கால்டாக்சி மேடைகளில் பணிபுரியும் ஓட்டுனர்களின் வருமானத்தில் ஜிஎஸ்டி விலக்கு - மத்திய அரசை வலியுறுத்த தமிழக அரசுக்கு ஓட்டுனர்கள் சங்கம் கோரிக்கை!
இணைய கால்டாக்சி மேடைகளில், சந்தா சார்ந்த மாதிரியை தேர்வு செய்துள்ள ஓட்டுனர்களின் வருமானத்தின் மீது ஜிஎஸ்டி விதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய மத்திய அரசை வலியுறுத்துமாறு தமிழ்நாடு அரசுக்கு உரிமைக்குரல் ஓட்டுனர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது
இணைய கால்டாக்சி மேடைகளில், சந்தா சார்ந்த மாதிரியை தேர்வு செய்துள்ள ஓட்டுனர்களின் வருமானத்தின் மீது ஜிஎஸ்டி விதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய மத்திய அரசை வலியுறுத்துமாறு தமிழ்நாடு அரசுக்கு உரிமைக்குரல் ஓட்டுனர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஜிஎஸ்டி விதிக்கப்படுவது ஏற்கனவே பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வரும் ஓட்டுனர்களுக்கு மேலும் சிக்கலை உண்டாக்கும், என சங்கம் தெரிவித்துள்ளது. இந்த பணியின் தனித்தன்மையை அங்கீகரிக்கும் வகையில் போதுமான நஷ்ட ஈடு மற்றும் ஆதரவு மிக்க கட்டுப்பாடு விதிகள் தேவை என்றும் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பாக உரிமைக்குரல் ஓட்டுனர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதன் பொது செயலாளர் ஜாகீர் உசேன்,
"பல ஓட்டுனர்கள் பாரம்பரிய கமிஷன் முறையில் இருந்து, சந்தா முறைக்கு மாறியிருப்பதாகவும், இது ஓட்டுனர்கள் சேமிப்பை அதிகரிக்க உதவுகிறது," என்றும் தெரிவித்துள்ளார்.
சந்தா முறையின் கீழ், ஓட்டுனர்கள் கால்டாக்சி நிறுவனங்களுக்கு கமிஷன் அளிப்பதற்கு பதில், குறிப்பிட்ட கட்டணம் செலுத்த வழி செய்கிறது. இது 100 சதவீத வருமானத்தை தக்க வைக்க உதவுவதோடு, கால்டாக்சி நிறுவனங்களின் அல்கோரிதம், வழிகாட்டுதல் ஆகியவற்றை பயன்படுத்திக்கொள்ள வழி செய்கிறது.
இந்த முறை ஓட்டுனர்களின் நிதி ஸ்திரத்தன்மைக்கு உதவுகிறது. இந்த முறை மீது ஜிஎஸ்டி விதிக்கப்பட்டால், பலரால் அதை சமாளிக்க முடியாது. இந்த முறையில் பெறப்படும் வருமானம் தனிப்பட்ட வருமானமாக கருதப்பட வேண்டும், என ஜாகீர் உசேன் தெரிவித்துள்ளார். எனவே இதற்கு ஜிஎஸ்டி விலக்கு தேவை என வேண்டுகோள் விடுத்துள்ளார். ஓட்டுனர்களை இது மிகவும் பாதிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த முறை பெண் ஓட்டுனர்களுக்கு ஏற்றதாக இருப்பதாகவும் கூறியுள்ளார். ஜிஎஸ்டி மூலமான செலவு அதிகரிப்பு பெண் ஓட்டுனர்களை அதிகம் பாதிக்கும், என்றும் கூறியுள்ளார்.
எனவே, இது தொடர்பான மத்திய அரசை தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Edited by Induja Raghunathan