ஆன்லைனில் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்பது எப்படி? Step-by-step Guide
இன்றைய டிஜிட்டல் உலகில் இந்தியாவில் இணையவழியில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து, அதை எளிதில் பெற முடியும்.
கடல், நாடு, எல்லைகள் என பல கடந்து, எல்லா தேசத்திறக்கும் போய் வரவேண்டும் என விரும்பும் பயணப் பிரியர்களுக்கு பாஸ்போர்ட் மிகவும் அவசியம். அதே போல, வேலை, தொழில், கல்வி நிமித்தமாக வெளிநாடு செல்லவும் பாஸ்போர்ட் அவசியம்.
இன்றைய டிஜிட்டல் உலகில் இந்தியாவில் இணையவழியில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து, அதை எளிதில் பெற முடியும். கடந்த ஆண்டு டிசம்பரில் சுமார் 96 மில்லியன் இந்திய மக்கள் தங்கள் கைவசம் தகுந்த பாஸ்போர்ட் வைத்துள்ளதாக தகவல்.
இந்தச் சூழலில் இணையவழியில் எளிய முறையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து, அதை பெறுவது எப்படி? என்பதை விரிவாகப் பார்ப்போம்.
ஆன்லைனில் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்பது எப்படி? Step-by-step Guide
- பாஸ்போர்ட் சேவா கேந்திராவின் ஆன்லைன் போர்ட்டலுக்கு செல்ல வேண்டும். அதன் லிங்க் https://www.passportindia.gov.in/AppOnlineProject/welcomeLink
- அதில், புதிய பயனராக பதிவு செய்ய வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
- தொடர்ந்து பாஸ்போர்ட் அலுவலகம், பெயர், பிறந்த தேதி, மின்னஞ்சல் முகவரி, லாக்-இன் ஐடி, பாஸ்வேர்ட் போன்றவற்றை கொடுக்க வேண்டும்.
- அதை செய்து முடித்ததும் ‘ரிஜிஸ்டர்’ என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.
- தொடர்ந்து மின்னஞ்சல் முகவரிக்கு வரும் லிங்க் மூலமாக பயனர்கள் தங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்யலாம். இதற்கு பயனர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்தால் போதும்.
- அதன் பின்னர், Apply for Fresh Passport/Re-issue of Passport என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
- பாஸ்போர்ட் பெறுவதற்கான விண்ணப்பத்தை ஆன்லைன் வழியில் நேரடியாக பூர்த்தி செய்யலாம். அல்லது விண்ணப்பப் படிவத்தை டவுன்லோட் செய்து, அதை பூர்த்தி செய்து, மீண்டும் அப்லோட் செய்யலாம்.
- பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் புதிய பாஸ்போர்ட் வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும். நார்மல் அல்லது தட்கல் பாஸ்போர்ட் என்பதை தேர்வு செய்ய வேண்டும். கூடவே எத்தனை பக்கம் கொண்ட பாஸ்போர்ட் என்பதையும் தேர்வு செய்ய வேண்டும். பின்னர், பெயர், பாலினம், பிறந்த தேதி, பிறந்த இடம், வசிப்பிடம், பான் கார்டு எண், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் எண், கல்வி தகுதி, பணி, பெற்றோர் பெயர், முகவரி மற்றும் இதர விவரங்கள் கேட்கப்படுகின்றன. இந்த இதர விவரங்களில் விண்ணப்பதாரரின் குற்றப் பின்னணி, இதற்கு முன்னர் பாஸ்போர்ட் விண்ணப்பித்து மறுக்கப்பட்டது போன்ற விவரங்கள் கேட்கப்படுகின்றன. அனைத்தையும் கவனத்துடன் படித்து விண்ணப்பிக்க வேண்டும்.
- அதன் பின்னர், தவறாமல் சப்மிட் கொடுக்க வேண்டும்.
- தொடர்ந்து கட்டணம் செலுத்தி, அப்பாயின்ட்மெண்ட் பிக்ஸ் செய்ய வேண்டும். அதன் பின்னர், ரெசிப்ட் பெறலாம். அதில், விண்ணப்ப எண் குறித்த விவரம் இருக்கும்.
- இறுதியாக அப்பாயின்ட்மெண்ட் உறுதி செய்யப்பட்ட நாள் அன்று பாஸ்போர்ட் சேவா கேந்திரா அல்லது மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் அசல் ஆவணங்களுடன் சரிபார்ப்பிற்கு சென்று, தகுந்த ஆவணங்களை காட்டி பாஸ்போர்ட் பெறலாம்.
Edited by Induja Raghunathan