Gold Rate Chennai: உச்சம் தொட்ட தங்க விலை - சவரன் ரூ.43,000-த்தை கடந்து விற்பனை!
இன்று இந்திய பங்குச்சந்தையானது கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 43 ஆயிரத்தைக் கடந்து உச்சம் தொட்டுள்ளது.
தங்கம் விலை நிலவரம் (08/02/2023)
ஜனவரியில் ஏற்ற, இறக்கத்துடன் பயணித்த தங்கத்தின் விலை, பிப்ரவரி மாதம் பிறந்தது முதலே கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இன்று தங்கத்தின் விலை யாருமே எதிர்பாராத அளவிற்கு சவரனுக்கு 43 ஆயிரத்தைக் கடந்து நடுத்தர மக்களையும், நகை வாங்கக் காத்திருந்தோரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னையில் நேற்றைய வர்த்தகத்தின் போது, 22 காரட் ஆபரணத் தங்கம்
கிராம் 5,373 ரூபாய்க்கும், சவரன் 42,984 ரூபாய்க்கும் விற்பனையானது.
இன்றைய நிலவரப்படி, (செவ்வாய் கிழமை), 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்து 5,383 ரூபாயாகவும், சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து 43,064 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
இன்றைய மார்க்கெட் நிலவரப்படி, 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராம் ஒன்றிற்கு 10 ரூபாய் அதிகரித்து 5,745 ரூபாய்க்கும், சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து 45,960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளியின் விலையில் தொடர்ந்து 2வது நாளாக எவ்வித மாற்றமும் இன்றும் ஒரு கிராம் 74 ரூபாய்க்கும், ஒரு கிலோ 74 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
திடீர் உயர்வுக்கு காரணம் என்ன?
அமெரிக்க வேலை வாய்ப்பு தரவுகள் ஃபெடரல் வங்கி மீண்டும் குறைவான அளவிலேயே வட்டி விகிதத்தை உயர்த்தக்கூடும் என்பதும், டாலர் குறியீட்டு எண்ணின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவது தங்கத்தின் மீதான முதலீடுகளை அதிகரித்து வருகிறது. முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுவதால் அதன் மீதான முதலீடு அதிகரிக்க, அதிகரிக்க சர்வதேச அளவில் விலையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் இன்று, தங்கம் 10 கிராமுக்கு ரூ. 215 அல்லது 0.38 சதவீதம் அதிகரித்து ரூ.57,170க்கு வர்த்தகம் செய்யப்பட்டது. வெள்ளி ஒரு கிலோவுக்கு ரூ.75 குறைந்து ரூ.67,324 ஆக உள்ளது.
முக்கிய நகரங்களின் தங்கம் விலை நிலவரம்:
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,383 (மாற்றம்: ரூ.10 அதிகரிப்பு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.43,064 (மாற்றம்: ரூ.80 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5,745 (மாற்றம்: ரூ.10 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 45,960 (மாற்றம்: ரூ.80 அதிகரிப்பு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,275 (மாற்றமில்லை)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.42,200 (மாற்றமில்லை)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5,755 (மாற்றமில்லை)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 46,040 (மாற்றமில்லை)