Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

நீண்ட இடைவெளிக்குப் பின் பெண்கள் வேலைக்கு திரும்ப உதவும் ’Her Second Innings'

200க்கும் மேற்பட்ட பெண்கள் 2018-ல் வேலைக்கு திரும்ப ’ஹெர் செகண்ட் இன்னிங்க்ஸ்’ உதவியுள்ளது!

நீண்ட இடைவெளிக்குப் பின் பெண்கள் வேலைக்கு திரும்ப உதவும் ’Her Second Innings'

Monday May 27, 2019 , 2 min Read

பெங்களூரூவைச் சேர்ந்த 'ஹெர் செகண்ட் இன்னிங்க்ஸ்' (’Her Second Innings' ) அமைப்பு, பெண்கள் பொருளாதார ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் தனித்து இயங்கவும், சமூக வலிமையோடு இருக்கவும் உதவுகிறது. இந்த வீடியோ இண்டர்வ்யூவில், அதன் நிறுவனர் மஞ்சுளா தர்மலிங்கம் எப்படி இதை சாதிக்கிறார் என்பது பற்றி பேசுகிறார்.

இந்தியாவில் உழைக்கும் பெண்களின் நிலையை அறிந்து கொள்ள ஹெர்ஸ்டோரி நடத்திய ‘வுமன் இன் வொர்க் ஃபோர்ஸ்’ ஆய்வில், இரண்டாம் அடுக்கு நகரமாக (tier 2 city) இருந்தாலும், நகர்ப்புறமாக இருந்தாலும், பெண்கள் பணியிடத்தில் சந்திக்கும் சவால்கள் ஒன்று போலவே இருக்கின்றன என்கிறது. பணியிடம் கூடுதல் ’உட்படுத்துதல்’ (inclusive ) மற்றும் ‘வேற்றுமை’ (diverse)  நிறைந்ததாக இருக்க அதிகளவு வேலைகள் செய்ய வேண்டும் என அத்தனை பேரும் ஒரு மனதாக சொல்லியிருக்கிறார்கள்.  

இந்தியாவில் வேலை செய்யும் பெண்கள் சமாளிக்கும் சிக்கல்கள் வேற்றுமை மற்றும் சமத்துவம் தொடர்பானவை மட்டுமல்லாமல் பெரிய அளவில் இருக்கிறது. பொருளாதாரம் வளர்ந்து கொண்டிருந்தாலும், பெண்கள் வேலைவாய்ப்பு விகிதம் குறைவாகவே இருக்கிறது. 2017-18 இந்திய பொருளாதார ஆய்வின் முடிவுகளை பாருங்கள்.  

இந்த ஆய்வின் படி, பெண் உழைப்பாளர்களின் பங்களிப்பு 2005-06ல் 36 சதவிகிதமாக இருந்தது, 2015-16ல் 24 சதவிகிதமாக குறைந்திருக்கிறது. வாய்ப்புகள் இன்மை, பாலின பாகுபாடு உட்பட இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஆனாலும், ஓரு நம்பிக்கை இருக்கதான் செய்கிறது.

ஹெர் செகண்ட் இன்னிங்ஸ்!

பெங்களூரூவைச் சேர்ந்த ஹெர் செகண்ட் இன்னிங்க்ஸ், பெண்களை திரும்பவும் பணிக்குக் கொண்டு வரும் நோக்கில் இயங்கிக் கொண்டிருக்கிறது. பெண்கள் ஒரு நீண்ட விடுப்பிற்கு பிறகு தங்கள் வேலையை தொடரவும்,  பொருளாதார ரீதியாகவும், மனோரீதியாகவும் தனித்து இயங்கி, சமூக அளவில் வலிமையடையவும் இந்நிறுவனம் உதவுகிறது.

ஹெர் செகண்ட் இன்னிங்க்ஸின் குழு!

