Gold Rate Chennai: குறைந்தது தங்கம் விலை; நகை வாங்க சூப்பர் சான்ஸ்!
நேற்று அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை இன்று சரசரவென சரிந்து சவரனுக்கு 35 ரூபாய் வரை குறைந்துள்ளது.
நேற்று அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை இன்று சரசரவென சரிந்து சவரனுக்கு 35 ரூபாய் வரை குறைந்துள்ளது.
தங்கம் விலை நிலவரம் (27/01/2023)
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே இறங்குவது, ஏறுவதுமாக போக்கு காட்டி வந்த நிலையில், நேற்று வரலாறு காணாத உச்சகமாக 43 ஆயிரத்தை நெருங்கி தொட்டது. இந்நிலையில், இன்று நகை வாங்கக் காத்திருப்போருக்கு நல்வாய்ப்பாக தங்கத்தின் விலை கணிசமான அளவு குறைந்துள்ளது.
சென்னையில் நேற்றைய வர்த்தகத்தின் இறுதியில், 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 5,380 ரூபாய்க்கும், சவரன் 43,040 ரூபாய்க்கும் விற்பனையானது.
இன்றைய நிலவரப்படி, (வெள்ளி கிழமை), 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து 5,345 ரூபாயாகவும், சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து 42,760 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
இன்றைய மார்க்கெட் நிலவரப்படி, 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராம் ஒன்றிற்கு 35 ரூபாய் குறைந்து 5,707 ரூபாய்க்கும், சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து 45,656 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தை போலவே வெள்ளியின் விலையிலும் இன்று அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது. வெள்ளியின் விலை கிராமிற்கு 40 காசுகள் குறைந்து 74 ரூபாய் 60 காசுகளுக்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை 400 ரூபாய் குறைந்து ஒரு கிலோ 74 ஆயிரத்து 600 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
சரிவுக்கான காரணம் என்ன?
சுப முகூர்ந்த தினத்தை முன்னிட்டு நேற்று தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவாக சவரன் 43 ஆயிரத்திற்கும் அதிகமாக உயர்ந்தது. இன்று உள்நாட்டு தேவை காரணமாக தங்கம் விலை நேற்று ஏறிய அதே அளவு இன்று சரிந்துள்ளது.
முக்கிய நகரங்களின் தங்கம் விலை நிலவரம்:
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,345 (மாற்றம்: ரூ.35 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.42,760 (மாற்றம்: ரூ.280 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5,707 (மாற்றம்: ரூ.35 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 45,656 (மாற்றம்: ரூ.280 குறைவு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,250 (மாற்றம்: ரூ.60 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.42,000 (மாற்றம்: ரூ.480 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5,727 (மாற்றம்: ரூ.66 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 45,816 (மாற்றம்: ரூ.528 குறைவு)