'சுயசக்தி விருதுகள் 2019'– வீட்டில் இருந்தே தொழில் முனைவில் ஈடுபடும் பெண்களை கௌரவித்து கொண்டாடும் விழா!
நீங்கள் வீட்டில் அமர்ந்தபடி ஆர்டர் செய்து உண்ணும் வீட்டுச்சாப்பாடை சமைத்தவர் யார்? அந்த வணிகத்தை நிர்வகிப்பது யார் என்று நினைத்து வியந்ததுண்டா? அல்லது உங்கள் பகுதிக்கு அருகில் செயல்படும் அழகுக்கலை நிபுணர் குறித்து நீங்கள் அறிவீர்களா? நோய்வாய்பட்ட உங்களது பெற்றோருக்கு சுகாதார சேவையளிக்கும் நிறுவனத்தின் பின்னணியில் யார் செயல்படுகிறார்கள் என்று அறிவீர்களா? இத்தகைய நிறுவனங்களில் பலவற்றை பெண்களே சுயமாக நிர்வகித்து வருவதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
இந்தப் பெண்கள் தங்களது வணிகத்தை நிர்வகிப்பதுடன் தங்களது வீடு, சமூகம், பொருளாதாரம் என அனைத்திலும் பங்களிக்கின்றனர். இவர்களைப் பற்றி யாரும் சிந்திப்பதில்லை. எனவே அதிகம் போற்றப்படாத இந்தப் பெண்களுக்கு அங்கீகாரம் கிடைக்கவேண்டும் என்கிற நோக்கத்துடன் ’நேச்சுரல்ஸ்’ மற்றும் ’பிராண்ட் அவதார்’ 'Homepreneur Awards' ’சுயசக்தி விருதுகள்’ வழங்குகிறது.
இந்த விருதுகளின் இரண்டு பதிப்புகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. பேக்கிங், பாடம் கற்பித்தல், ஃப்ரீலான்சிங், அழகுக்கலை, எழுத்துப் பணி, சுகாதார சேவைகள், கேட்டரிங் என பல்வேறு வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பெண்களை அடையாளம் கண்டு, அங்கீகரித்து, கொண்டாடுவதற்கான தளத்தை இந்த விருதுகள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
விவசாயம், கலை மற்றும் கலாச்சாரம், அழகு மற்றும் ஆரோக்கியம், கல்வி, உணவு மற்றும் பானங்கள், வீட்டுத் தேவை பொருட்களுக்கான சில்லறை வர்த்தகம், ஹெல்த்கேர், ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு, விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி, சமூக நலன் என பல்வேறு பிரிவிகளின்கீழ் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது. பல்வேறு துறை சார்ந்த பிரபல பெண்கள் அடங்கிய ஜூரி குழு விருது பெறுபவர்களைத் தேர்வு செய்கிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட இந்த ‘சுயசக்தி விருதுகள்’ இந்த ஆண்டுக்கான அறிவிப்பையும், விண்ணப்ப தேதிகளையும் அறிவித்துள்ளது. அதோடு விருதுக்கு தேர்வாகப் போகும் வெற்றியாளர்களை தேர்வு செய்யும் ஜூரி குழுவையும் அறிமுகப்படுத்தியுள்ளனர். அவர்களின் பட்டியல்:
- டாக்டர் மரியஜீனா ஜான்சன் - துணை வேந்தர், சத்யபாமா பல்கலைக்கழகம்
- வீணா குமரவேல் – நிறுவனர், நேச்சுரல்ஸ் சலூன்
- ரோஹினி மணியன் – சிஇஓ, க்ளோபல் அட்ஜஸ்ட்மெண்ட்ஸ் சர்வீசஸ்
- அருணா சுப்ரமணியம் – டிரஸ்டி, பூமிகா அறக்கட்டளை
- டாக்டர் சௌந்தர்யா ராஜேஷ் – நிறுவனர்-தலைவர், அவ்தார் கேரியர் கிரியேட்டர்ஸ்
- ஹேமா ருக்மணி – சிஇஓ, தேனாண்டாள் எண்டர்டெயிண்ட்மெண்ட்
- நீனா ரெட்டி – நிர்வாக இயக்குனர், சவேரா ஹோட்டல்ஸ்
- சுசீலா ரவீந்திரனாத் – பத்திரிக்கையாளர், கட்டுரையாளர் மற்றும் ஆசிரியர்
- ரிங்கு மெச்சேரி – சமூக தொழில்முனைவர் & நிறுவனர், சென்னை வாலண்டீர்ஸ்
- டாக்டர் லதா ராஜன் – நிறுவனர், மாஃபா ஸ்ட்ராடெஜிக் கன்சல்டண்ட்ஸ்
