவும், சவரன் விலை ரூ.61,616 ஆகவும் மாற்றமின்றி இருந்தது. தற்போது மீண்டும் விலை உயர்வுடன் புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது தங்கம் விலை.

தங்கம் விலை நிலவரம் - வெள்ளிக்கிழமை (27.9.2024):

சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.40 உயர்ந்து ரூ.7,100 ஆகவும், சவரன் விலை ரூ.56,800 ஆகவும் இருக்கிறது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.43 உயர்ந்து ரூ.7,745 ஆகவும், சவரன் விலை ரூ.344 உயர்ந்து ரூ.61,960 ஆகவும் இருக்கிறது.

வெள்ளி விலை:

சென்னையில் வெள்ளிக்கிழமை (27.9.2024) 1 கிராம் வெள்ளி விலை ஒரு ரூபாய் உயர்ந்து ரூ.102 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1000 உயர்ந்து ரூ.1,02,000 ஆகவும் விற்பனையாகிறது.

gold

காரணம் என்ன?

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. அண்மையில், அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை குறைத்தது. இதனால், தங்கம் மீதான முதலீடு அதிகரிக்கத் தொடங்கியது. உலக அளவில் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளதுடன், இந்தியாவில் இது பண்டிகை காலம் என்பதால் ஆபரணத் தங்கம் விலை உயரத் தொடங்கியுள்ளது. இந்தப் போக்கு இப்படியே நீடிக்கும் பட்சத்தில், இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.7,500 வரையும், ஒரு சவரன் ரூ.60,000 எனும் அளவுக்கும் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாக வர்த்தகர்கள் கருதுகின்றனர்.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,100 (ரூ.40 உயர்வு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.56,800 (ரூ.320 உயர்வு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,745 (ரூ.43 உயர்வு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.61,960 (ரூ.344 உயர்வு)

தங்கம் விலை @ மும்பை

Edited by Induja Raghunathan