இ-காமர்ஸ் தளங்களில் இனி போலி ஆன்லைன் ரிவ்யூக்களுக்கு ‘செக்’ - அரசின் அதிரடி விதிமுறைகள்!

By Kani Mozhi
November 25, 2022, Updated on : Fri Nov 25 2022 11:34:27 GMT+0000
இ-காமர்ஸ் தளங்களில் இனி போலி ஆன்லைன் ரிவ்யூக்களுக்கு ‘செக்’ - அரசின் அதிரடி விதிமுறைகள்!
ஆன்லைன் தளங்களில் போலியான ரிவ்யூக்களை தடுக்க புதிய மத்திய அரசு அதிரடி விதிமுறைகளை இன்று முதல் நடைமுறைப்படுத்தியுள்ளது.
  • +0
    Clap Icon
Share on
close
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

ஆன்லைன் தளங்களில் போலியான ரிவ்யூக்களை தடுக்க புதிய மத்திய அரசு அதிரடி விதிமுறைகளை இன்று முதல் நடைமுறைப்படுத்தியுள்ளது.

குவியும் போலி ரிவ்யூக்கள்:

அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் தளங்களில் பொருட்களின் தரம் குறித்து வாடிக்கையாளர்கள் கொடுக்கும் கமெண்ட்கள் தான் அந்த பொருட்கள் மீதான நம்பகத் தன்மையை அதிகரிக்க உதவுகிறது.


எனவே, இ-காமர்ஸ் தளங்கள் மூன்றாம் தரப்பு நிறுவனங்களைக் கொண்டு பணம் கொடுத்து எழுதப்பட்ட கருத்துக்களை வாங்குகின்றனர். இதனால் வாடிக்கையாளர்கள் மத்தியில் போலி கருத்துக்கள் தொடர்பான அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


இ-காமர்ஸ் இணையதளங்கள் மற்றும் ஹோட்டல்கள் மற்றும் பயண முன்பதிவு தளங்களில் பதிவிடப்படும் இதுபோன்ற போலி ரிவ்யூ அல்லது முறையாக மதிப்பிடப்படாத ரேட்டிங் வாடிக்கையாளர்கள் மோசமான பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்க காரணமாக அமைகிறது.


எனவே, நுகர்வோர் விவகாரங்கள் துறையானது போலியான மதிப்புரைகளைச் சரிபார்ப்பதற்கான விதிமுறைகளை இன்று முதல் அமல்படுத்தியுள்ளது.

Fake

ஆன்லைன் தளங்கள் வழிகாட்டுதல்களை முறையாக பின்பறுகிறதா என்பதை BIS-யில் சரிபார்த்து சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம். ஒருவேளை இதைப் பின்பற்றாமல், தவறான வணிக நடைமுறைகளைப் பின்பற்றினால், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் குறிப்பிட்ட வலைதளம் மேல் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியும்.


இந்த வழிகாட்டுதல்கள் இ-காமர்ஸ் மற்றும் சமூக ஊடக தளங்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார செயலாளர் ரோஹித் குமார் சிங் கூறுகையில்,

"இதுபோன்ற வழிகாட்டுதல்களைக் கொண்டு வந்த முதல் நாடு இந்தியா. 30 நாட்கள் பொது ஆலோசனைக்குப் பிறகு விதிமுறைகள் இறுதி செய்யப்பட்டுள்ளது,” எனத் தெரிவித்துள்ளார்.

ரிவ்யூ வழிகாட்டுதல்கள்:

இ-காமர்ஸ் தளங்களில் பொருட்களை வாங்கும் நுகர்வோர்களை பாதுகாக்கும் நோக்கத்துடன் இந்த விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. னெனில் e-commerce என்பது ஒரு மெய்நிகர் ஷாப்பிங் அனுபவத்தை உள்ளடக்கியது என்பதால், தயாரிப்பைப் பார்க்கவோ அல்லது பரிசோதிக்கவோ எந்த வாய்ப்பும் இல்லை.


வாடிக்கையாளர்கள் e-commerce தளங்களில் வெளியிடப்படும் ரிவ்யூக்களை வைத்தே பொருட்களை மதிப்பிட முடியும்.

fake

எனவே தான் நுகர்வோர் விவகாரத் துறை கடந்த ஜூன் 10 அன்று போலியான ரிவ்யூக்களை சரிபார்க்க ஒரு கட்டமைப்பை உருவாக்க குழு ஒன்றினை அமைத்தது. இதில் இ-காமர்ஸ் நிறுவனங்கள், தொழில் சங்கங்கள், சட்ட தலைவர்கள் மற்றும் நுகர்வோர் அமைப்புகள் போன்றோர் இடம் பெற்றிருந்தனர்.

வழிகாட்டுதல்கள் நுகர்வோர் மதிப்புரைகள், மதிப்பாய்வு ஆசிரியர், அனுபவ தேதி, கோரப்படாத மதிப்பாய்வு, கோரப்பட்ட மதிப்பாய்வு மற்றும் மறுஆய்வு நிர்வாகி ஆகியவற்றை வரையறுக்கின்றன, என சிங் கூறினார்.

தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் சப்ளையர்கள் உட்பட, தங்கள் சொந்த வாடிக்கையாளர்களிடமிருந்து மதிப்புரைகளை சேகரிக்கும் நுகர்வோர் மதிப்புரைகளை ஆன்லைனில் வெளியிடும் எந்தவொரு நிறுவனமும் அல்லது மூன்றாம் தரப்பினரால் ஒப்பந்தம் செய்யப்பட்ட நுகர்வோர் கருத்துக்கள் ஆன்லைனில் வெளியிடும் நிறுவனத்திற்கும் இந்த தரநிலைகள் பொருந்தும்.

fake

நுகர்வோர் விவாகரத்துறை செயலாளர் ரோஹித் குமார் சிங்

நுகர்வோர் செயலாளர் ரோஹித் குமார் சிங் கூறுகையில்,

"போலி மதிப்புரைகள் அச்சுறுத்தலாக மாறுவதாக எங்களுக்கு புகார்கள் வந்துள்ளன. அமெரிக்க அமைப்பான FTC போலி மதிப்புரைகளுக்கு எதிராக விதிகளை உருவாக்குவதையும் ஆராய்ந்து வருகிறது. இ-காமர்ஸ் முக்கியத்துவம் வாய்ந்த அனைத்து நாடுகளும் போலி மதிப்புரைகளைக் கண்காணிக்கும். தொழில்துறை தன்னைத்தானே சீரமைக்க இந்த வழிகாட்டுதல்களை நாங்கள் முதலில் உருவாக்குவோம். போலி மதிப்புரைகளின் அச்சுறுத்தல் தொடர்ந்தால் மட்டுமே அவற்றை கட்டாயமாக்குவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும்," என்றார்.

மேலும் இந்த வழிமுறைகளை அனைத்து வலைதளங்களும் பின்பற்றுவது கட்டாயமானது இல்லை. இந்த போலி ரிவ்யூக்கள் பிரச்னை தொடருமானால், பின்னர் இந்த வழிமுறைகள் தீவிரமாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த புதிய விதிமுறைகள் ஆன்லைன் வர்த்தகத்தில் நேர்மையான விற்பனையை கொண்டு வர உதவும் என நம்புவதாக நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எங்கள் வார நியூஸ்லெட்டர் பெற