Stock News: வரலாற்றிலேயே முதன் முறையாக 65,000-ஐ கடந்த சென்செக்ஸ் - காரணம் என்ன?
இந்திய பங்குச்சந்தையானது தொடர்ந்து புதிய உச்சத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
இந்திய பங்குச்சந்தையானது தொடர்ந்து புதிய உச்சத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
பங்குச்சந்தை நிலவரம் (03/07/2023):
தொடர்ந்து இந்திய பங்குச்சந்தையானது வரலாறு காணாத உச்சத்துடன் விற்பனையாகி வருவது முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தற்போதைய வர்த்தக நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 324.10 புள்ளிகள் அதிகரித்து 65,029 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 87.55 புள்ளிகள் உயர்ந்து 19,276 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.
உயர்வுக்கான காரணங்கள்:
தொடர்ந்து 4வது நாளாக இந்திய பங்குச்சந்தை புதிய உச்சத்துடன் வர்த்தகமாகி வருகிறது. குறிப்பாக இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் முதன் முறையாக 65 ஆயிரத்தை கடந்து வர்த்தமாகி வருகிறது.
உலக அளவில் நிலவும் பொருளாதார சூழ்நிலையும், வெளிநாட்டு நிறுவன முதலீடுகள் அதிகரிப்பும் இந்திய பங்குச்சந்தை புதிய உச்சத்தை எட்ட காரணமாக அமைந்துள்ளது.
ஒருபுறம் ஆசிய சந்தைகளில் சியோல், டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங் ஆகியவை பச்சை வண்ணத்தில் வர்த்தமாகி வருவதும், மறுபுறம் அமெரிக்க பங்குச்சந்தையின் ஏற்றமும் இந்திய பங்குச்சந்தைக்கு சாதகமாக அமைந்துள்ளது.
ஏற்றம் கண்ட பங்குகள்:
ஹெச்டிஎஃப்சி
ஹெச்டிஎஃப்சி பேங்க்
மஹிந்திரா & மஹிந்திரா
அல்ட்ராடெக் சிமெண்ட்
டாடா ஸ்டீல்
பஜாஜ் ஃபைனான்ஸ்
பாரத ஸ்டேட் பேங்க்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
பஜாஜ் ஃபின்சர்வ்
ஐசிஐசிஐ பேங்க்
இறக்கம் கண்ட பங்குகள்:
பவர் கிரிட்
மாருதி
டெக் மஹிந்திரா
இண்டஸ்இண்ட் பேங்க்
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
ஆக்சிஸ் பேங்க்
இந்திய ரூபாயின் மதிப்பு: அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 33 காசுகள் உயர்ந்து 81.77 ஆக உள்ளது.