Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

அந்த 738 நாட்கள்: ஒற்றை ஆளாக 1,000 வயது மரத்தை காத்த பெண்!

சில வாரங்கள் மட்டுமே அந்த மரத்தில் இருப்பதற்காக ஏறிய அவர், கடைசியாக அங்கிருந்து இறங்கும்போது மொத்தமாக 738 நாட்கள் கடந்திருந்தன.

அந்த 738 நாட்கள்: ஒற்றை ஆளாக 1,000 வயது மரத்தை காத்த பெண்!

Monday November 25, 2024 , 2 min Read

1997-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், அமெரிக்காவைச் சேர்ந்த ஜூலியா பட்டர்ஃபிளை ஹில் என்ற 23 வயது இளம்பெண் ஒருவர், வட கலிபோர்னியாவில் உள்ள 200 அடி உயரம் கொண்ட 'லூனா' என்ற ரெட்வுட் மரத்தில் ஏறினார். பசிபிக் லம்பர் கம்பெனி என்ற மரம் வெட்டும் நிறுவனத்திடம் இருந்து அம்மரத்தை காப்பாற்றுவதே அவரது நோக்கமாக இருந்தது.

ஆரம்பத்தில், சில வாரங்கள் மட்டுமே அந்த மரத்தில் இருப்பதற்காக ஏறிய அவர், கடைசியாக அங்கிருந்து இறங்கும்போது மொத்தமாக 738 நாட்கள் கடந்திருந்தன

வட கலிபோர்னியாவில் உள்ள பாரம்பரிய ரெட்வுட் மரங்களை காப்பாற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு ஒன்றில் ஜூலியாவும் ஓர் அங்கமா இருந்து வந்தார். அந்த மரங்களில் சில 1,000 வயதை கடந்தவை. சுற்றுச்சூழல் சமநிலையை பாதுகாப்பதில் இந்த மரங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.

luna

காரணம் என்ன?

ரெட்வுட் மரங்களை வெட்டும் பசிபிக் லம்பர் கம்பெனியின் முயற்சியால் கவலைடைந்த ஹில், அது சுற்றுச்சூழலுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் என்பதை உணர்ந்தார். இதனையடுத்து, அவர் தேர்வு செய்ததுதான் லூனா என்ற அந்த ரெட்வுட் மரம். இந்த மரமே இந்தச் சுற்றுச்சூழல் போராட்டத்தின் மிக முக்கிய அடையாளமாக மாறிப் போனது.

தரையில் இருந்து கிட்டத்தட்ட 200 அடி உயரத்தில் 6x8 அடி அகலம் கொண்ட ஒரு மேடையை அமைத்து அதில் தங்கியிருந்த ஹில், ஆக்ரோஷமான வானிலை, தனிமை மற்றும் உளவியல் சிக்கல்களை எதிர்கொண்டார்.

கடும் புயல்கள், இடைவிடாத குளிர் மற்றும் மரம் வெட்டும் ஊழியர்களின் தொந்தரவு ஆகியவற்றையும் அவர் சமாளித்தார். அந்த மேடைதான் அந்த 738 நாட்களும் அவருக்கு எல்லாமாகவும் இருந்தது.

மரத்தில் இருந்த நாட்களில், ஹில் ரேடியோ நேர்காணல்கள் மற்றும் கடிதங்கள் வாயிலாக வெளி உலகத்துடன் தொடர்பு கொண்டார். அவரது இந்த துணிச்சல் சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது. மேலும், சுற்றுச்சூழல் இயக்கத்தின் செய்தித் தொடர்பாளராகவும் அவரை மாற்றியது.

இரண்டு ஆண்டுகால பேச்சுவார்த்தைக்கு பிறகு, 1999-ஆம் ஆண்டில் வெற்றிகரமான முறையில், ஹில் வைத்த கோரிக்கைகளுக்கு பணிந்தது பசிபிக் லம்பர் நிறுவனம்.

லூனா மரமும் அதை சுற்றியுள்ள 2 ஏக்கர் நிலப்பரப்பு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே அந்த ஒப்பந்தம். அதன்படி இப்போது வரை அந்த மரமும் அந்த நிலப்பகுதியில் பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருந்து வருகின்றன.

julia hill

வெற்றிக்கு கொடுத்த விலை

இந்த வெற்றிக்கு ஒரு மிகப் பெரிய விலையையும் ஹில் உள்ளிட்ட சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் கொடுக்க வேண்டியிருந்தது. அதாவது, லூனா மரத்தை பாதுகாப்பதற்காக அந்த நிறுவனத்துக்கு 50,000 அமெரிக்க டாலர்களை திரட்டி கொடுத்தார்.

இந்தக் கசப்பான சமரசத்தை தாண்டி ஹில்லின் இந்த முயற்சி இன்று வரை சுற்றுச்சூழல் செயல்பாட்டில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

லூனா ரெட்வுட் மரத்தில் தான் இருந்த நாட்களின்போது கிடைத்த அனுபவங்களை பற்றி ‘தி லெகசி ஆஃப் லூனா’ என்ற புத்தகத்தை ஹில் எழுதியிருக்கிறார். மேலும் எழுத்து, பேச்சுக்கள் வாயிலாக தொடர்ந்து சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறார் ஜூலியா ஹில்.

மூலம்: Nucleus_AI




Edited by Induja Raghunathan