- லட்சுமி ரவிசந்திர் – நிறுவனர், ஈவண்ட் ஆர்ட்
- திவ்யா சத்யராஜ் – ஊட்டச்சத்து நிபுணர்
- பூர்ணிமா ராமசாமி – தேசிய விருது வென்றுள்ள ஆடை வடிவமைப்பாளர்
முதல் இரண்டு பதிப்புகளில் தமிழ்நாட்டில் ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் ஆயிரக்கணக்கானோர் இவ்விருதுக்கு விண்ணப்பித்தனர். இதிலிருந்து 1800 பேர் தேர்வு செய்யப்பட்டனர். 300 தொழில்முனைவோருடன் தனிப்பட்ட முறையில் நேர்காணல் நடைபெற்றது. இறுதியாக 90-க்கும் அதிகமான பெண்கள் பல துறைகளின் கீழ் இந்த விருதிற்கு தேர்வு செய்யப்பட்டனர். ஜூரி உறுப்பினர்கள் தரப்பில் பட்டறைகளும் தொடர் வழிகாட்டல் அமைப்பும் ஏற்பாடு செய்யப்படுகிறது.
சுயசக்தி விருதுகள் அறிவிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திரைப்பட இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ், ‘Homepreneurs Awards 2019’ அறிமுகப்படுத்தினார். விருதுகள் பற்றி பேசிய அவர், வீட்டில் இருந்து சுயதொழில் புரியும் பெண்களை அங்கீகரிக்கும் இவ்விழாவில் தானும் பங்கு வகிப்பது பெருமையாக உள்ளது என்றார். மேலும்,
“தானம் வீட்டில் இருந்து தொடங்கவேண்டும் என்று நாம் சொல்வோம். அதே போல் பெண்களை ஊக்குவிப்பதும் வீட்டில் இருந்து தொடங்கவேண்டும். ஒரு பெண்ணை சுற்றியுள்ளவர்கள் அவளை அவள் செய்யும் பணியை பாராட்டி, ஊக்கம் அளித்தாலே அவள் பல சாதனைகள் புரியமுடியும்,” என்றார் ஐஸ்வர்யா.
சுயசக்தி விருதுகள் பெண்களுக்கு அங்கீகாரம் அளிப்பதுடன் இத்தகைய தொடர்புகள் அவர்களுக்கு சிறப்பாக பலனளிப்பது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவிக்கிறார் பிராண்ட் அவதார் சிஇஓ ஹேமச்சந்திரன்.
”இந்த அங்கீகாரம் மூலம் இவர்களுக்கு சந்தை வாய்ப்புகள் பன்மடங்கு அதிகரித்துள்ளது. மக்களுடனான இவர்களது ஒருங்கிணைப்பு அதிகரித்துள்ளது. விருதுகள் பெற்ற பிறகு இவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட பட்டறைகள் மூலம் இவர்களது அறிவாற்றல் மேம்படுகிறது,” என்றார்.
நேச்சுரல்ஸ் இணை நிறுவனர் சிகே குமரவேல் கூறும்போது, “சுயசக்தி விருதுகள் இரண்டு பதிப்புகள் சிறந்த பயணமாக அமைந்தது. பெண்கள் தொழில்முனைவில் முழு அர்ப்பணிப்புடன் ஈடுபடுவதைக் கண்டு அவர்களது திறன் மீது எனக்கிருந்த நம்பிக்கை உறுதியானது.
“எதிர்காலத்தில் தொழில்முனைவராக உருவாக உள்ள மாணவர்கள் மூன்றாம் பதிப்பில் இணைக்கப்பட உள்ளதால் இந்த முறை விருதுகள் மேலும் உந்துதலளிக்கும் வகையில் இருக்கும்,” என்றார்.
சுயசக்தி விருதுகளின் மூன்றாம் பதிப்பு தொடர்பான மற்ற விவரங்களையும் அவர் பகிர்ந்துகொண்டார். மாநிலம் முழுவதும் உள்ள தொழில்முனைவோர் இதில் பங்கேற்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்த ஆண்டு ‘சுயசக்தி விருதுகள்’ மூன்றாவது பதிப்பிற்கான அறிவிப்புகள்:
- விண்ணப்ப தேதி: ஜூலை 2-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி
- நேர்காணல் விவரம்: ஆகஸ்ட் மாதம் 23-ம் தேதி
- விருதுகள் வழங்கும் விழா: செப்டம்பர் மாதம் 15-ம் தேதி
தேர்வு செய்வதற்கான அளவுகோல்: வணிக யோசனைகளின் தனித்துவம், அவர்கள் எதிர்கொள்ளும் வணிக ரீதியான சவால்கள், வளர்ச்சி மற்றும் வருவாய்.
