SGX Nifty-க்கு குட்பை; இனி Gift Nifty - கிஃப்ட் நிஃப்டி என்றால் என்ன? அதனை சரிபார்ப்பது எப்படி?
SGX நிஃப்டி இன்று கிஃப்ட் நிஃப்டி என்ற புதிய அவதாரத்திற்கு மாறியுள்ளது. அதன்படி, 7.5 பில்லியன் டாலர் வர்த்தகம் சிங்கப்பூர் பரிமாற்றத்திலிருந்து குஜராத்தின் காந்திநகரில் உள்ள NSE சர்வதேச பரிவர்த்தனைக்கு (NSE IX) மாறியுள்ளது. SGX நிஃப்டி ஃபியூச்சர்ஸ் ஒப்பந்தங்கள் இன்று முதல் கிஃப்ட் நிஃப்டி என மறுபெயர
SGX Nifty இன்று கிஃப்ட் நிஃப்டி என்ற புதிய அவதாரத்திற்கு மாறியுள்ளது. அதன்படி, 7.5 பில்லியன் டாலர் வர்த்தகம் சிங்கப்பூர் பரிமாற்றத்திலிருந்து குஜராத்தின் காந்திநகரில் உள்ள NSE சர்வதேச பரிவர்த்தனைக்கு (NSE IX) மாறியுள்ளது. SGX நிஃப்டி ஃபியூச்சர்ஸ் ஒப்பந்தங்கள் இன்று முதல் 'Gift Nifty' என மறுபெயரிடப்பட்டுள்ளன.
SGX Nifty என்பது சிங்கப்பூரில் வர்த்தகம் செய்யப்படும் நிஃப்டி டெரிவேட்டிவ் ஒப்பந்தங்கள் ஆகும். அவற்றின் மதிப்பு 7.5 பில்லியன் டாலர்கள். இப்போது இந்த ஒப்பந்தங்களை சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
துபாய், மொரிஷியஸ், சிங்கப்பூர் போன்ற உலகளாவிய நிதி மையங்களுக்கு போட்டியாக குஜராத்தை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, குஜராத்தில் புதிய நிதி மையம் அமைக்கப்பட்டுள்ளது. குஜராத்தின் காந்திநகரில் புதிதாக வடிவமைக்கப்பட்ட நிதி மையத்தில் 'கிஃப்ட்'நிஃப்டி' செயல்பாடுகள் இன்று முதல் தொடங்கியுள்ளது.
கிஃப்ட் நிஃப்டி என்றால் என்ன?
கிஃப்ட் நிஃப்டி என்பது எஸ்ஜிஎக்ஸ் நிஃப்டியின் புதிய பெயரே தவிர மற்றபடி எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. SGX இல் உள்ள அனைத்து திறந்த நிலைகளும் இன்று முதல் NSE IXக்கு மாற்றப்பட்டுள்ளன.
நிஃப்டி ஃபியூச்சர் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்கள் இப்போது சிங்கப்பூர் பரிமாற்றத்திற்குப் பதிலாக GIFT City SEZ இல் அமைந்துள்ள NSE IX இல் வர்த்தகம் செய்யப்படும். NSE IX சர்வதேச நிதிச் சேவை மைய ஆணையத்தின் (IFSCA) ஒழுங்குமுறை கட்டமைப்பின் கீழ் செயல்படுகிறது.
கிஃப்ட் நிஃப்டி நேரம்:
தற்போது எஸ்ஜிஎக்ஸ் நிஃப்டி 16 மணி நேரம் வேலை செய்கிறது. எஸ்ஜிஎக்ஸ் நிஃப்டி இந்திய நேரப்படி காலை 6:30 மணி முதல் இரவு 10:30 மணி வரை செயல்பட்டு வந்தது. இப்போது கிஃப்ட் நிஃப்டி.. காலை 4 மணி முதல் மறுநாள் அதிகாலை 2 மணி வரை, அதாவது, 22 மணி நேரம் வேலை செய்யும். திங்கட்கிழமை முதல், அனைத்து அமெரிக்க-நிஃப்டி டெரிவேட்டிவ் ஒப்பந்தங்களும் NSE IFSC இல் பிரத்தியேகமாக வர்த்தகம் செய்யப்படும்.
இதன் வர்த்தகம் ஆசியா, ஐரோப்பா, அமெரிக்க வர்த்தக நேரங்களையும் உள்ளடக்கியது. முதல் அமர்வு காலை 6.30 மணி முதல் மாலை 3.40 மணி வரையிலும், இரண்டாவது அமர்வு மாலை 4.35 மணி முதல் அதிகாலை 2.45 மணி வரையிலும் என இரண்டு அமர்வுகளாக திறக்கப்படும்.
இந்தியாவிற்கான SGX நிஃப்டியை GIFT Nifty ஆக மாற்றுவதன் முக்கியத்துவம்?
- கிஃப்ட் நிஃப்டி நான்கு தயாரிப்புகள் தொடர்பான டெரிவேட்டிவ் ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளது. அவையாவன; கிஃப்ட் நிஃப்டி 50, கிஃப்ட் நிஃப்டி பேங்க், கிஃப்ட் நிஃப்டி பைனான்சியல் சர்வீசஸ், கிஃப்ட் நிஃப்டி ஐ.டி.
- NSE IX ஒரு SEZ (சிறப்பு பொருளாதார மண்டலம்) இல்லிருந்து செயல்படுவதால், முதலீட்டாளர்கள் STT, கமாடிட்டி பரிவர்த்தனை வரி, டிவிடெண்ட் விநியோக வரி விலக்கு, மூலதன ஆதாய வரி விலக்கு கிடைக்கும்.
- இது ஒரு பங்குச் சந்தையில் இருந்து மற்றொரு பங்குச் சந்தைக்கு இடம்பெயர்வதால், சில்லறை வர்த்தகர்கள்/முதலீட்டாளர்களுக்கு நேர்மறை/எதிர்மறை தாக்கம் இருக்காது.
- NSE-SGX இணைப்பு இந்திய சந்தைகள் உலகளாவிய முதலீட்டாளர்களிடையே, குறிப்பாக இந்திய மூலதனச் சந்தைகளுடன் நேரடியாக ஈடுபடாதவர்களையும் இந்திய பங்குச்சந்தை நோக்கி திரும்ப வைக்கும்.
- முன்னதாக, SGX நிஃப்டி இந்திய சந்தையின் ஆரம்ப குறிகாட்டியாக கருதப்பட்டு வந்த நிலை, இன்று முதல் மாறுகிறது.
Stock News: வரலாற்றிலேயே முதன் முறையாக 65,000-ஐ கடந்த சென்செக்ஸ் - காரணம் என்ன?