ஜோஹோ அறிமுகம் செய்த யுபிஐ பணப்பரிவர்த்தனை தளம் 'Zoho Payments'
Zoho Payments UPI, 35-க்கும் மேற்பட்ட நெட் பேங்கிங் விருப்பங்கள் மற்றும் கிரெடிட்/டெபிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்துவதைப் பாதுகாப்பாக ஏற்றுக்கொள்ள வணிகங்களுக்கு உதவுகிறது.
SaaS துறையின் பெரிய நிறுவனமான ஜோஹோ, ‘ஜோஹோ பேமண்ட்ஸ்’ (Zoho Payments) என்னும் யுபிஐ பணம் செலுத்தும் தளத்தை அறிமுகம் செய்துள்ளது. இது பிசினஸ் டு பிசினஸ் பேமண்ட்ஸ்களுக்கான ஒரு தீர்வு.
சென்னையை தளமாகக் கொண்ட நிறுவனம், NPCI பாரத் பில்பே (NBBL) நிறுவனத்திலிருந்து பாரத் பில் பேமென்ட் சிஸ்டம் (BBPS) மூலம் இயங்கும் இன்வாய்ஸ் மேலாண்மை மற்றும் பரிவர்த்தனைகளை மேம்படுத்தும் B2B கட்டண அம்சங்களை வெளியிட்டுள்ளது. மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற 'குளோபல் ஃபின்டெக் ஃபெஸ்ட்' 2024 இன் போது Zoho இந்த சேவையை அறிமுகப்படுத்தியது.
இது தொடர்பாக ஜோஹோ நிதி அதிகாரி சிவராம கிருஷ்ணன் ஈஸ்வரன் கூறும்போது,
“ஜோஹோவில், வணிகத்திற்கான நிதி, வங்கி மற்றும் பணம் செலுத்துதல் ஆகியவை ஒன்றாகச் செயல்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். முன்னணி வங்கிகளுடன் ஒருங்கிணைந்து, எங்கள் நிதி பயன்பாடுகள் முழுவதும் எங்களது ‘இணைக்கப்பட்ட வங்கி’ தீர்வை அறிமுகப்படுத்தியுள்ளோம். இன்று ஜோஹோ பேமெண்ட்ஸ் தொடங்கப்பட்டதன் மூலம், B2B கட்டணத் திறன்களுடன், நாங்கள் எங்கள் இலக்கை எட்டுவோம்,” என்றார்.
2018-19ல் ரூ.3,134 கோடியாக இருந்த டிஜிட்டல் பேமெண்ட் பரிவர்த்தனைகளின் அளவு 2023ல் ரூ.11,660 கோடியாக உயர்ந்துள்ளது என்று நிதி அமைச்சகம் வழங்கிய தரவுகள் தெரிவிக்கின்றன.
Zoho Payments UPI, 35-க்கும் மேற்பட்ட நெட் பேங்கிங் விருப்பங்கள் மற்றும் கிரெடிட்/டெபிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்துவதைப் பாதுகாப்பாக ஏற்றுக்கொள்ள வணிகங்களுக்கு உதவுகிறது. இது மோசடி தவிர்ப்பு, பரிவர்த்தனை நுண்ணறிவு, பணத்தைத் திரும்பப் பெறுதல், பணம் செலுத்துவதில் தோல்விகளைக் கையாளுதல் மற்றும் தகராறுகளைத் திறமையாக நிர்வகித்தல் போன்ற அம்சங்களையும் வழங்குகிறது.
கூடுதலாக, இந்த புதிய அம்சம் ஜோஹோவின் நிதி மற்றும் செயல்பாட்டுத் தொகுப்பில் கட்டமைக்கப்பட்டுள்ளது, இதில் பில்லிங் மற்றும் இன்வாய்ஸ்கள் அடங்கும். இதன் வணிகங்கள் கட்டணத் தீர்வோடு இணைக்கப்பட்டு, தனித்தனி மூன்றாம் தரப்புக் கணக்குகளை அமைக்கவோ அல்லது பிற கட்டண நுழைவாயில்களுடன் ஒருங்கிணைக்கவோ தேவையில்லாமல், ஆன்லைன் பேமெண்ட்டுகளை விரைவாக ஏற்கத் தொடங்க முடியும்.
ஜோஹோ பேமெண்ட்ஸ் ஒரு பேமெண்ட் திரட்டியாக NBBL உடன் பாரத் பில் பேமென்ட் ஆப்பரேட்டிங் யூனிட்டாக பதிவு செய்யப்பட்டுள்ளது, இது BBPS நெட்வொர்க்கில் வாங்கும் விற்கும் வாடிக்கையாளர்களுக்கு Zoho Payments-ஐ செயல்படுத்துகிறது மற்றும் B2B பேமெண்ட்டுகளை எளிதாக்குகிறது.