Gold Rate Chennai - சரசரவென உயரும் தங்கம் விலை; சவரன் எவ்வளவு தெரியுமா?
கடந்த சில நாட்களைப் போலவே இன்றும் தங்கத்தின் விலை கணிசமான அளவு உயர்ந்துள்ளது.
கடந்த சில நாட்களைப் போலவே இன்றும் தங்கத்தின் விலை கணிசமான அளவு உயர்ந்துள்ளது.
சென்னையில் நேற்று மாலை நிலவரப்படி தங்கம் விலை கிராமிற்கு 5 ரூபாய் வரை அதிகரித்து 4 ஆயிரத்து 730 ரூபாய்க்கும், சவரனுக்கு 40 ரூபாய் வரை அதிகரித்து 37, 840 ரூபாய்க்கு விற்பனையானது.
இன்று (வெள்ளிக்கிழமை) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து, 4,735 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. அதேபோல் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்து 37,880 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
இதேபோல் நேற்று 24 காரட் சுத்த தங்கம் ஒரு கிராம் 5,132 ரூபாய்க்கும், ஒரு சவரன் 41, 056 ரூபாய்க்கும் விற்பனையான நிலையில், இன்று சுத்த தங்கத்தின் விலையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இன்றைய மார்க்கெட் நிலவரப்படி 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராம் ஒன்றிற்கு 5 ரூபாய் அதிகரித்து, 5,137 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. அதேபோல் சவரனுக்கு 40 ரூபாய் வரை அதிகரித்து 41,096 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்று வெள்ளியின் விலையும் சற்றே அதிகரித்துக் காணப்படுகிறது. வெள்ளி கிராமிற்கு 80 காசுகள் வரை அதிகரித்து, 60.30 ரூபாய்க்கும், கிலோவிற்கு 800 ரூபாய் அதிகரித்து 60 ஆயிரத்து 300 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
காரணம்: செப்டம்பர் மாதம் நடக்க உள்ள அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி கூட்டத்தில் மீண்டும் 75 புள்ளிகள் வரை வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. எனவே முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையின் நிலையற்ற தன்மையை கருத்தில் கொண்டு, தங்கத்தில் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளதால் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது.
முக்கிய நகரங்களின் நிலவரம்:
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.4, 735 (மாற்றம்: ரூ. 5 அதிகரிப்பு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.37,880(மாற்றம்: ரூ.40 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5, 137 (மாற்றம்: ரூ. 11 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 40,800 (மாற்றம்: ரூ.88 அதிகரிப்பு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.4,675 (மாற்றம்: ரூ.10 அதிகரிப்பு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.37,400 (மாற்றம்: ரூ.80 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5,100 (மாற்றம்: ரூ. 27 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.40., 712 (மாற்றம்: ரூ.216 அதிகரிப்பு)