2023-ம் ஆண்டில் ஹெச்.சி.எல். டெக் சி.இ.ஓ. விஜயகுமாரின் சம்பளம் கடும் சரிவு- காரணம் என்ன?
2022ம் ஆண்டு ஹெசிஎல் சி.இ.ஓ. விஜயகுமார் 12.5 மில்லியன் டாலர்கள் வருவாய் ஈட்டினார். 2021-ல் ஊக்கத்தொகை இல்லாமல் விஜயகுமார் ரூ.30.6 கோடி வருவாய் ஈட்டினார்.
HCLTech தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சி விஜயகுமார் 2023 நிதியாண்டில் ரூ.28.4 கோடி ($3.46 மில்லியன்) சம்பாதித்துள்ளார், இது முந்தைய ஆண்டு ரூ.130 கோடியுடன் ஒப்பிடுகையில் ஐந்தில் ஒரு பங்குதான் என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பளத்தில் இந்த பெரும் சரிவுக்குக் காரணம் நீண்டகால ஊக்கத்தொகை இன்மையே. இந்த ஊக்கத்தொகை அடுத்த ஆண்டுதான் கொடுக்கப்படும் என்று ஹெச்.சிஎல். நிறுவனம் தெரிவித்துள்ளது.
நீண்ட கால ஊக்கத்தொகை (LTI) நிலையான இடைவெளியில் கொடுக்கப்படுவதாகும். அதாவது 2 ஆண்டுகள் முடியும் போது கொடுக்கப்படுவது. நிறுவனத்தின் போர்டு வைத்திருக்கும் சாதனை மற்றும் எட்டப்பட்ட மைல்கல்கள் போன்றவற்றை அளவுகோலாகக் கொண்டு ஊக்கத்தொகை நிர்ணயிக்கப்படுகிறது. இந்த அடிப்படையில், 2021-22 மற்றும் 2022-23 நிதியாண்டுகளுக்கான செயல்திறன் மதிப்பீட்டளவின் படி, நீண்ட கால ஊக்கத்தொகை நிதியாண்டு 2023-24-ல் தான் அளிக்கப்படும்.
2022ம் ஆண்டு ஹெசிஎல் சி.இ.ஓ. விஜயகுமார் 12.5 மில்லியன் டாலர்கள் வருவாய் ஈட்டினார். 2021-ல் ஊக்கத்தொகை இல்லாமல் விஜயகுமார் ரூ.30.6 கோடி வருவாய் ஈட்டினார்.
FY23 நிதியாண்டில் HCLTech ஊழியர்களின் சராசரி ஊதியத்தை விட விஜயகுமாரின் சம்பளம் 254 மடங்கு அதிகம் என்று அறிக்கை கூறுகிறது. கடந்த நிதியாண்டில் இந்தியாவின் முதல் ஐந்து ஐடி நிறுவனங்களில் மிகக் குறைந்த ஊதியம் பெற்ற தலைமை நிர்வாக அதிகாரி இவரே.
சராசரியாக, HCLTech ஊழியர்களின் சம்பள உயர்வு ஆண்டில் 5.14% ஆக இருந்தது. நிர்வாகப் பணியாளர்கள் - நிர்வாக இயக்குநர், நிர்வாகமற்ற இயக்குநர் மற்றும் சுயாதீன இயக்குநர் - ஊதியங்கள் 5.28% குறைந்துள்ளது. HCLTech தலைவி ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா, முந்தைய நிதியாண்டில் இருந்ததைப் போலவே ரூ.1.03 கோடி வருவாய் ஈட்டினார்.
இன்ஃபோசிஸ் தலைமை நிர்வாக அதிகாரி சலில் பரேக், 21% குறைந்து ரூ.71.02 கோடி சம்பாதித்தார். விப்ரோ தலைமை நிர்வாக அதிகாரி தியரி டெலாப்போர்ட்டின் சம்பளமும் டாலர் அடிப்படையில் நோக்குகையில் 5% குறைந்தது. டெக் மஹிந்திரா தலைமை நிர்வாகி சிபி குர்னானி 2023 நிதியாண்டில் சம்பளம் மற்றும் பிற தொகைகளுடன் சுமார் ரூ.32 கோடி சம்பாதித்துள்ளார், இது முந்தைய ஆண்டு ரூ.63.4 கோடியுடன் ஒப்பிடுகையில் பாதியாகக் குறைந்துள்ளது.