Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

ஆதரவற்றோரை மீட்டு பரமாரிக்கும் நல்லுள்ளம் படைத்த தன்னார்வலர்!

ஜார்ஜ் ராகேஷ் பாபு `குட் சமரிடன்ஸ் ட்ரஸ்ட்’ தொடங்கி ஆதவற்றோரை மீட்டு பராமரித்து வருவதுடன் ஏராளமான நற்பணிகளையும் செய்து வருகிறார்.

ஆதரவற்றோரை மீட்டு பரமாரிக்கும் நல்லுள்ளம் படைத்த தன்னார்வலர்!

Monday May 31, 2021 , 3 min Read

சுதந்திரமாக வெளியில் சுற்றித் திரிந்த காலமெல்லாம் கனவு போலாகிவிட்டது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்கவும் வெளியில் நடமாடவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.


ஆனால் எல்லோராலும் இது சாத்தியமா? ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கி சேமித்துவைத்துக் கொள்வது எல்லோராலும் சாத்தியப்படுமா? சம்பாதித்துப் பணத்தை சேமித்து வைத்திருப்பவர்கள் அத்தியாவசியப் பொருட்களை வீட்டில் வாங்கி சேமிக்கலாம், தினக்கூலிகள் என்ன செய்வார்கள்?


அதேபோல் வீடு இருப்பவர்கள் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கலாம்., ஆனால் தங்குமிடம், உணவு, குடிநீர் என எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் தவிக்கும் ஏராளமானோர் இருக்கிறார்கள் அல்லவா? இவர்கள் நிலை என்ன?


இவர்களுக்கு உதவுகிறார் நல்லுள்ளம் படைத்த ஜார்ஜ் ராகேஷ் பாபு. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இதுபோன்ற உதவிகளைச் செய்து வருகிறார்.

1

கணேஷ் பிரபு என்கிற பூசாரிக்கு ஜார்ஜ் அவ்வப்போது உதவி வந்தார். கணேஷ் பிரபு 60-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகளைப் பராமரித்து வந்தார். இவரது குடும்பத்தினரோ உறவினர்களோ இவருக்கு உதவிக்கரம் நீட்டவில்லை.


கணேஷின் தன்னலமற்ற சேவையைக் கண்டு ஜார்ஜுக்கும் உந்துதல் பிறந்தது. அவரைப் போன்றே மக்கள் சேவையில் ஈடுபட எண்ணினார். வேலையை விட்டு விலகினார். கணேஷை மருத்துவமனையில் சேர்த்து கவனித்துக்கொண்டார். கணேஷ் குணமடைந்து ஆதரவற்றோர் இல்லத்திற்குத் திரும்பியபோது அங்கு அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கணேஷ் இருப்பிடமின்றி தவித்தார்.


இதற்கிடையில் கணேஷ் கவனித்துக்கொண்ட ஆதரவற்ற சிறுவர்களை ஜார்ஜ் மற்ற ஆதரவற்றோர் இல்லங்களுக்கு அனுப்பிவைத்தார். இந்தச் சூழலில் கணேஷ் உயிரிழந்த செய்தி கேட்டு ஜார்ஜ் அதிர்ந்துபோனார்.

“கணேஷ் உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ந்தேன். சக மனிதர்களிடம் அன்பு காட்டி சேவை செய்து வந்த அந்த நல்ல மனிதரை மரியாதையுடன் அடக்கம் செய்வதும்கூட போராட்டமாக இருந்தது வேதனையளித்தது,” என்று வருத்தம் தெரிவித்தார் ஜார்ஜ்.
குட் சமரிடன்ஸ் ட்ரஸ்ட்

கணேஷிற்கு ஏற்பட்ட நிலைமை வேறு யாருக்குமே ஏற்படக்கூடாது என்கிற நோக்கத்துடன் 2008-ம் ஆண்டு அதிகாரப்பூர்வமற்ற முறையில் குட் சமரிடன்ஸ் ட்ரஸ்ட் பணிகளைத் தொடங்கினார். மக்களுக்கு அடிப்படை சுகாதாரப் பராமரிப்பு வழங்க ஹைதராபாத்தில் இலவச கிளினிக் திறந்தார்.

2

2011-ம் ஆண்டு ஜார்ஜ், அவரது மனைவி சுனிதா ஜார்ஜ், ட்ரஸ்டி யேசுகலா ஆகியோர் இணைந்து ட்ரஸ்டை அதிகாரப்பூர்வமாக நிறுவினார்கள். இன்று இந்த ட்ரஸ்ட் ஆதரவற்றோர்களுக்கு நல்வாழ்வு வழங்கும் மையமாக இயங்கி வருகிறது.

ட்ரஸ்ட் செய்து வரும் உதவிகள்

குட் சமரிடன்ஸ் ட்ரஸ்ட் ஆதரவற்றோரை மீட்கிறது. அவர்களது உடல்நிலை, தேவை, குடும்பம், இந்த நிலைக்கு ஆளானதன் காரணம் போன்ற விவரங்களைக் கேட்டறிகின்றனர். அவர்களால் நினைவுகூற முடிகிறதா என்பதைக் கவனித்து குடும்பத்தினரைக் கண்டுபிடிக்க முயற்சி செய்கின்றனர். குடும்பத்தினரைக் கண்டறிய முடிந்தால் அவர்களுடன் சேர்த்து வைக்கிறார்கள்.


