Gold Rate Chennai: இன்று தங்கம் வாங்க நல்ல சான்ஸ் - சவரனுக்கு ரூ.320 குறைவு!
தங்கம் விலை இன்று கணிசமான அளவு குறைந்துள்ளது நகை வாங்க காத்திருப்போருக்கு நல்வாய்ப்பாக அமைந்துள்ளது.
தங்கம் விலை இன்று கணிசமான அளவு குறைந்துள்ளது நகை வாங்க காத்திருப்போருக்கு நல்வாய்ப்பாக அமைந்துள்ளது.
தங்கம் விலை நிலவரம் (08/06/2023)
கடந்த சில நாட்களாகவே அதிகரித்து வந்த தங்கம் விலை இன்று ஒரே நாளில் அதிரடியாக குறைந்துள்ளது நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னையில் நேற்றைய வர்த்தகத்தின் போது, 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 5,605 ரூபாய்க்கும், சவரன் 44,840 ரூபாய்க்கும் விற்பனையானது.
இன்றைய நிலவரப்படி, (வியாழன் கிழமை) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து 5,565 ரூபாயாகவும், சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து 44,520 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
இன்றைய மார்க்கெட் நிலவரப்படி, 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து 6,030 ரூபாயாகவும், சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து 48,240 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
தங்கத்தை போலவே இன்று வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது வெள்ளி விலை கிராமிற்கு 10 காசுகள் குறைந்து 77 ரூபாய் 70 காசுகளுக்கும், கிலோவிற்கு 100 ரூபாய் குறைந்து 77 ஆயிரம் 700 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
சரிவுக்கான காரணம் என்ன?
ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் ரெப்போ வட்டி விகிதம் குறித்த அறிவிப்பிற்காக முதலீட்டாளர்கள் காத்திருந்ததால் தங்கத்தின் மீதான முதலீடுகள் சரிந்தது. இதனால் இன்று தங்கத்தின் விலை கணிசமான அளவு குறைந்தது குறிப்பிடத்தக்கது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,565 (மாற்றம்: ரூ.40 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.44,520 (மாற்றம்: ரூ.320 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.6,030 (மாற்றம்: ரூ.40 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 48,240 (மாற்றம்: ரூ.320 குறைவு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,520 (மாற்றம்: ரூ.40 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.44,160 (மாற்றம்: ரூ.320 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.6,022 (மாற்றம்: ரூ.43 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 48,176 (மாற்றம்: ரூ.344 குறைவு)