“பெண்களை உழைப்பிற்கு திரும்பவும் கொண்டு செல்வது தான் இந்தத் தளத்தின் நோக்கம். எங்கள் நிறுவனத்தின் பெயர் சொல்வது போலவே, ஒரு பெண் பெரிய விடுப்பு எடுத்த பிறகு திரும்பவும் வேலைக்கு வருவது கடினமாக இருக்கும்,” என்கிறார் மஞ்சுளா தர்மலிங்கம், ஹெர் செகண்ட் இன்னிங்க்ஸின் நிறுவனர்.

“நாங்கள் எடுத்துக் கொண்ட சவால்களில் அது ஒன்று. அது ஏன் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான சவாலாக இருக்க வேண்டும்? அவர்கள் வேலையை கொஞ்சம் எளிதாக்குவோம் என நினைத்தோம்,” என்கிறார்.

ஹெர் செகண்ட் இன்னிங்க்ஸ் குழு

கூடவே, “ பெண்கள் திரும்பவும் வேலைக்கு சேரும் முன்னர் தங்கள் திறனை நினைவுபடுத்தி சீராக்கிக் கொள்ள ஒரு தளத்தை நாங்கள் உருவாக்கினோம்” என்கிறார்.

மஞ்சுளாவின் பயணம் தடைகள் நிறைந்தது.

“நான் ஐ.டி பின்புலத்தை சேர்ந்தவள். பெரிய அளவில் தோற்றது பொருளாதார சந்தையில் தான், என ‘ஹெர் செகண்ட் இன்னிங்க்ஸை’ மும்பையில் தொடங்கிய 2012-2014 ஆண்டுகளை நினைவுகூர்கிறார். ஆனால், அவருடைய யோசனைகள், சிறகு விரித்து பறக்க தொடங்கியது பெங்களூருவில். 2015 ஆம் ஆண்டில் ‘ஹெர் செகண்ட் இன்னிங்க்ஸ்’ நிறுவனத்தின் முயற்சிகளுக்கு அங்கீகாரமும் கிடைக்கத் தொடங்கி இருக்கிறது.  

“எங்கள் குழுவில் ஏறத்தாழ 8,000 பெண் உறுப்பினர்கள் இருக்கிறார்கள், போன வருடத்தில் மட்டும் இருநூறு பெண்கள் வேலைக்கு திரும்பவும் சேர உதவியிருக்கிறோம்,” என்கிறார்.

ஹெர் செகண்ட் இன்னிங்க்ஸ் எப்படி இதை செய்கிறது என ஆச்சரியமாக இருக்கிறதா? நிச்சயமாக நிறைய தொழில்துறை நிபுணர்கள், ஆன்லைன் வகுப்புகள் மற்றும் ஏ.ஐ கருவிகளின் உதவிகளோடு தான். ’ஈஸ் (Ease) எனும் ஏ.ஐ கருவி உருவாக்க எங்களுக்கு ஆக்சென்சர் உதவியது,” என மஞ்சுளா விளக்குகிறார்.

மஞ்சுளா தர்மலிங்கம் : நிறுவனர், ஹெர் செகண்ட் இன்னிங்க்ஸ்

ஈஸ் கருவியின் வழியே பயனர்கள் தங்களுக்கு முன்னேற்றம் தேவைப்படும் இடங்களை பார்த்து, படித்துக் கொள்ளலாம்.

“பெண்கள் கணினி முன் அமர்ந்து கொண்டு எந்த பாதை வேண்டும் என தேர்வு செய்தால், கணினி அவர்களிடம் கேள்வி கேட்கத் தொடங்கும். மேலும், அந்த ஏ.ஐ அவர்களுடைய செய்கைகளை, முக பாவனைகளை எல்லாம் பதிவு செய்து எந்தெந்த இடத்தில் முன்னேற்றிக் கொள்ளலாம், எந்தெந்த இடத்தில் நன்றாக செயல்படுகிறார்கள் என பின்னூட்டம் கூட கொடுக்கிறது,” என்கிறார்.