இதுதவிர மருத்துவமனையில் ஆதரவின்றி தவிக்கும் நோயாளிகளுக்கும் இவர்கள் உதவுகிறார்கள்.

“அரசு மருத்துவமனைகளில் ஆதரவின்றி சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளுக்கு உணவு வழங்குகிறோம். சிகிச்சைக்குப் பிறகுத் தேவைப்படும் பராமரிப்பை வழங்குகிறோம். குடும்பத்தினரைத் தொடர்புகொள்ள முடிந்தால் அவர்களது உடல்நிலை குறித்துத் தெரிவிக்கிறோம். எங்கள் சமூகப் பணியாளர்களில் ஒருவர் அவர்களை கூட்டிச் சென்று குடும்பத்தினரிடம் ஒப்படைத்து விடுவார்,” என்று ஜார்ஜ் விவரித்தார்.

இயற்கைப் பேரிடர் காலங்களில் ஜார்ஜ் குழுவினர் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான நிவாரணங்களை ஏற்பாடு செய்கிறார்கள்.

3

ஊரடங்கு சமயத்தில் நிதி திரட்டி மளிகை, என்95 மாஸ்க் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் ஏழை மக்களுக்கும் விநியோகித்துள்ளனர். இவர்களுக்கு உணவளித்ததுடன் தொற்று குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளனர்.

“தற்போது ஆக்சிஜன் சிலிண்டர் தேவைப்படும் ஏழை கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிகன் கான்சண்ட்ரேட்டர், ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கி விநியோகித்து வருகிறோம்,” என்றார்.

ட்ரஸ்ட் ஏற்படுத்தியுள்ள தாக்கம்

ஹைதராபாத், வாராங்கல், அலயர் ஆகிய பகுதிகளில் உள்ள மூன்று குட் சமரிடன்ஸ் ட்ரஸ்ட்கள் கிட்டத்தட்ட 150 பேர்களைப் பராமரித்து வருகிறது. இதுவரை கிட்டத்தட்ட 75 பேர் குடும்பத்துடன் மீண்டும் இணைய உதவியுள்ளது. பெருந்தொற்று பரவல் அச்சுறுத்தல் காரணமாக பலர் ஆதரவற்றோருக்கு அடைக்கலம் கொடுக்கத் தயங்கும் சூழலில் இந்த ட்ரஸ்ட் இதுவரை 300–க்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளது.

”கடந்த ஆண்டு இடப்பற்றாக்குறை காரணமாக குறைந்த நபர்களுக்கே ஆதரவளிக்க முடிந்தது. ஆனால் என்னுடைய முயற்சியைக் கண்டு ஒரு பில்டிங் வாங்க அரசாங்கம் உதவியுள்ளது. இதனால் மேலும் பலருக்கு என்னால் உதவ முடியும்,” என்கிறார்.

ஆதரவற்றோர் இல்லத்தில் தஞ்சமடைந்து உடல்நிலைத் தேறியவர்கள், இந்த இல்லத்திலேயே தங்கியிருந்து ஜார்ஜின் சேவையில் பங்களிக்கிறார்கள்.

சில நிறுவனங்கள் என்95 மாஸ்க், ஆக்சிஜன் கான்சண்ட்ரேட்டர் ஆகியவற்றை வாங்க நன்கொடை அளித்துள்ளன. ஜார்ஜ் சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டராக (Para legal volunteer) வேலை செய்கிறார். இதன் மூலம் சம்பாதிக்கும் தொகையையும் சமூக நலப் பணிகளுக்காகவே செலவிடுகிறார்.

மேலும், சட்டம் சார்ந்த தன்னார்வலப் பணிகளில் ஈடுபடும்போது மக்களிடம் தன்னுடைய நோக்கத்தையும் பகிர்ந்துகொள்கிறார்.

4

ஜார்ஜின் சேவை பலருக்கு உந்துதலாக அமைந்துள்ளது. இதுபோன்ற மக்கள் நலப் பணிகளில் ஈடுபட பலர் ஆர்வம் காட்டுகிறார்கள் என்றாலும் ஆதரவற்றோரை மீட்பதில் இருக்கும் சட்டரீதியான நடவடிக்கைகள் பலருக்குத் தெரிவதில்லை. எனவே இதுபோன்ற ஆர்வலர்கள் சட்டரீதியாக மக்கள் சேவையில் ஈடுபட அவர் உதவுகிறார்.

”நான் பலருக்கு பயிற்சியளித்துள்ளேன். பலர் சொந்தமாக நிறுவனம் தொடங்கியுள்ளார்கள். எனக்கு எப்படி நன்கொடை கிடைக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வதில் பலர் ஆர்வம் காட்டுகிறார்கள். 'நல்ல நோக்கத்தை முன்னிறுத்தி பணியாற்றுங்கள்; உதவி தானாக உங்களைத் தேடி வரும்’ என்பதே இவர்களுக்கு என்னுடைய பதிலாக இருக்கும்,” என்கிரார் ஜார்ஜ்.

ஆங்கில கட்டுரையாளர்: அஞ்சு அன் மேத்யு | தமிழில்: ஸ்ரீவித்யா