Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

Zoho ராதா வேம்பு, Zerodha காமத் சகோதரர்கள் சொத்து மதிப்பு உயர்வு: ஹுரூன் இந்தியா பணக்காரர்கள் பட்டியல்!

மருந்து உற்பத்தி துறையே டாப்!

Zoho ராதா வேம்பு, Zerodha காமத் சகோதரர்கள் சொத்து மதிப்பு உயர்வு: ஹுரூன் இந்தியா பணக்காரர்கள் பட்டியல்!

Saturday October 02, 2021 , 2 min Read

ஹுருன் இந்தியாவின் பணக்காரப் பட்டியல் 2021 படி, Zoho-வின் ராதா வேம்புவின் சொத்து மதிப்பு 93 சதவீதம் உயர்ந்து 23,100 கோடியை எட்டியிருக்கிறது. இதன்காரணமாக பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவின் வாரன் பப்பெட் என அழைக்கப்படும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மற்றும் ஆனந்த் மஹிந்திரா ஆகியோரைவிட முந்தி இடம்பெற்றுள்ளார் இவர்.


இதேபோல், ஃபின்டெக் தளமான ஜீரோதா நிறுவன உரிமையாளர்கள் ஆன காமத் (நிகில், நிதின்) சகோதரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தின் சொத்து மதிப்பு 51 சதவீதம் அதிகரித்து ரூ.25,600 கோடியை எட்டியிருக்கிறது.


கொரோனா லாக்டவுன் காலத்தில் தான் Zoho, Zerodha இந்த இரண்டு நிறுவனங்களும் அதீத வளர்ச்சியைக் கண்டுள்ளன. ஜீரோதா நிறுவனம் ஜீரோதா கமாடிட்டீஸ் பிரைவேட் லிமிடெட் மூலம் நடத்தப்படுகிறது. கடந்த ஒருவருடத்தில் ஒரு பில்லியன் டாலர் மதிப்பீட்டை அடைந்து யூனிகார்ன் நிலையை அடைந்தது ஜீரோதா.

ஜெரோதா

Zerodha நிறுவனர்கள் நிகில் மற்றும் நிதின் காமத்

ஹுரூன் இந்தியாவின் MD மற்றும் தலைமை ஆராய்ச்சியாளர் அனஸ் ரஹ்மான் ஜுனைட் பேசுகையில்,

“இந்திய ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் புதிய செல்வங்களை உருவாக்கும் உற்சாகத்தில் உள்ளது. கடந்த வருடத்தில் மட்டும் ஒரு மாதத்திற்கு மூன்று யூனிகார்ன்கள் என்ற அளவில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இந்தியாவில் வளர்ச்சியடைந்தன. இதன்மூலம் பில்லியன் டாலர் ஸ்டார்ட்அப்களின் எண்ணிக்கை 53ல் இருந்து 82 ஆக மாறியிருக்கிறது," என்றுள்ளார்.

ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பெரும் அளவு செல்வத்தை உருவாக்குவதில் முனைப்பு காட்டினாலும், பட்டியலில் கடந்த ஆண்டை போல இப்போதும் மருந்து உற்பத்தி நிறுவனங்களே முதலிடத்தை பிடித்துள்ளன.

byju

பைஜு ரவீந்திரன்

பட்டியலில் 130 தனிநபர்கள் மருந்து உற்பத்தித் துறையைச் சேர்ந்தவர்கள். அதிலும், இரசாயன மற்றும் பெட்ரோ கெமிக்கல் துறையிலிருந்து 98 பேர் இடம்பிடித்துள்ளனர். மென்பொருள் சேவை (சாஸ்) துறையிலிருந்து 81 தொழில்முனைவோர்கள் இடம்பிடித்துள்ளனர்.


இதேபோல், கல்வியை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் எட்டெக் துறையும் கடந்த ஆண்டு நல்ல செல்வங்களை ஈட்டியுள்ளன. பைஜூ ரவீந்திரன் மற்றும் குடும்பத்தின் சொத்து மதிப்பு 19 சதவீதம் அதிகரித்து 24,300 கோடியை எட்டியிருக்கிறது. பேடிஎம் -ன் விஜய் சேகர் சர்மா சொத்து மதிப்பு 43 சதவிகிதம் சரிந்ததன் காரணமாக 87வது இடத்தை அடைந்தது. அவர் ரூ.18,900 கோடி சொத்து மதிப்பு வைத்துள்ளார்.