Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

18 ஏக்கர் ஓட்டேரி ஏரியை புதுப்பித்து உயிர் கொண்டுத்த பெண் வனத்துறை அதிகாரி!

வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள ஓட்டேரி ஏரி முழுவதுமாக வற்றிப் போய் வறண்டிருந்ததைக் கண்டு அதனை சீரமைக்க திட்டமிட்ட இளம் ஐஎஃப்எஸ் அதிகாரி சுதா ராமன் தன் கடின உழைப்பால் ஏரியை புதுப்பித்துள்ளார்.

18 ஏக்கர் ஓட்டேரி ஏரியை புதுப்பித்து உயிர் கொண்டுத்த பெண் வனத்துறை அதிகாரி!

Tuesday October 19, 2021 , 2 min Read

ஏரி குளம் போன்ற நீர்நிலைகளில் எப்போதும் பறவைகளின் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும். எத்தனையோ பறவைகள் இடம்பெயர்ந்து வந்து நீர்நிலைகளை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும். அப்படிப்பட்ட இடம்தான் ஓட்டேரி ஏரி.


வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருக்கும் ஓட்டேரி ஏரியில் குளிர்காலங்களில் பல்வேறு இடங்களில் இருந்தும் பறவைகள் வருவது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஓட்டேரி ஏரியில் நீர் முழுவதுமாக வற்றி வறண்டு போயிருந்தது. பாலைவனம் போல் காட்சியளித்தது.


இந்த ஏரியை சீரமைக்கும் பணியை கையிலெடுத்து ஓராண்டு கடின உழைப்பால் புதுப்பித்துள்ளார் இளம் வன அதிகாரியான சுதா ராமன். இவரது முயற்சியின் பலனாக வேறு இடங்களுக்குப் பறந்து சென்ற பறவைகள் மீண்டும் இங்கு தஞ்சமடையத் தொடங்கின.

சுதாராமன்

சுதா ராமன் பயோ மெடிக்கல் பொறியாளர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தாவரங்கள் போன்றவற்றில் ஆர்வம் இருந்ததால் ஐடி துறையில் இருந்து வெளியேறியுள்ளார். இந்திய வனப் பணி (IFS) துறையில் சேர்ந்தார்.


வண்டலூரில் உள்ள ஓட்டேரி ஏரி வற்றிப்போனதைக் கண்ட சுதா இதனை சீரமைக்கத் தீர்மானித்தார்.

ஏரி புதுப்பிக்கப்பட்ட பின்னர் அதன் கொள்ளளவு அதிகரித்தது. ஏரியில் இருக்கும் நீர் வற்றிவிடாமல் தடுக்க அணைகள் கட்டப்பட்டன. மழை நீர் சேகரிப்பு அமைப்பு கட்டப்பட்டன. இந்த நடவடிக்கைகளால் உயிரியல் பூங்காவில் நிலத்தடி நீர் அதிகரித்தது. அங்குள்ள விலங்குகளுக்கும் பற்றாக்குறை இல்லாமல் நீர் விநியோகம் கிடைத்தது.

சுதா, ஏரி புதுப்பிக்கும் பணிகள் மட்டுமல்லாது ஐஎஃப்எஸ் அதிகாரி பயிற்சியின்போது Plantation Made Easy என்கிற செயலியையும் உருவாக்கியுள்ளார். இந்தச் செயலி பயிரிடுவதற்கு சரியான மர வகைகளைத் தேர்வு செய்ய உதவுகிறது.

இந்த செயலியை உருவாக்கியதற்காக நிர்வாகத்தில் புதுமை படைப்பதற்கான கலாம் விருது (Dr Kalam Innovation in Governance Award) சுதாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையின் அங்கீகாரமும் இந்த செயலிக்குக் கிடைத்துள்ளது.

மேலும், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வலைதளத்தை நவீனப்படுத்தும் முயற்சியையும் இவர் மேற்கொண்டுள்ளார். இங்குள்ள விலங்குகளை நேரலையில் பார்க்கும் வசதி, ஆன்லைன் டிக்கெட் வசதி போன்றவற்றை அறிமுகப்படுத்தும் பணியில் இவர் பங்களித்துள்ளார்.


அர்ப்பணிப்பும் கடின உழைப்பும் நிச்சயம் பலனளிக்கும் என்பது சுதாவின் அசைக்கமுடியாத நம்பிக்கை. இது உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில் குறுகிய காலத்தில் பல்வேறு பல்வேறு நலத்திட்டங்களில் பங்களித்துள்ளார்.


தகவல் உதவி: Counterview.org | தொகுப்பு: ஸ்ரீவித்யா