Gold Rate Chennai: சர்ப்ரைஸ் கொடுத்த தங்கம் விலை; சவரனுக்கு ரூ.320 குறைவு!
தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கம் விலை இன்று யாருமே எதிர்பார்க்காத வகையில் சரிந்துள்ளது.
தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கம் விலை இன்று யாருமே எதிர்பார்க்காத வகையில் சரிந்துள்ளது.
தங்கம் விலை நிலவரம் (16/12/2023):
கடந்த சில நாட்களாக கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை புதிய உச்சம் தொட்டது. இதனால் அதிருப்தியில் இருந்த மக்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில் வாரத்தின் கடைசி நாளான இன்று தங்கம் விலை கணிசமான அளவு குறைந்துள்ளது.
சென்னையில் நேற்றைய வர்த்தகத்தின் போது, 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 5,830 ரூபாய்க்கும், சவரன் 46,640 ரூபாய்க்கும் விற்பனையானது.
இன்றைய நிலவரப்படி, (சனிக்கிழமை) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு 40 ரூபாய் குறைந்து 5,790 ரூபாய்க்கும், சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து 46,320 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
அதேபோல், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமிற்கு 40 ரூபாய் குறைந்து 6,260 ரூபாய்க்கும், சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து 50,080 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
தங்கத்தை போலவே வெள்ளி விலையும் இன்று கணிசமான அளவு அதிகரித்துள்ளது. வெள்ளி கிராமிற்கு 80 காசுகள் குறைந்து 79 ரூபாய் 70 காசுகளுக்கும், கிலோவிற்கு 800 ரூபாய் குறைந்து 79 ஆயிரத்து 700 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
சரிவுக்கான காரணம் என்ன?
பங்குச்சந்தை மீது முதலீட்டாளர்கள் கவனம் திரும்பி இருப்பது, தொடர் விடுமுறையை முன்னிட்டு தங்கம் வாங்குவதற்கான தேவை குறைந்துள்ளதும் விலை சற்றே சரிய காரணம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,790 (மாற்றம்: ரூ.40 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.46,320 (மாற்றம்: ரூ.320 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.6,260 (மாற்றம்: ரூ.40 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.50,080 (மாற்றம்: ரூ.320 குறைவு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,730 (மாற்றம்: ரூ.45 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.45,840 (மாற்றம்: ரூ.360 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.6,251 (மாற்றம்: ரூ.49 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.50,008 (மாற்றம்: ரூ.392 குறைவு)