Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

ஆங்கில ஆசிரியரான 'ஜாக் மா’ மாபெரும் தொழில்முனைவர் மற்றும் செல்வந்தர் ஆன கதை!

5,130 கோடி அமெரிக்க டாலருக்கு சொந்தக்காரரான இவர் சீனாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர். பணிவு, கடும் உழைப்பு ஆகியவற்றிக்கு உதாரணமாகவே திகழும் இவரது வெற்றிக்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யமான கதை உள்ளது.

ஆங்கில ஆசிரியரான 'ஜாக் மா’ மாபெரும் தொழில்முனைவர் மற்றும் செல்வந்தர் ஆன கதை!

Thursday September 10, 2020 , 2 min Read

குழந்தைப் பருவத்திலிருந்தே உறுதியைக் குறித்தும் கடின உழைப்பு குறித்தும் பலவிதமான கதைகள் கேட்டிருப்போம். அப்படிப்பட்ட ஒரு மனிதர் உலக பொருளாதாரத்திலும் ஒட்டுமொத்த சீன இணைய துறையிலும் தாக்கத்தை ஏற்படுத்திய கதையை பார்ப்போம்.


அலிபாபா குழுமத்தின் நிறுவனர் ஜாக் மா, 5130 கோடி அமெரிக்க டாலருக்கு  சொந்தக்காரர் ஆன இவர், சீனாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர். ஜாக் மா ஒரேநாளில் வெற்றியைத் தழுவிடவில்லை. பணிவு, கடும் உழைப்பு ஆகியவற்றிக்கு உதாரணமாகவே திகழும் இவரது வெற்றிக்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யமான கதை உள்ளது.


இவர் தோல்வியை கடந்து செல்லும் விதம் மிகவும் அசாதாரணமாக இருக்கும். தொடர்ந்து தோல்வியை சந்திக்கும்போது நம்மில் எத்தனை பேர் நம்பிக்கையுடன் இருப்போம்?


வெற்றிப்பாதையில் ஜாக் மா சந்தித்த பல தோல்விகள் குறித்த விவரங்கள் இதோ:


சீனாவின் ஹாங்சோ நகரில் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ஜாக் மா, தனது தொழில்முறை வாழ்க்கையை ஓர் ஆங்கில ஆசிரியராகத் தொடங்கினார். அப்போது அவருக்கு மாதச் சம்பளம் வெறும் 600 ரூபாய் என்று சொல்லப்படுகிறது.


தோல்வியடைந்த மாணவர், நிராகரிக்கப்பட்ட ஊழியர் ஜாக் மா இளம் வயதில், ஆரம்பப் பள்ளி தேர்வுகளில் இருமுறையும், இடைநிலை பள்ளி தேர்வுகளில் மூன்று முறையும் ஹாங்சூ நார்மல் பல்கலைக்கழகத்தில் சேருவதற்கு முன் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகளில் மூன்று முறையும் தோல்வியடைந்துள்ளார். 

Jack Ma

Jack Ma, Chairman, Alibaba

கல்லூரி நுழைவுத் தேர்வில் கணிதப் பகுதியில் மிகவும் மோசமாக ஒரு சதவீதத்திற்கும் குறைவான மதிப்பெண் எடுத்தார். 

”எனக்கு கணக்கு சரியாக வராது, மேலாண்மை குறித்து நான் எப்போதும் படித்ததில்லை, அக்கவுண்டிங் ரிபோர்ட்டை என்னால் படிக்க முடியாது,” என்று ஒருமுறை குறிப்பிட்டிருந்தார்.


ஆனால் இன்று அவர் இருக்கும் நிலைமையை அடைய இவை எதுவுமே தடையாக இருக்கவில்லை. பல வேலைகளில் நிராகரிக்கப்பட்டார் 30 வேலைகளில் நிராகரிக்கப்பட்ட பிறகும் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டிருந்தது மாவின் விடாமுயற்சிக்கும் உறுதிக்கும் எடுத்துக்காட்டாகும்.


கேஎஃப்சி-யில் விண்ணப்பித்த 24 பேரில் இவர் மட்டும்தான் நிராகரிக்கப்பட்டார். போலீஸ் படையில் விண்ணப்பித்த ஐந்து பேரில் இவரும் ஒருவர். இதில் சிறப்பாக இல்லை என்ற காரணத்தால் இவர் மட்டும் நிராகரிக்கப்பட்டார். 10 முறை ஹார்வர்டால் நிராகரிக்கப்பட்டார். ஹார்வர்டுக்கு 10 முறை எழுதியும் ஒவ்வொரு முறையும் நிராகரிக்கப்பட்டார்.

வேறு யாராக இருப்பினும் மனம் சோர்ந்து போயிருக்கக்கூடும். ஆனால் ஜாக் மா இந்த நிராகரிப்புகளை கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டார். இதுதான் நம்பிக்கை.


’லாபம் இல்லாத மாதிரி’யை நடத்துவதாக விமர்சனம் செய்யப்பட்டார் 1999-ல் நண்பர்கள் குழுவுடன் இணைந்து ’அலிபாபா’ எனும் நிறுவனத்தை உருவாக்கினார். ஆனால் சிலிக்கான் வேலியை நிதிக்காக சம்மதிக்க வைக்க இயலவில்லை. ஒரு தருணத்தில் அலிபாபா நிறுவனம் திவாலாவதற்கு 18 மாதங்களே இருக்கும் நிலை ஏற்பட்டது.


முதல் மூன்று வருடங்கள் அலிபாபாவின் வருவாய் பூஜ்யம். 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஒரு பங்கு 92.70 டாலர் என்று பொதுவாக்கப்பட்டு US IPO வரலாற்றிலேயே மிகப்பெரியதாக பார்க்கப்பட்டது.

Jack Ma

2009 மற்றும் 2014-ல் டைம் இதழில் அதிக செல்வாக்குடைய 100 பேரில் மாவின் பெயரும் வெளியிடப்பட்டது. ’பிசினஸ் வீக்’-ன் ‘சீனாவின் வலிமையானவர்கள்’ பட்டியலில் ஒருவராக மா தேர்ந்தெடுக்கப்பட்டார். ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் வெளியான முதல் சீன தொழில்முனைவோர் ஜாக் மா ஆவார்.


2017ஆம் ஆண்டுக்கான ஃபோர்ப்ஸ் இதழின் உலக பணக்காரர்கள் பட்டியலின்படி ஜாக் மா சீனாவின் மூன்றாவது பெரிய பணக்காரர்.


இதில் கவனிக்கவேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால் ஜாக் மாவின் வெற்றி அவரது எளிமையான ஆரம்ப காலகட்டத்தை மறக்கச் செய்யவில்லை. அவரது வெற்றிக்குக் காரணமானவர்களுக்கு மரியாதை அளிக்க அவர் எப்போதும் தவறவில்லை. அவர்,

“நீங்கள் நம்பிக்கை இழக்காதவரை உங்களுக்கு வாய்ப்பு இருந்துகொண்டே இருக்கும். நம்பிக்கையை இழப்பதுதான் மிகப்பெரிய தோல்வி,” என்பார்.


பள்ளி ஆசிரியராக இருந்து ஆன்லைன் துறையில் காலடி வைத்து 'Alibaba' எனும் மாபெரும் நிறுவனத்தை நிறுவி உலகை திரும்பி பார்க்கவைத்த ஜாக் மா, கடந்த வருடன் தனது 55வது பிறந்த நாளில் தலைவர் பொறுப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளார்.