தாய்மொழியில் படித்து பின்னர் ஆங்கிலம் கற்று ஐஏஎஸ் ஆன பாலாஜி!
தாய் மொழியில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு இவரின் கதை உத்வேகத்தை நிச்சயம் அளிக்கும்.
கர்நாடகாவின் தும்கூர் மாவட்டத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் பாலாஜி டி.கே. இவரின் கதை மிகவும் சுவாரஸ்யமானது. பாலாஜியின் தாய்மொழி கன்னடம். ஆங்கிலத்தில் அவர் பலவீனமாக இருந்தபோதிலும், அவர் ஆங்கிலத்தை கடுமையாக படித்து அதை மேம்படுத்திக் கொண்டு இறுதியாக ஆங்கில மொழி மூலமாக சிவில் சர்வீஸ் தேர்வைப் எழுதி ஐ.ஏ.எஸ் ஆகியுள்ளார்.
சிவில் சர்வீஸின் பிரதான தேர்வில், மாணவர்கள் வெற்றி பெறுவதற்கு உதவும் வழிமுறைகளை தொகுத்து, பாலாஜி ஒரு சிறந்த புத்தகத்தை எழுதியுள்ளார்.
“ஐ.ஏ.எஸ் ஆவது என்னுடைய குழந்தைப் பருவ கனவு. இது எனது 5ஆம் வகுப்பில் இருந்தே தொடங்கியது. இதனால் அப்பா என் மீது ஆத்திரமடைந்து அடித்தார். நான் அழுது கொண்டே துடித்தேன். பின்னர் தொலைக்காட்சியில் பொது அறிவு கேள்விகள் கேட்கப்படும் போது நான் அதற்கு சரியாக பதிலளித்தேன், இது என் தந்தைக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்தது.”
அவர் என்னைக் அரவணைத்துக் கட்டிப்பிடித்துக் கொண்டார். அவரது கோபம் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் மாறியது. பொது அறிவின் உதவியால் யாரையும் வெல்ல முடியும் என்பதை இது எனக்கு உணர்த்தியது.
பின்னர், நான் பொது அறிவு மீது அதிக ஆர்வத்தை வளர்த்துக் கொண்டேன். இதனால் நாட்டின் கஷ்டமான பொது அறிவிற்கான தேர்வில் கூட என்னால் தேர்ச்சி பெற முடியும் என்று நினைத்தேன் (நான் அப்படி நினைத்துக் கொண்டிருந்தேன்). பின்னர், ஐ.ஏ.எஸ் தேர்வு தான் மிகவும் கடினமான பொது அறிவு கேள்விகள் இடம்பெற்ற தேர்வு என்று அறிந்து கொண்டேன்.
நான் சச்சிதானந்த ராவ் இடம் தனியாக பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தேன். அவர், ‘ஒரு நபர் இறந்து குறைந்தது 4 நாட்கள் வரை அவரை நான்கு பேராவது நினைவில் வைத்திருக்கும்படி தனது வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று அவர் எப்போதும் சொல்லிக் கொண்டிருப்பார்’.
“இந்த வார்த்தைகள் தான் நான் ஒரு ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்ற எனது தீர்மானத்தை பலப்படுத்தியது. இதனுடன், மற்றொரு ஆசிரியர் ஜகதீஷ் ஐயா; ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களின் கதைகளையும் எனக்குச் சொல்லுவார். இது கேக் மீது ஐஸ் வைப்பது போல் இருந்தது,” என்கிறார் பாலாஜி.
அதன் பிறகு, நான் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய போது, ஜகதீஷ் ஐயா மட்டும் தான் எனது சொந்த ஊரிலிருந்து (கோரடகேர், மாவட்டம்-தும்கூர், கர்நாடகா). அகில இந்திய தரவரிசை 58 எடுத்து ஐ.ஏ.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார். இது அவரைத் தொடர்ந்து அடுத்து நான் அவ்வாறு ஆக வேண்டும் என்பதற்கான தெளிவான செய்தியாக எனக்கு இருந்தது. அப்போது நான் ஒரு ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்ற கனவு முறையாகத் தொடங்கியது.
அப்போது என் 10 ஆம் வகுப்புத் தேர்வின் முடிவு வெளி வந்தது. நான் கணிதத்தில் 100% மதிப்பெண்களுடன் 93.76% பெற்று தேர்ச்சி பெற்றேன். 11ம் மற்றும் 12ம் வகுப்புக்கு நான் அறிவியலைத் தேர்வு செய்ய வேண்டும் என்று எல்லோரும் பரிந்துரைத்தனர். ஆனால், ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்ற எனது கனவைத் தொடர மனிதநேய பாடநெறியை நான் தேர்வு செய்ய வேண்டும் என்று என் இதயம் கூறியது.
