Gold Rate Chennai: என்ன ஒரு ஆச்சர்யம்; இன்றைய தங்கம் விலையில் மாற்றம் இல்லை!

வாரத்தின் முதல் நாளான இன்று தங்கத்தின் விலை எவ்வித மாற்றமும் இன்றி நேற்றைய விலையே நீடித்து வருகிறது.

Gold Rate Chennai: என்ன ஒரு ஆச்சர்யம்; இன்றைய தங்கம் விலையில் மாற்றம் இல்லை!

Monday January 30, 2023,

2 min Read

வாரத்தின் முதல் நாளான இன்று தங்கத்தின் விலை எவ்வித மாற்றமும் இன்றி நேற்றைய விலையே நீடித்து வருகிறது.

தங்கம் விலை நிலவரம் (30/01/2023)

ஜனவரி மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், இன்று யாருமே எதிர்பாராத அளவிற்கு தங்கம் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி, கடந்த சனிக்கிழமை இருந்த விலையே நீடித்து வருகிறது.


சென்னையில் கடந்த வார வர்த்தகத்தின் இறுதியில், 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 5,350 ரூபாய்க்கும், சவரன் 42,800 ரூபாய்க்கும் விற்பனையானது.

இன்றைய நிலவரப்படி, (திங்கள் கிழமை), 22 காரட் ஆபரண தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி, ஒரு கிராம் 5,350 ரூபாய்க்கும், ஒரு சவரன் 42,800 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. அதேபோல், 24 காரட் தங்கத்தின் விலையிலும் எவ்வித மாற்றமும் இன்றி, ஒரு கிராம் 5,712 ரூபாய்க்கும், சவரன் 45,696 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
gold

தங்கத்தின் விலையை போல் அல்லாமல் வெள்ளியின் விலையும் கணிசமான அளவு அதிகரித்துள்ளது. வெள்ளியின் விலை கிராமிற்கு 50 காசுகள் அதிகரித்து 74 ரூபாய் 70 காசுகளுக்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை 500 ரூபாய் அதிகரித்து ஒரு கிலோ 74 ஆயிரத்து 700 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

திடீர் மாற்றத்திற்கான காரணம் என்ன?

2023ம் ஆண்டுக்கான முதல் அமெரிக்க ஃபெடரல் வங்கியின் கூட்டத்தில் வட்டி விகிதம் தொடர்பாக என்ன மாதிரியான முடிவு எடுக்கப்படும் என்பதில் முதலீட்டாளர்கள் கவனம் செலுத்தி வருவது தங்கம் விலையை நிலையானதாக மாற்றியுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில், தங்கம் 10 கிராமுக்கு ரூ.50 அல்லது 0.09% குறைந்து ரூ.57,229க்கு வர்த்தகம் செய்யப்பட்டது. சில்வர் மார்ச் ஃபியூச்சர்ஸில் 141 ரூபாய் உயர்ந்து ஒரு கிலோ ரூ.68,470-க்கு வர்த்தகம் செய்யப்பட்டது.


ஃபெடரல் வங்கியின் வட்டி விகித அறிவிப்பு மற்றும் இந்தியாவில் பட்ஜெட் கூட்டத்தொடர் அறிவிப்புகளை பொறுத்து தங்கம் விலை மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.


முக்கிய நகரங்களின் தங்கம் விலை நிலவரம்:


தங்கம் விலை @ சென்னை


> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,350 (மாற்றமில்லை)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.42,800(மாற்றமில்லை)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5,712 (மாற்றமில்லை)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 44,880 (மாற்றமில்லை)


தங்கம் விலை @ மும்பை


> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,265 (மாற்றமில்லை)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.42,120 (மாற்றமில்லை)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5,744 (மாற்றமில்லை)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 45,952 (மாற்றமில்லை)

Daily Capsule
Ashneer Grover launches Crickpe app
Read the full story