செயல்முறை: பதிவு செய்தவர்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட நபர்கள் மட்டுமே ஜூரி உறுப்பினர்களுடனான தனிப்பட்ட நேர்காணலுக்கு அனுமதிக்கப்படுவார்கள். தேர்வு செய்வதற்கான அளவுகோல்களின் அடிப்படையில் பதிவு செய்யும் செயல்முறை முழுமையாக ஆன்லைனில் மேற்கொள்ளப்படுகிறது. ஜூரி உறுப்பினர்கள் மதிப்பீடு செய்து ஒவ்வொரு பிரிவிலும் தகுதியானவர்களை தேர்வு செய்வார்கள். வெற்றியாளர்களுக்கு செப்டம்பர் 15-ம் தேதி நடைபெறும் முக்கிய விழாவில் விருது வழங்கப்படும்.
சுயசக்தி விருதுகள் மூன்றாம் பதிப்பிற்கான புதிய முயற்சிகள்
ஹோம்ப்ரூனர் சர்கிள்: இது ஹோம்ப்ரூனர்கள் தங்களுக்குள் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதற்கான ஒரு தனித்துவமான க்ளப் ஆகும். இவர்கள் கற்பதற்கும் வளர்ச்சிக்கும் உதவுவதுடன் அவர்களது தயாரிப்புகளை சந்தைப்படுத்தவும் விற்பனை செய்யவும் உதவுகிறது. ஹோம்ப்ரூனர் சர்கிளில் பங்களிப்பதன் மூலம் தொழில்முனைவர்:
- தங்களது தயாரிப்புகளை www.homepreneurawards.com வலைதளத்தில் பட்டியலிடலாம்.
- தங்களது தயாரிப்பு அல்லது சேவையை எங்களது சமூக ஊடக தளத்தில் விளம்பரப்படுத்தலாம்.
- துறையில் சிறந்து விளங்கும் தலைவர்களால் ஏற்பாடு செய்யப்படும் பட்டறைகளில் பங்கேற்கலாம்.
- சுயசக்தி விருதுகள் ஜூரி உறுப்பினர்கள் பங்கேற்கும் எங்களது யூட்யூப் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாடலாம்.
சுயசக்தி விருதுகள் – மாணவர் எடிஷன் – இந்த முயற்சி கல்லூரி மாணவிகளின் தொழில்முனைவு ஆர்வத்தை ஊக்குவிக்க, அங்கீகரிக்கவும் மேற்கொள்ளப்படுகிறது. இது அவர்கள் தங்களது தொழில்முனைவு சிந்தனைகளை பகிர்ந்துகொள்வதற்கான தளமாகும். அவர்கள் எவ்வாறு தொழில்முனைவு முயற்சியைத் துவங்கவும், செயல்படுத்தவும், வளர்ச்சியடையவும் விரும்புகின்றனர் என்று பகிர்ந்துகொள்ளலாம். செயல்படுத்த சாத்தியமான, யதார்த்தமான, தெளிவுடன்கூடிய சிந்தனைகள் அங்கீகரிக்கப்படும். கல்லூரியில் படிக்கும் எந்த ஒரு மாணவியும் இந்த விருதிற்கு பதிவு செய்ய தகுதியுடையவர்களாக கருதப்படுவார்கள்.
முக்கிய நிகழ்வின் சிறப்பம்சங்கள்:
- ஹோம்ப்ரூனர்கள் அனைவரும் ஒருவரோடொருவர் ஒருங்கிணையலாம்.
- ஹோம்ப்ரூனர் எக்ஸ்போ – ஹோம்ப்ரூனர்களின் முப்பதிற்கும் மேற்பட்ட இயற்கையான, ஆர்கானிக் தயாரிப்புகள் இடம்பெறும்.
- பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் இடம்பெறும். பிரபலங்கள் இதில் பங்கேற்கின்றனர்.
- ஹோம்ப்ரூனர் விருது – மாணவர் எடிஷன் வெற்றியாளர்களும் நிகழ்வில் பங்கேற்பார்கள்.