நீங்கள் அனைவரும் அறிந்தபடி, அறிவியல் துறை சிறந்த வேலை வாய்ப்புகளை வழங்குகிறது. நான் ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பம் (என் தந்தை மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். என்னுடைய தாத்தா குடும்பத்திலிருந்து விலகி இருந்தார். எனது பாட்டி தினசரி கூலித் தொழிலாளியாக வேலை செய்து என்னுடைய தந்தையை வளர்த்தார். எனது தந்தை பல இடங்களில் பணிபுரிந்தார், எப்படியோ அவருக்கு கிராமீன் வங்கியில் வேலை கிடைத்தது. என் தாயும் குடும்ப ரீதியாக கஷ்டமான குடும்பத்தைச் சேர்ந்தவர்.
இதில் இருந்து தேர்ச்சி பெற்று, தான் ஒரு நல்ல வேலையில் அமரவேண்டும் என்பது மிகவும் முக்கியமாக இருந்தது. ஆயினும்கூட, தனது கனவைத் தொடர ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்று, தன் பெற்றோர் தனக்கு முழு ஆதரவையும், கனவை நினைவாக்க ஒரு வாய்ப்பையும் கொடுத்தார்கள்.
“எல்லோரும் என் பெற்றோரை பைத்தியம் என்று அழைத்தனர். ஆயினும்கூட, அவர்கள் எனக்கு ஆதரவாக நின்றனர்.”
அதே சமயம், நான் தினமும் 26 கி.மீ தூரத்தில் கல்லூரிக்கு (தும்கூரில்) பயணம் செய்தேன். வீடியோ கோச்-பேருந்துகளில் மட்டுமே பயணிக்க முடிவு செய்தேன். கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களின் வசனங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க ஆரம்பித்தேன். நான் சிரமத்தை எதிர்கொண்ட போதெல்லாம், நான் அந்த வாக்கியத்தை எழுதி மறுநாள் ஆங்கில ஆசிரியர்களுடன் கலந்துரையாடி அதைப் புரிந்துகொள்வேன்.
நான் எப்போதும் என் மனதில் ஆங்கில வாக்கியங்களைப் பேசிக் கொண்டே இருப்பேன். நான் 3 மாதங்கள் ஆங்கிலத்துடன் மட்டுமே வாழ்ந்தேன். இது எனக்கு ஆங்கிலத்தில் ஒரு நல்ல நிலையைப் பெற உதவியது.
நான் 12 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, இந்த இரண்டு எண்ணங்கள் என்னை மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்தது.
முதலில் - ஐ.ஏ.எஸ் தேர்ச்சி பெற முடியாவிட்டால் என்ன செய்வது? என்னால் என்னுடைய வாழ்க்கையை சரிசெய்ய முடியுமா? இரண்டாவதாக, இந்த மனிதநேய பாடநெறிகளை நானாக தேர்ந்தெடுத்தேன். மேலும் இதை ஒரு வழக்கமான பாடமாக படிக்க வேண்டுமா? அல்லது நான் வேறு தொழில்முறை படிப்பை படிக்க வேண்டுமா?
பின்னர், எனது கல்லூரியின் முதல்வர் என்.பி. ரவீந்திரநாத் ஜி அனைத்து சந்தேகங்களையும் தீர்த்து எனக்கு நம்பிக்கை அளித்தார். அவர் என்னை இளங்கலை வணிக மேலாண்மை (பிபிஎம்) செய்ய பரிந்துரைத்தார், பின்னர் எம்பிஏ செய்ய வேண்டும் என்று கூறினார்.
நான் எம்பிஏ படித்த பிறகு, ஐஏஎஸ் மாணவர்களுக்கு இலவச போர்டிங், உறைவிடம் மற்றும் பயிற்சி அளிக்க உதவும் சமூக அமைப்பு பற்றி தெரிந்து கொண்டேன். நான் அவர்களைத் தொடர்பு கொண்ட போது, தயங்கி, பின்னர் இணைந்தேன்.
இது மீண்டும் என்னுடைய தீர்மானத்தை வலுப்படுத்தியது. இறுதியில் எனது தீர்மானம் வெற்றிகரமாக முடிந்தது. ஆந்திர மாநில கேடரில் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆனேன்.
ஒரே பாடத்திற்காக பல புத்தகங்களை பயன்படுத்தக்கூடாது என்று பரிந்துரை செய்தேன். இரண்டு புத்தகங்களை ஒரு முறை படிப்பதை விட இரண்டு முறை ஒரு புத்தகத்தைப் படிப்பது நல்லது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.